மாமனாரின் அன்புப் பரிசு! முகநூலில் ரசித்தவை!

 ரொம்ப ஓவரா வளைஞ்சிடுச்சோ?

சைக்கிள் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒரே ஒரு கால் உடைய ஒருவரும் தன் பெயரை போட்டியில் பதிவுசெய்தார். 

அருகில் இருந்தவர்கள் ''வெகு தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும். அப்போது கால் களைத்துப் போகுமே பரவாயில்லையா?'' என்றனர். 

அதற்கு அவர் ''உங்களுக்கு சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கால்களும் வலிக்கும். ஆனால், எனக்கு ஒரு கால்தான் வலிக்கும்'' என்றார் புன்சிரிப்புடன்.

#
தன் பலவீனங்களையும் பலமாக மாற்றத்தெரிந்தவனே வெற்றியாளன்.

ஒரு ஜெர்மானியர் ,ஒரு பாகிஸ்தானியர்,ஒரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது. ஆனால் அதற்கு முன் அவர்கள் வேண்டு வது ஒன்று செய்யப்படும் எனச் சொல்லப்பட்டது.

ஜெர்மானியன் தன் முதுகில் ஒரு தலையணை கட்டச் சொல்லிக் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.
பாகிஸ்தானி தன் முதுகில் இரு தலையணை கட்டச் சொன்னான்;

பதினைந்து அடியில் தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.

மூன்றாவது இந்தியன்.,

ஷேக் சொன்னார்எனக்கு இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்

இந்தியன் கேட்டான்எனக்கு 30க்குப் பதில் 50 கசையடி வேண்டும்

ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார்..”அடுத்தது”…

இந்தப் பாகிஸ்தான்காரரை என் முதுகில் கட்டுங்கள்!”

இது எப்புடி இருக்கு?!

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள். அதில் கடைசி மருமகன் நம்ம நாராயணாசாமி.

அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள். நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.

அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.

"
மாமியாரின் அன்புப் பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.

அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.

"
மாமியாரின் அன்புப் பரிசாக.."

மூன்றாவது நம்ம நாராயணாசாமிக்கும் இந்த சோதனை நடந்தது.

அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. 

மாமியார் கடைசியா பரிதாபமா "'லுக்கு" விட்டப்ப நாராயணாசாமி சொன்னார்,

"
போய்த் தொலை..எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" 

மாமியார் செத்துட்டுது..

மறுநாள், நாராயணாசாமியின் வீட்டு வாசலில் ஒரு பளபளக்கும் வெளிநாட்டு கார் நின்னுச்சு..

"
மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோடு...!                              

நன்றி: ரிலாக்ஸ் ப்ளிஸ் முகநூல் குழுமம்
டிஸ்கி: இன்னும் சற்று நேரத்தில் திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு தரிசனத்திற்கு செல்வதால் நாளை பதிவுலகம் பக்கம் வர இயலாது. புதன் அன்று சந்திப்போம்! உங்களை இம்சிக்க ஷெட்யூல் பதிவு உண்டு. நண்பர்களின் பதிவுகளை புதனன்று வாசித்து கருத்திடுகிறேன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. கடைசி கதையை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு யோசிச்சா ...முக நூல் பதிவா.... இருந்தாலும் முதல் குறிப்பு அருமை.... வாழ்த்துக்கள் சுரேஷ்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2