கடல் நீரைக்
குடி நீராக்கியது
மழை!
(இந்த ஹைக்கூ தமிழ் தோட்டம் ஜீன்மாத ஹைக்கூ போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது)
மேகப் பூக்கள் பூத்ததும்
மணத்தது மண்!
மழைத்தூறல்!
விதைத்தவன் சும்மா இருக்க
அறுவடை செய்தது பூமி!
மழை!
குளிரெடுத்த மேகத்தால்
குளிர்ந்து போன பூமி!
மழை!
இறங்கி வராவிட்டால்
ஏறிவிடுகிறது விலைவாசி!
மழை!
சவலையான பூமி
பெய்யவில்லை
மழை!
தொடர்மழை!
புதிதாக குடிபுகுந்தது
ஈரம்!
கறுப்பான வானம்
கழுவித் தோற்றது
மழை!
வறவேற்பு
வசையாக மாறியது!
தொடர்மழை!
மேகங்கள் கூடின
பிறந்தது
மழை!
விரட்டப்பட்டது
வெம்மை!
மழை!
குளத்தில்
கோலம் போட்டது
மழைத்துளி!
கறுத்தபெண்
அழுகிறாள்
மழை!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்குவிக்கலாமே! நன்றி!
அழகிய வரிகள்...
ReplyDeleteபரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்...
நன்றி…
வருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி தனபாலன்! உங்களிந்தொடர் வருகை புது உற்சாகம் அளிக்கிறது!
Deleteஇனிமையான வரிகள்
ReplyDeleteபரிசுக்கு தகுதியான அருமையான வரிகள்....தொடருங்கள்......
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையான வரிகள்,
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
தங்களின் முதல் வருகைக்கு நன்றி! தங்கள் தளத்திற்கு அவசியம் வருகிறேன்!நன்றி நண்பரே!
Deleteஅழகிய வரிகள் சகோ...
ReplyDeleteகறுத்தபெண்
அழுகிறாள்
மழை! //
ரொம்ப வித்தியாசம்
நன்றி! இந்த ஹைக்கூ தமிழ் தோட்ட தளத்திலும்பாராட்டப்பட்டது!
Deleteசில வரிகள் வெகு அருமை நிறுத்தி நிதானமாக வாசிக்க வைத்தீர்கள்! நல்ல கவிதை நண்பா!
ReplyDeleteநன்றி நண்பரே! உங்களின் ஊக்கத்தால் இன்னும் சிறப்பாக எழுத முயலுகிறேன்! நன்றி!
Deleteகுளத்தில்
ReplyDeleteகோலம் போட்டது
மழைத்துளி!//
ஆஹா மிகவும் ரசிச்சு ரசிச்சேன் அருமையான கவிதை....!
நன்றி நண்பரே!
Deleteபரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமழை பொய்த்தாலும் உங்கள் கவிதைகள் ஏமாற்றவில்லை நல்ல வரிகள்
ReplyDeleteநன்றி சகோதரி!
Deleteபரிசுக்கேத்த கவிதைகள்தான்.ஜில்லென்று இருக்கு.’சவலையான பூமி’ ரசித்தேன் !
ReplyDeleteநன்றி சகோதரி!
Deleteமிக அருமை
ReplyDelete