புகைப்பட ஹைக்கூ 17


நெருப்பு குவியலில்
நீந்தின வாத்துக்கள்
மாலை சூரியன்!

வென்னீரானது
தண்ணீர்
மாலைச்சூரியன்!

சூரியன் மூழ்கியதும்
சிவந்தது
குளம்!

வெட்கச் சிவப்பல்ல!
வெம்மைச் சிவப்பு!
மாலைச்சூரியன்!

அணைத்ததும்
குளிர்ந்தது
சூரியன்!

நீரில் கலந்தது
நெருப்பு!
மாலைச்சூரியன்!

குளித்த சூரியனை
பிடித்தன
பறவைகள்!

சிதறிய ஒளியை
சேர்த்துக் கொண்டது
நீர்!

கலந்ததும்
தணிந்தது
சூடு!                                                                                                                                        
 திலகம் வைத்துக் கொண்டது
ஏரி!
மாலைச்சூரியன்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. //சூரியன் மூழ்கியதும்
  சிவந்தது
  குளம்!// வெகுவாய் ரசித்தேன் நண்பா

  ReplyDelete
 2. சுடச்சுட கருத்தளித்த சீனு, தனபாலன் இருவருக்கும் எனது நன்றிகள்!

  ReplyDelete
 3. மாலை சூரியன்! ரசித்துஎழுதிய துளிகள் அருமை ..!

  ReplyDelete
 4. // குளித்த சூரியனை
  பிடித்தன
  பறவைகள்!// - அழகு!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2