தலைவர் ஜோக்ஸ்!
1.மேடையில பேசறதுக்கு சொந்த
சரக்கு இருக்கணும்னு சொன்னா தலைவருக்கு புரிய மாட்டேங்குது!
என்ன சொல்றாரு?
இல்லேன்னா காய்ச்சிக்கலாமான்னு
கேக்கறாரு!
சி. சாமிநாதன்.
2.எங்க தலைவர் தப்பு பண்றவங்க
முகத்திலே முழிக்கவே மாட்டார்!
அப்ப உங்க தலைவர் கண்ணாடியே பார்க்க மாட்டாருன்னு
சொல்லு!
வி.சாரதிடேச்சு
3.வெளிநாட்டுக்கு போன தலைவர்
அவரோட அறியாமையை வெளிப்படுத்திட்டாரா எப்படி?
பைசா கோபுரம் பார்க்க கூப்பீட்டா “ரூபாய் கோபுரம்
எதுவும் இருந்தா சொல்லுங்க.. பார்க்கலாம் என்றாராம்!
டி. ஜெய்சிங்
4.எதிர்கட்சித்தலைவர் தனக்கு
பிடிச்ச ஊர் ஈரோடுன்னு சொன்னதுக்கு நம்ம தலைவர் பதிலடி கொடுத்திட்டாராமே! எப்படி?
தனக்குப் பிடிச்சது கொசுரோடுதான்னு சொல்லிட்டார்!
அ. பேச்சியப்பன்.
5.இது தலைவருக்கு முதல்
விமானப் பயணம்னு எப்படி சொல்றே?
பெல்ட்டை மாட்டுங்கன்னு
சொன்னா “நான் பேண்ட் போட்டுகிட்டு வரலையேன்னு சொல்றாரே!
பர்வீன் யூனுஸ்
6.தலைவருக்கு எப்பவும்
சரக்கு ஞாபகம் தான்!
ஏன் என்னாச்சு?
மின் தட்டுப்பாட்டை நீக்க மின்சாரம் காய்ச்சுவோம்ங்கிறாரே!
எஸ் ரவிச்சந்திரன்.
7.தலைவர் ஏன் கோபமா இருக்காரு!
அவருக்கு டாக்டர் பட்டம்
கொடுத்திட்டு உடனடியா எம்.பி.பி.எஸ் படிக்க சொல்லிட்டாங்களாம்!
எம்.பாஸ்கர்
8.தலைவருக்கு விவரம் பத்தாதுன்னு
எதை வச்சி சொல்றே?
கையெழுத்தை தமிழில் போடுவீங்களா ஆங்கிலத்தில் போடுவீங்களான்னு
கேட்டதுக்கு அறிவியல் கணக்கு சரித்திரம் பூகோளத்தில் எல்லாம் கூட கையெழுத்து போடுவேன்னு சொல்றாரே!
எஸ்.டேனியல்
ஜுலியட்.
9.தலைவர் ஏன் எப்பவும்
காக்கிச்சட்டை போட்டுகிட்டு இருக்காரு?
அப்பத்தானே போலீஸ் ரெய்டு வர்றப்ப செக்யூரிட்டின்னு
சொல்லி தப்பிச்சிக்கலாம்!
பெ. பாண்டியன்.
10தலைவரை ஜெயில் வாழ்க்கை
ரொம்பவே பாதிச்சிட்டதா எப்படி சொல்றே?
சொந்த ஜாமின் கிடைக்கலன்னா
வாடகை ஜாமினுக்காவது ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்றாரே!
அ. பேச்சியப்பன்.
11 எங்கள் தலைவரை ஊழல்
பெருச்சாளி என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறோம்! வேண்டுமானால் ஊழல் சிங்கம் என்று
சொல்லிவிட்டுப் போங்கள்!
அனார்கலி
12.கையில் துப்பாக்கி ஆசிட்பாட்டில்
சைக்கிள் செயின் மிளகாய் தூளோடு தலைவர் காலையிலேயே எங்க கிளம்பிட்டாரு?
வாக்கிங் போகப் போறாரு!
வி.எஸ்.ராமு
13.தலைவர்கிட்ட பொது அறிவு
கேள்வி கேட்டது தப்பா போச்சு!
ஏன்?
நம் நாட்டின் தேசிய விலங்கு
எதுன்னு கேட்டதுக்கு கைவிலங்குன்னு சொல்றாரு!
முகிலன்.
14.தலைவர் கோடிஸ்வரன் நிகழ்ச்சியிலே
கலந்துகிட்டு மானத்தை வாங்கிட்டார்!
அப்படி என்ன பண்ணார்?
நிகழ்ச்சியிலே உங்க அப்பா
பேர் என்னன்னு கேட்டதுக்கு நாலு ஆப்ஷன் கொடுங்கன்னு கேட்டுட்டார்!
க. சரவணகுமார்.
15.நம்ம கட்சி பத்திரிக்கையை
கட்சிக்காரங்களே படிக்கலைன்னு தலைவர் வருத்தப்படறாரே!
பின்னே நம்ம ஆளுங்களுக்குத்தான்
குற்றப்பத்திரிக்கையை படிக்கவே நேரம் சரியா இருக்கே!
பர்வீன்
யூனுஸ்.
16.தலைவர் பெரிய கலாரசிகர்னு
எப்படி சொல்றே?
இல்லாவிட்டால் ‘கலா’வுக்கு
இத்தனை சின்னவீடு கட்டிக் கொடுத்திருக்க மாட்டாரே!
கருணைவள்ளல்.
17.புத்தக கண்காட்சி திறப்பு
விழாவிற்கு தலைவரை கூப்பிட்டது தப்பா போச்சு!
ஏன்?
அங்கிருந்த பகவத் கீதை புத்தகத்தை பார்த்ததும் கோர்ட்
ஞாபகம் வருதுன்னு கோபப்பட்டாரு!
ராம ஆதி நாராயணன்.
18. தலைவர் அப்பாவின்னு
ஏன் சொல்றே?
எல்லா யானைகளுக்கும் ‘மதம்’
பிடிக்கும்னு சொன்னா, ‘நாட்டுல மதச்சார்பற்ற யானைகளே கிடையாதான்னு’ கேட்கிறார்!
பர்வீன்
யூனுஸ்
19.அஞ்சாவதோட படிப்பை முடிச்சிட்டவருங்கிறதை
தலைவர் நிரூபிச்சிட்டார்!
எப்படி சொல்றே?
வாரப்பத்திரிக்கை வாங்கினா
கூட உடனே அதுக்கு அட்டை போட்டு லேபிள் ஒட்டி தன் பெயரை எழுதி வச்சிருக்கிறார்!
வீ.விஷ்ணுகுமார்.
20எக்கச்சக்க பள்ளிக் கூடங்களை
சொந்தமா ஆரம்பிச்சதுலே இருந்து தலைவர் ஓவர படுத்தறார்!
எப்படி?
ஜூன் முதல் தேதியை ஆங்கிலப் புத்தாண்டா அறிவிக்கணும்
அறிக்கை விட்டிருக்காரே!
வீ. விஷ்ணுகுமார்.
நன்றி } தினமலர்- வாரமலர்
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
haaa haaa....
ReplyDeletenalla irukku...!
செம ஜோக்ஸ் .. அருமை
ReplyDeleteஜோக்குகள் அனைத்தும் அருமை...
ReplyDeleteவாய் விட்டுச் சிரித்தேன்!
ReplyDeleteநகைச்சுவை ஒரு ஆரோக்கியமான விஷயம். அனைவரையும் சிரிக்க வைத்ததற்கு நன்றி!
ReplyDelete