தளிர் ஹைக்கூ கவிதைகள்! 20


தளிர் ஹைக்கூ கவிதைகள்!

வாடகை வீட்டில்
குடியேறியது நாகம்
புற்று!

அணிவகுத்தன
வெள்ளை ரோஜாக்கள்
பள்ளிப் பிள்ளைகள்!

அடித்ததும் அழுது
சிரித்தது
தேங்காய்!

விளக்கேற்றியும்
அகலவில்லை அடியில் இருட்டு
அறியாமை!

தண்ணீர் சிதறல்
சுவரில் எழுந்தது
நவீன ஓவியம்!

வெட்கமின்றி
பற்றிக்கொண்டது
செடியில் கொடி!

கடிவாளம் இட்டதும் நின்றது
இரும்புக் குதிரைகள்!
சிக்னல்!

பச்சையானைகள்
மேய்கின்றன
மலைக்குன்றுகள்!

பாலூட்டிக் கொல்லப்பட்டது
பெண் சிசு
எருக்கம்பால்!

அழைக்கும் முன்
விருந்துண்டு சென்றது
கொசு!

மலர்களுக்கு
விசிறிவிட்டன
பட்டாம்பூச்சிகள்!

மேகங்கள் கூடின
பிறந்தது
மழை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அருமை .அத்தனையும் அருமை

  ReplyDelete
 2. கவித...கவித...சூப்பருங்க ...

  ReplyDelete
 3. இரும்புக் குதிரைகள் - உருவகம் அருமை.
  அனைத்துமே கருவூல பெட்டககங்கள் .

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2