புகைப்பட ஹைக்கூ 18


புகைப்பட ஹைக்கூ 18

பச்சை சேலையில்
வெள்ளை ரோஜாக்கள்
நாரைகள்!

வெள்ளை படைகள் புகுந்தும்
விரட்டவில்லை வயல்!
நாரைகள்!

சொட்டுநீலம் போடாமலே
ஜொலித்தன
நாரைகள்!

அரசியல் கூட்டமல்ல
ஆகாரத்தேடுதல்
நாரைகள்!

குடும்பச்சுற்றுலா
கொண்டாடி மகிழ்ந்தன
நாரைகள்

வெள்ளையர்கள்
கொள்ளையடித்தனர் மனதை
நாரைகள்!

விருந்தினர் வருகை!
களித்தது நிலம்!
நாரைகள்!

நிலத்தில் பூத்தன
வெண் தாமரைகள்!
நாரைகள்!

 பச்சைவயலுக்கு
இச்சைப்பட்டன
நாரைகள்!

சுற்றத்துடன்
சுகமான குளியல் போட்டன
நாரைகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. மனதில் சந்தோசம் சிறகடித்தன...

  உங்கள் தளம் திறக்க வெகு நேரம் ஆகிறது... காரணம் waiting for :

  tamil.daily.lb.com

  இதில் இணைந்திருந்தால் விலகி விடவும்... ஏனென்றால் இந்த தளம் (திரட்டி) இப்போது இல்லை... இந்த தளத்தின் logo அல்லது vote button இருந்தால் எடுத்து விடவும்...

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. படத்திற்கு ஏற்றாற்போல் ஹைக்கூ கவிதையும் அமைந்துவிட்டது அண்ணா

   Delete
 3. வெண்மையைப் போற்றும் இனிய நற் கைக்கூக்கள் வாழ்த்துக்கள் சகோ
  மேலும் மேலும் சிறப்பாகத் தொடரட்டும் ...

  ReplyDelete
 4. படமும் கவிதைகளும் அருமை....சுரேஷ்...

  ReplyDelete
 5. பச்சைவயலுக்கு
  இச்சைப்பட்டன
  நாரைகள்!//

  ஆஹா அருமை...!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2