ரிலாக்ஸ் ப்ளிஸ்! ஜோக்ஸ்


தலைவர் ஏன் திடீர்னு பொதுக்கூட்டமே
வேண்டாம்னு சொல்றாரு?

ஒரு மனுஷன் எவ்வளவு நாளைக்குத்தான்
தனியா புலம்புவாராம்!

தூங்கி எழந்திரிச்சா ஒரே முதுகு வலி டாக்டர்!

எதுக்கு?

கனவுல வர்ற எல்லா நடிகைகளும் உப்பு
மூட்டை தூக்கச் சொல்றாங்களே!

"நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டீயாமே?" 

"
ஆமா, ஆன்ட்டி..." 

"
முதல்ல என்கிட்டேயில்லே கேட்கணும்." 

"
உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!"

தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்?
தெரியலையா?
 *
*
வேற ஒண்ணும் இல்ல, கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது.

பாட்டிஇந்தா இந்த பலூனை ஊதிக் கொடு…!
-
போடா..வயாசாச்சுஎன்னாலே முடியாது..!
-
அப்பாதான் சொன்னாங்க…’பாட்டி, சின்ன விஷயத்தைக்கூட ஊதி ஊதி பெரிசாக்கிடுவானு…!

ஆசிரியர்: உங்க அப்பா என்ன வேலை செய்கிறார் ?
 *
*
*
மாணவன்: அம்மா சொல்ற எல்லா வேலையும் செய்கிறார்.

ஒரு அப்பா அவரோட 5 வயது மகன் கிட்ட கேட்கிறார்

 
அப்பா: யேன்டா அழுவுர நான் உனக்கு ப்ரெண்டு மாதிரி என் கிட்ட சொல்லுடா

மகன் : அது இல்ல மச்சி ... இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சிட்டா..

டாக்டர் என் கணவர் தூக்கத்துல நடந்து பக்கத்து வீட்ல படுத்துக்கறார்.

இது தூக்கத்துல நடக்கற வியாதி இல்லைம்மா.ஏக்கத்துல நடக்கறது
ஸ்டேஷனுக்குள்ளே ஒரு பசு மாடு புகுந்துடுச்சு!

அப்புறம்…?

அதுகிட்டேயும் கறந்துட்டாங்க!

கபாலி கொள்ளைசடிச்சிட்டுப் போனத என் கண்ணால்
பார்த்தேன் சார்!

ச்சே... கபாலி இவ்வளவு அசால்ட்டாவா இருப்பான்? யோவ் ஏட்டு இந்தாளை பிடிச்சி உள்ளே போடு!

நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?

டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..

மகன்: ஏம்பா என்னை அடிச்சீங்க?

அப்பா: உன்னை விட வயசுல குறைந்த தம்பியை நீ ஏன்டா அடிச்சே?

மகன்: அப்ப நீங்களும் அதே தப்பைத்தான் பண்ணியிருக்கீங்க!!

கணவன்:என்ன மாலா,இன்று நீயே சமையல் செய்து கொள்வதாக சொல்லி விட்டாயே. ஏன்,எனது சமையல் நன்றாக இல்லையா?

மனைவி:நீங்கள் பாட்டுக்கு நல்லா சமைச்சுப் போட்டு விடுகிறீர்கள்.வந்த விருந்தாளிகளும் உங்கள் சமையலை ஆஹா,ஓஹோ ன்னு பாராட்டிக்கிட்டே இங்கிருந்து போக மாட்டேன் என்கிறார்களே!

கணவன்:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா?

மனைவி:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?

கணவன்:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!

நாராயணசாமி ஒரு பேஸ்புக் போராளி. நிறைய நண்பர்கள் அவருக்கு உண்டு.

ஒரு நாள் சாயங்காலம் அவசரமாக வீட்டுக்கு வந்த நாராயணசாமி மனைவியிடம், 

"
இன்னைக்கு இரவு என் நண்பன் ஒருவனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றார்.

அதற்கு அவரது மனைவி அவசரமாக,

"
என்ன விளையாடுறீங்களா? அறிவில்லை உங்களுக்கு...வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல...ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல... அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்பிட்டீங்க?" 

"
இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்பிட்டேன்" 

"
தெரிஞ்சும் எதுக்கு கூப்பிடீங்க?" 

நாராயணசாமி சொன்னார்,

"
இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."


தலைவர் பேசற இடமெல்லாம் கூட்டமா இருக்காமே, அப்படியா?

ஆமா, அவர் தி.நகர்லயும், மெரினா பிச்சுலேயும், மூர்மார்க்கெட்லேயும் பேசினா கூட்டம் இல்லாம என்ன இருக்கும்…!

நீங்க ஒண்டியா எல்லா வேலையும் பாரக்குறீங்களே
ஒரு நர்ஸ் வச்சுக்க கூடாதா?

அதுக்கு என் மனைவி ஒத்துக்க மாட்டாங்க…!

ஏன் டாக்டர்?

ஏற்கனவே இங்கே நர்ஸா இருந்தவங்கதான் அவுங்க                நன்றி: ரிலாக்ஸ் ப்ளீஸ் முகநூல் பக்கம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2