தன்னம்பிக்கையால் கொத்தனாராகி சாதிக்கும் மீனவப்பெண்
கீழக்கரை: தாயை இழந்து, கணவரால் கைவிடப்பட்டு, உடன் பிறந்தவர்கள்
தனிக்குடித்தனம் சென்ற நிலையில் வயதான தந்தை மற்றும் உடல் நலம் பாதித்த
தங்கையை காப்பாற்ற, தளராத தன்னம்பிக்கையுடன் கட்டடத் தொழிலாளியாக களம்
இறங்கிய மீனவப்பெண், ஆண்களுக்கு சவாலாக கொத்தனராக முத்திரை பதித்து
வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி முத்தரையர் நகரில் வசிக்கும் மீனவர்
உமையனின் இரண்டாவது மகள் செல்லம்மாள், 38. மூத்த மகளும், மகனும் திருமணமாகி
தனிக்குடித்தனம் சென்ற பின்னர் குடும்பம் தத்தளித்தது. வயதான
தந்தையையும்,உடல் நலமில்லாத தங்கை செல்வராணியை, 30, காப்பாற்ற செல்லம்மாள்,
கட்டட வேலைக்கு சென்றார். கொத்தனார் செய்யும் பணிகளை உன்னிப்பாக கவனித்து
வந்தார். சில மாதங்களில் கொத்தனாரிடம், தனது மேஸ்திரி ஆர்வத்தை
வெளிப்படுத்தினார். உணவு இடைவேளையில் சிமென்ட் பூச்சு பணி வாய்ப்பு
கிடைத்தது. படிப்படியாக சிமென்ட் கலவைகளின் அளவை அறிந்து,அடுத்த மூன்று
ஆண்டுகளில் கட்டட மேஸ்திரியாக தன்னை உயர்த்திக் கெண்டார். கான்ட்ராக்ட்
எடுத்து வீடு கட்டி கொடுக்கும் நிலைக்கு தயாரானார். தங்களது நிறுவன
சிமென்ட், கம்பிகளை உபயோகிக்கும்படி வினியோகஸ்தர்கள் இவரை நோக்கி
படையெடுத்தனர். 15 ஆண்டுகளுக்கு முன் ஆறு ரூபாய் கூலியில் தொடங்கிய
வாழ்க்கை, இவரது இவரது தன்னம்பிக்கையால் கை நிறைய சம்பாதிக்கும் நிலைக்கு
மாறியுள்ளது.
அவர் கூறியதாவது: திருமணமாகி விவாகரத்து பெற்றும், மன உறுதியை
மட்டும் கைவிடவே இல்லை. சாதிக்க வேண்டும் என்ற வெறி, வெற்றியை தேடி தந்தது.
குடும்பத்தினர் அனைவரும் கடலை நம்பி வாழ்ந்தாலும், நான் மட்டும், கட்டட
வேலைக்கு சென்றேன். தற்போது எனது தலைமையில் 12 சித்தாள், ஒரு மண்வெட்டியாள்
உள்ளனர். வசதி படைத்தவர்கள் இன்ஜினியரிடம், வீட்டின் வரைபடம் வாங்கி
வந்து, வீடு கட்டச் சொல்வர். பலர் நிலத்தின் அளவைக் கூறி வீட்டிற்கு
தேவையான வசதிகளை என்னிடம் தெரிவித்து விடுவர். அவர்கள் விரும்பும் வகையில்
வரைபடம் தயாரித்து, இதுவரை 20க்கும் அதிகமான வீடுகளை கட்டி முடித்துள்ளேன்.
கேலி பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டனர். ஏற்றுக்கொண்ட பணியை
சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணி புரிந்து
வருகிறேன், என்றார்.
நன்றி : தினமலர்
டிஸ்கி} இது போன்று பெண்கள் துணிவுடன் இறங்கினால் கேலி பேசும் உலகம் அடங்கிப் போகும். துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கை மிக்க அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்!
பாராட்டப்பட வேண்டிய விஷயம்... நன்றி…
ReplyDeleteவருகைக்கும்கருத்துக்கும் நன்றி நண்பரே!
Deleteவாழ்த்துவோம் அந்த பெண்ணை!
ReplyDeleteபாராட்ட வேண்டிய விடயம்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரிக்கு
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteதன்னிம்பிக்கை கொண்ட பதிவு.பாராட்டலாம் அந்தப் பெண்மணியை.வறுமையும்,துன்பமும் சிலரை வாட வைத்துவிடும்.சிலரைத் துணிவோடு எழும்பி மலர வைத்துவிடும் !
ReplyDeleteவசதி படைத்தவர்கள் இன்ஜினியரிடம், வீட்டின் வரைபடம் வாங்கி வந்து, வீடு கட்டச் சொல்வர். பலர் நிலத்தின் அளவைக் கூறி வீட்டிற்கு தேவையான வசதிகளை என்னிடம் தெரிவித்து விடுவர். அவர்கள் விரும்பும் வகையில் வரைபடம் தயாரித்து, இதுவரை 20க்கும் அதிகமான வீடுகளை கட்டி முடித்துள்ளேன். கேலி பேசியவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டனர். ஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணி புரிந்து வருகிறேன், என்றார்
ReplyDeleteஅருமையான பகிர்வு!..இந்தப் பெண்மணியின் பேராற்றலைக் கண்டு வியந்து போனேன் .துணிவே துணையென நம்பி வெற்றிநடை போடும் இவரது ஆற்றல் பாராட்டிற்குரியது .வாழ்க வளமுடன் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .
நீண்டநாளுக்குப்பின் வலைத்தளம் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!சகோதரி!
Deleteஆஹா அருமையான தன்னம்பிக்கை பதிவு......பெண்கள் துணிந்துவிட்டால் சாதித்து விடுகிறார்கள் என்பதற்கும் இந்த பெண்ணும் ஓர் உதாரணம்...!
ReplyDelete