நினைவுகள்!


நினைவுகள்!


நடக்கும்போது கூட வரும்
முழுநிலவு போன்று
உன் நினைவுகள் என்னுடன்
வருகின்றன.

வெப்பத்தில்வாடும் பயிர்களை
திடீர் மழை
குளிர்விப்பதுபோல நீ
நுழைந்தால் குளிர்கிறது
மனசு.

ஜன்னலோர சீட்டில்
பஸ்ஸில் பயணிக்கும் போது
முகம் வருடும் தென்றலாய்
நீ!

தூரத்தில் கேட்கும்
பறவைகளின்சப்தத்தில்
உன் கொலுசொலி
கேட்கின்றேன்!

யாரோ கடந்து செல்கையில்
வீசும் சந்தனவாசம்
உன் அருகாமையை
நினைவு படுத்துகிறது.

என் வீட்டு ஒற்றைரோஜா
பூத்து உன்
கூந்தலை ஞாபகப்படுத்துகிறது!
 
கடலலைகள் போல
மன அலைகள் எழும்பி
உன்னை தேடுகிறது!

என் அன்பே! நீ விலகி
சென்றாலும் விலக மறுக்கின்றன
உன் நினைவுகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. // ஜன்னலோர சீட்டில்
  பஸ்ஸில் பயணிக்கும் போது
  முகம் வருடும் தென்றலாய்
  நீ!
  //
  அழகான வரிகள்

  ReplyDelete
 2. அட நல்லா இருக்கே

  ReplyDelete
 3. நல்ல கவிதை சகோ!.............தொடருங்கள்

  என் பதிவில் இன்று "வேண்டாம் தூக்கு கயிறு"...

  ReplyDelete
 4. யாரோ கடந்து செல்கையில்
  வீசும் சந்தனவாசம்
  உன் அருகாமையை
  நினைவு படுத்துகிறது.

  என் வீட்டு ஒற்றைரோஜா
  பூத்து உன்
  கூந்தலை ஞாபகப்படுத்துகிறது!

  அருமையான வரிகள் பொதித்த
  அழகிய கவிதை !..தொடர வாழ்த்துக்கள்
  சகோ .

  ReplyDelete
 5. நல்லாவே கலக்குறீங்களே

  ReplyDelete
 6. கல்லூரி நாட்கள்..."ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே!"

  ReplyDelete
 7. நல்ல வரிகள்... பாராட்டுக்கள்... நன்றி...

  ReplyDelete

 8. யாரோ கடந்து செல்கையில்
  வீசும் சந்தனவாசம்
  உன் அருகாமையை
  நினைவு படுத்துகிறது.

  காதலின் வரிகள் அருமை.

  ReplyDelete
 9. காதல் வந்துவிட்டால் எங்கும் எதிலும் அதே முகம்தான்....அழகான அவள் நினைவுகளை எழுத்தில் கொண்டு வந்தீர்கள்.அருமை !

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?