இன்றைய குழந்தைப் பருவம்!


இன்றைய குழந்தைப் பருவம்!

 பக்கத்துவீட்டு பாப்பாக்களோடு ஓடியாடிய திண்ணைகள்
 ஒளிந்து விளையாடிய மரங்கள் தோப்புக்கள்
 இரவானதும் கதை சொல்லி உறங்க வைக்கும் பாட்டிகள்!
 மாலையிலே உப்பு மூட்டை தூக்கி பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுத்த தாத்தாக்கள்!
 பள்ளிவிட்டதும் கூட வந்து கல்லாங்காய் ஆடிய அக்காக்கள்
 துள்ளி துள்ளி ஆடி மகிழ்ந்த ஆலமரத்து ஊஞ்சல்கள்
 ஆற்றங்கரைகள் ஏரிகள் குளங்கள்! மாடுகள் எதுவும் இல்லாமல்
அடுக்குமாடி குடியிருப்பில் அடுக்கடுக்காய் பாடசுமைகளோடு
கணிணி விளையாட்டும் துடுக்குத்தனம் வளர்க்கும் தொ(ல்)லைக்காட்சி
கார்டூன் கதாநாயகர்களோடும் எப்போது செல்லும் கடற்கரை காற்றோடும்
கரைந்து தொலைந்து போகிறது
இன்றைய குழந்தைப் பருவம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. உண்மை தான்...

  அழகான படங்கள்...

  ReplyDelete
 2. நிச்சயம் இவைஎல்லாம் இழப்புதான் இன்றைய குழந்தைகளுக்கு என்று நாம்தான் கூறுகிறோம். இவற்றை இழந்ததாகக் குழந்தைகள் நினைக்காதது வேதனை

  ReplyDelete
 3. குழந்தைகளுக்கு அவற்றை பற்றி எல்லாம் நாம் சொன்னால்தான் உண்டு! இந்த சூழலிலே வாழ பழகிவிட்டது.

  ReplyDelete
 4. சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள். நிறைய இருக்கிறது!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!