பெற்ற தாயை சுடுகாட்டில் விட்டுச் சென்ற இளைஞர்!

விஜயநகரம் (ஆந்திரா): மனைவியின் பேச்சைக் கேட்டு, பெற்ற தாயை, அவரது 70 வயதையும் பொருட்படுத்தாமல் நைசாக ஏமாற்றிப் பேசி சுடுகாட்டில் விட்டு விட்டுப் போய் விட்டார் ஒரு ஆந்திர இளைஞர். நெஞ்சப் பதற வைக்கும் இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில்தான் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வயது 70 ஆகிறது. இவருக்கு ஒரே மகன், பெயர் சீனு. சீனுவுக்குத் திருமணமாகி விட்டது, மனைவி, குழந்தைகள் உள்ளனர். மகனுடன் வசித்து வந்தார் இந்த மூதாட்டி.
தனது மாமியாரை சீனுவின் மனைவி மதிப்பதில்லையாம். எப்போது பார்த்தாலும் சண்டை பிடித்தபடி இருப்பாராம். மேலும், இந்தக் கிழவியை எங்காவது போய் விட்டு விட்டு வாங்க என்றும் சீனுவுன் சண்டை போட்டபடி இருப்பாராம்.
மனைவியா, தாயா என்று குழம்பிப் போன சீனு கடைசியில் மனைவியின் பேச்சுக்கு மதி மயங்கி, தாயை எங்காவது கொண்டு போய் விட்டு விட முடிவு செய்தார். இதையடுத்து வெளியில் போய் விட்டு வரலாம் என்று கூறி தாயாரை அழைத்துக் கொண்டு கிளம்பினார். நேராக விசாகப்பட்டனம் வந்தார். அங்கிருந்து ஆட்டோவில் ஸ்ரீராம் நகர் என்ற இடத்திற்குப் போனார். அங்குள்ள சுடுகாட்டுக்கு வந்த அவர் அங்கு தாயாரை உட்கார வைத்து விட்டு சிறிது நேரத்தில் சாப்பிட ஏதாவது வாங்கி வருகிறேன் என்று கூறிச் சென்றார். பிறகு வண்டி ஏறி தனது ஊருக்குத் திரும்பினார்.
மகன் சாப்பாடு வாங்கி வருவான் என்று பரிதாபமாக காத்திருந்த அந்த மூதாட்டி, நீண்ட நேரமாகியும் மகன் வராததால் பரிதவித்துப் போனார். இப்படியே கிட்டத்தட்ட 10 நாட்களாகி விட்டது. சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் சுடுகாட்டிலேயே படுத்துக் கிடந்துள்ளார் இந்த பரிதாபத் தாய்.
இனியும் மகன் வர மாட்டான் என்று அவருக்குத் தெரிந்து போனதால் அப்படியே மெதுவாக எழுந்து தட்டுத் தடுமாறி நடந்து சென்று ஊருக்குப் போனார். ஆனால் பசி மயக்கம் தாங்க முடியாததால் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
பதறிப் போன ஊர் மக்கள் அவருக்கு சாப்பாடு கொடுத்து ஆறுதல் கூறி விசாரித்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் அந்த மூதாட்டியின் மகனைக் கண்டுபிடித்து அவரிடம் தாயாரை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த மகனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அது பொருத்தமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்...

டிஸ்கி} இது போன்ற கொடுமைகள் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளன. இவர்களை என்ன செய்து திருத்துவது?இவனெல்லாம் ஒரு மனிதனா?மனைவிக்கு பயந்தவன் தாயை சுடுகாட்டில் தான் விட வேண்டுமா? நாளை இவனை இவன் மகன் எங்கு விடுவான்? இந்த மகனை பெற்றதற்கு அந்த தாய் வருந்தவே வேண்டும். (படத்தில் உள்ள மூதாட்டி அல்ல! இது நான் கூகுள் இமேஜில் சுட்டது.)

தகவல் உதவி } தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

 1. இவன் எல்லாம் மனிதனே கிடையாது...

  ReplyDelete
 2. இந்த மாதிரி ஆட்களை பட்டினிபோட்டே கொள்ளவேண்டும்.

  ReplyDelete
 3. இதே போல் ஒரு தகவல் கேள்விப்பட்டேன் .தந்தையை ஏமாற்றி சொத்தை விற்றுவிட்டு விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்றதாக. இன்று வரை அதை கதை என மனதுள் சமாதானம் செய்து கொள்வேன். இந்தக் கட்டுரை படிக்கும் போது அதுவும் உண்மையாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என எண்ணும் போது மனிதம் செத்து காரியமும் நடத்திவிட்டது போல் தோன்றுகிறது

  ReplyDelete
 4. காலம் கலிகாலம் இல்லை இது...பலிகாலம் மக்கா பலிகாலம்.....நெஞ்சம் பதறுதே....!

  ReplyDelete
 5. கொடுமை. என்ன சொல்லி திட்டுவது என தெரிய வில்லை

  ReplyDelete
 6. படிக்கவே மனம் பதறுது..பொதுவா..இப்படி மனைவி சொல்லி தாயை தவிர்க்கும் கணவன் இதையெல்லாம், சினிமா கதைகளில் பார்கும்போதே ஏற்காத மனம்..நம்மைச்சுற்றி நடப்பதையறிய சொல்வதற்கு வார்த்தையில்லை...இதுதான் கலிகாலமோ...??

  ReplyDelete
 7. என்ன கொடுமை.இப்பிடியுமா மனிதர்கள் !

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2