வாய்க்கொழுப்பால் கெட்ட வடிவேலு!
ஒரு காலத்தில் வடிவேலு இல்லாமல் சினிமா இல்லை என்ற நிலை என்றிருந்தது. ரஜினி
கூட வடிவேலுவை தன் படத்தில் சேர்க்க ஆசைப்பட்டார். டீவி நிகழ்ச்சிகளிலும் வடிவேலு தலைகாட்டாத
நாள் இல்லை எனலாம். எந்த சேனலை திருப்பினாலும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் நம்மை
சிரிக்க வைக்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் நீக்கமற நிறைந்து போயிருந்தார் வடிவேலு.
ஆனால் தமிழ் சினிமா உலகம் எத்தனை
பெரியவரையும் அவரது ஆணவப் போக்கால் அழித்து இருக்கிறது. தீய குணங்களால் விரட்டி இருக்கிறது
இந்த வரலாறை வடிவேலு படித்து அறியாவிட்டாலும் அனுபவ அறிவால் அறிந்து கொண்டிருக்கலாம்.
சினிமாவில் நண்பர்களும் இல்லை! எதிரிகளும் இல்லை! என்ற அளவில் அவரது நடவடிக்கை இருந்திருக்க
வேண்டும். ஆனால் விதி அவரை விட வில்லை!
வீணாக விஜயகாந்துடன் பகைத்துக் கொண்டார்.
அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து அம்மாவுடன் விஜயகாந்த் கூட்டுச் சேர வடிவேலுவை கெட்டியாக
பிடித்துக் கொண்டது ஏழரை சனி! திமுக வில் இணைந்து மேடைக்கு மேடை விஜயகாந்தை இழிவுப்படுத்தி
பேசி ரசிகர்களின் கைதட்டலை சம்பாதித்து கொண்டார். ஆனால் இந்த கைத்தட்டல்கள் எல்லாம்
ஓட்டாக மாறும் என்று நினைத்தவரின் வாயில் மண்தான் விழுந்தது. அமோகமாக அதிமுக ஆட்சி
அமைக்க வடிவேலுவிற்கு இறங்குமுகம் ஆகிப் போனது.
வடிவேலுவை வைத்து யாரும் படம் தயாரிக்க
முன் வரவில்லை! ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ள விரும்பாததே இதற்கு காரணம். திமுகவிலும்
வடிவேலுவை யாரும் சீண்ட வில்லை! திமுக உறவினர்கள் எடுத்த படத்தில் கூட சந்தானத்தை சேர்த்து
துட்டு பார்த்தார்களே தவிர வடிவேலுவை சேர்த்துக்கொள்ள வில்லை! படமின்றி வீட்டில் முடங்கினார்
வடிவேலு. குஷ்புவிற்காவது கட்சியில் பதவிகள் கொடுத்து கவுரவித்தார்கள் கழக கண்மணிகள்.
ஆனால் வடிவேலு இதற்கும் லாயக்கில்லை என்று ஒதுக்கி விட்டார்கள்.
இந்த நிலையில் சில படங்கள் வடிவேலுவை
வைத்து துவங்குவதாக செய்தி வரும்! ஆனால் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும். படத்தயாரிப்பு
துவங்காது. ஷங்கரின் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த படம் இம்சை
அரசன் 23ம் புலிகேசி! இது இவரை ஹீரோ ரேஞ்சிற்கு உயர்த்தி இமேஜைக் கூட்டியது. அவர் அந்த
படத்தினை இரண்டாம் பாகமாக தயாரிக்கப் போவதாகவும் தெனாலி ராமன் என்று பெயர் வைத்து வடிவேலுவை
வைத்து எடுக்கப்போவதாகவும் கூறினார்.
வடிவேலுவும் இதை ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தினார்.
ஆனால் இப்போது இந்த படமும் இல்லை! கைவிடப்படுவதாக செய்திகள் கசிகின்றன. என்னவென்று
விசாரித்ததில் இதிலும் வடிவேலின் தலையீடுகள் தான் காரணமாம். படத்தின் ஸ்கிரிப்டில்
தலையிட்டு இயக்குனருக்கு தொல்லைகள் தந்த வடிவேலு படத்தில் எதிர்கட்சி தலைவர் என்று
ஒரு கதாபாத்திரம் சேர்க்க வேண்டும் என்கிறாராம். அந்த பாத்திரத்தை வடிவேலு நக்கல் செய்து
கலாய்க்க வேண்டுமாம். இதென்ன வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்ட கதையாக அல்லவா
இருக்கிறது என்று சிம்புதேவன் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டாராம்.
வடிவேலுவிடம் நைஸாக சொல்லிப்பார்த்திருக்கிறார்!
ஸ்கிரிப்டில் தலையிட வேண்டாம் என்று வைகைப் புயல் கேட்பதாக இல்லையாம்! எதிர்கட்சி தலைவர்
பாத்திரம் அமைத்து தாக்க வேண்டும் என்று ஒரே பிடிவாதம் செய்தாராம். கல்லை குத்துவானேன்!
கையை நோவானேன்! என்று சிம்பு தேவன் படத்தை நிறுத்தி விட்டாராம். மீண்டும் படமின்றி
இருக்கிறார் வடிவேலு.
இந்த சமயத்தில் இயக்குனர் கே.எஸ்
ரவிகுமார் வடிவேலுவை வைத்து ஆப்பிரிக்காவில் வடிவேலு என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார்.
ஆனால் அந்த படத்தினை தயாரிக்கவும் எந்த தயாரிப்பாளர்களும் முன் வரவில்லையாம்! அந்த
படமும் அறிவிப்போடு நின்று போகிறது.
ஆடிக் காத்தில் அம்மியே பறந்து போகும்
என்று சும்மாவா சொன்னார்கள்!
அளவாக பேச வேண்டும் என்பதால் தான் ஒரே ஒரு நாக்குடன் மனிதன் படைக்கப்பட்டான் என கூறக் கேட்டதுண்டு..
ReplyDeleteUnmai nanbaray.,
ReplyDeleteஆப்பிரிக்காவில் வடிவேலு (க்கு) ஆப்பு தானா...?
ReplyDeleteபாவமாத்தான் இருக்கு... ...ம்...
நல்ல நடிகர்.வாய்தான் அவருக்கு பலமாக இருந்தது. அதுவே பலவீனமாகவும் மாறிவிட்டது.சினிமாவைப் பொருத்தவரை ஒரு முறை விழுந்து விட்டால் எழுவது கடினம்.
ReplyDeleteபலரையும் சிரிக்க வைத்தவர் இன்று அழுகின்றார் இதுதான்
ReplyDeleteகாலம் அளவாய் பேசி நலமாய் வாழ்வோம் வடிவேல்
கடேசியாக் கற்றுக் கொடுத்த பாடம் :)
குத்தாடிகளுக்கு இது ஒரு பொழப்பு அவலவுதான் .
ReplyDeletegood message continue, best wishes
ReplyDelete