அஷ்டமி நாயகன் பைரவர்!

அஷ்டமி நாயகர் பைரவர்!

   எல்லா சிவ ஆலயங்களிலும் வடக்கு பாகத்தில் பைரவர் சன்னதி இருக்கும். இங்கு நாய் வாகனத்தில் நிர்வாண கோலத்தில் பைரவர் எழுந்தருளி இருப்பார். இவரை க்ஷேத்திர பாலகர் என்று அழைப்பார்கள். இன்றைக்கு பெரும் கம்பெனிகளை  காக்க வாட்ச் மேன்களை நியமிப்பது போல ஆலயங்களின் காவல்  தெய்வம்  பைரவப் பெருமான்.
      இவரை  வணங்காது உள்ளே செல்ல கூடாது. அதே சமயம் வரும் போதும் வணங்கி வர வேண்டும். அந்த காலத்தில் பூஜை செய்து முடித்தபின் கோயிலை பூட்டி சாவியை பைரவரிடம் சமர்ப்பிப்பார்கள். மறுநாள் காலை வந்து பைரவருக்கு பூஜைகள் செய்து சாவியை எடுத்துச் சென்று கோயிலை திறப்பார்கள்.
    ஆதிகாலம் முதலே பைரவர் வழிபாடு சிறப்பாக நம் முன்னோர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை பல்வேறு தல புராணங்களும் கோயில் கல்வெட்டுக்களும்  தெரிவிக்கின்றன. "கோபுரத்தின் வடக்கே க்ஷேத்திரபாலகர்  ஆலயம் அமைக்க வேண்டும் என்று காரணாகமம் கூறுகிறது.
   பைரவர் சிவ அம்சம். இதற்கு 64 மூர்த்த பேதங்கள் உண்டு என்றாலும் சிறப்பாக எட்டு பைரவ மூர்த்தங்களை கூறுகின்றனர்.
   1 அசிதாங்க பைரவர்.
   2 உரு பைரவர்
  3. சண்ட பைரவர்
4 குரோதன பைரவர்
5. உன்மத்த பைரவர்
6. கபால பைரவர்
7. பீஷண பைரவர்
8. சம்ஹார பைரவர்.
   மேற்கண்ட எட்டு பைரவத் திருமேனிகளை கொண்டு  தனித்த ஆலயமாக சீர்காழி பிரம்ம புரீஸ்வரர் ஆலய தென் பிரகாரத்தில் உள்ளது. இவை எண் திசை மாடங்களில் சிலை ரூபமாக உள்ளன.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய கிழக்கு கோபுர உட்பகுதியில் மேற்கு திசை நோக்கி உள்ள கால பைரவர் ஆலய முக மண்டபத்தில் எட்டு பைரவர் சிற்பங்கள் உள்ளன.
   தொண்டை நாட்டில் சேண்பாக்கம் என்னும் ஊரில் மலைமீது பைரவருக்கு தனிக்கோயில் உள்ளது.
பிள்ளையார் பட்டிக்கு அருகில் உள்ள வயிரவன் பட்டி என்ற ஊரிலும் பைரவர் மிகவும் விசேஷமாக அமைந்துள்ளார்.
  பைரவரின் திசை ஈசானம் அதாவது வடகிழக்கு. சிவபெருமானின் ஐந்து மகன்களில் பைரவரும் ஒருவர். கணபதி, முருகர்,வீரபத்திரர், ஐயனார், மற்ற நால்வர். 
   பைரவர்மூர்த்தியினை பிரம்ம சிரச்சேதர், உக்ர பைரவர், க்ஷேத்திர பாலகர், வைரவர், வடுகம், ஆபத்துதாரணர், சட்டை நாதர், போன்ற பெயர்களில் அழைப்பர்.பைரவரின் மனைவி பைரவி. இது லலிதா சகஸ்ர நாமத்தில் சிறப்பிக்கப்படுகிறது.

சனீஸ்வரனால் ஏற்படும் தொல்லைகள் நீங்க:
    சூரியனின் மகனான சனீஸ்வரன் தன்னுடைய அண்ணன் யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கௌரவக்குறைவை அடைந்தார். அவருடைய தாய் சாயா தேவியின் அறிவுறைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளாள் நவகிரகங்களில் ஒருவர் ஆனார்.
    பைரவருக்கு சனிக்கிழமைகளில்  அர்ச்சனை செய்தால் சனிஸ்வரர் மகிழ்வடைந்து ஏழரைநாட்டு சனி, அஷ்டம சனி  முதலிய சனிக்கிரஹ உபாதைகள் முழுவதும் நீங்கி நல்ல பலன்கள் ஏற்படும்.
 ஞாயிற்றுகிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு  அர்ச்சனை அபிஷேகம் ருத்ர அபிஷெகம் முதலியன செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறும்.
வழக்குகளில் வெற்றி பெற பைரவ சஹஸ்ர நாமத்தை ஒன்பது முறை அர்ச்சனை செய்து  தயிர் சாதம் தேங்காய், வில்வபழம், தேன், சேமியா பாயசம் சர்க்கரைபொங்கல் போன்றவை படைத்து வழிபாடு செய்வதால் ஜெயம் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் பெற  ஆறு தேய்பிறை  அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேகம் செய்து சிவப்பு அரளி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட பலன் கிடைக்கும்.
வறுமை நீங்க வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் வில்வ இலைகளாலும் வாசனை மலர்களாலும் அர்ச்சனை செய்து வர வறுமை விலகும்.
இழந்த பொருளை பெற பைரவரின் முன் மிளகை சிறு மூட்டை கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட இழந்த பொருள் கிடைக்கும்.
பைரவருக்கு உகந்த நாள் அஷ்டமி, ஞாயிறு, வெள்ளி.
உகந்த எண்ணெய், நல்லெண்ணை, இலுப்ப எண்ணெய்.
உகந்த படையல், தயிர்சாதம், சேமியா பாயசம், வடைமாலை.
பைரவர் வாசனை திரவியங்களில்  மகிழ்வு கொள்பவர், ஜவ்வாது, விபூதி, சந்தனம், புணுகு பன்னீர் போன்ற அபிஷேகப் பிரியர்.
சிவப்புமலர்கள், முல்லை மலர்கள், வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் நல்ல பலன்கள் கிட்டும்.

அஷ்டமி நன்னாளில் பைரவர் வழிபாடு செய்து அருள் பெறுவோமாக!
   

பைரவர் பெருமை என்ற நூலில் இருந்து தொகுப்பு.
படங்கள் உதவி: கூகுள் இமேஜ்.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்குவிக்கலாமே!

Comments

  1. பைரவர் பற்றிய தகவல்களுக்கு நன்றி சுரேஷ், தொடருங்கள்.

    என்னுடைய வலைப்பூவில் இன்று பிரான்ஸ் பயணக்கட்டுரை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நண்பா!

      Delete
  2. சிறப்பான பகிர்வு...

    தகவல்கள் அருமை... நன்றி...

    என் தளத்தில் : கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! அவசியம் வருகிறேன்!

      Delete
  3. BEST INFORMATION. PLEASE CONTINUE. sridhar.

    ReplyDelete
  4. ஆன்மிக தகவல்களை அருமையான படங்களுடன் தொகுத்தளித்திருக்கிறீர்கள்!
    பகிர்வு நன்றி!

    ReplyDelete
  5. அருமையான படங்களுடன் நல்ல பதிவு.வாழ்த்துக்கள் சொந்தமே!

    ReplyDelete
  6. இன்றைக்கு பெரும் கம்பெனிகளை காக்க வாட்ச் மேன்களை நியமிப்பது போல ஆலயங்களின் காவல் தெய்வம் பைரவப் பெருமான்.மன்னிக்கவும்... தவறான தகவல்! மற்றபடி கட்டுரை அருமை!

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிக்காட்ட மன்னிப்பு எதற்கு நண்பா! பைரவர் கோவிலின் பாதுகாப்பு தெய்வம் என்ற பொருள்பட கூறினேன்! இன்னும் ஆழ்ந்து வாசித்து திருத்திக் கொள்கிறேன்! நன்றி!

      Delete


  7. படங்கள் அருமை. திருமணத்தடை, குழந்தைபாக்கியம், வழக்குகளில் வெற்றி....பயனுள்ள தகவல்.

    தொடருங்கள்.

    ReplyDelete
  8. நிறைய தெரியாத தகவல்கள். நன்றி, நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  9. கோவிலுக்கு உள்ளே செல்லும்பொழுதும் பைரவரை வணங்கிட வேண்டும் என்பது
    நான் அறியும் புதிய தகவல்.
    நன்றி.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  10. கலக்கலான படங்களுடன் அருமையான பதிவு!

    ReplyDelete
  11. சிறப்பான பகிர்வு...

    தகவல்கள் நன்றிகள் அண்ணா

    ReplyDelete
  12. பைரவர் பற்றி அறிந்தது குறைவு.ஆனால் ஊரில் ஒவ்வொரு இடுக்குகளிலும் பைரவரைக் காணலாம்.நன்றி !

    ReplyDelete
    Replies
    1. நன்றி நல்ல நகைச்சுவையான பின்னூட்டம்!

      Delete
  13. பைரவருக்கு இத்தனை சிறப்புக்களா?
    அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!