பாட்டிவைத்தியம்! எளிய சித்த மருத்துவ குறிப்புகள்!
பாட்டிவைத்தியம்!
எளிய
சித்த மருத்துவ குறிப்புகள்!
குப்பை மேனி |
புண்
சிரங்கு குணமாக நுனா இலையை அரைத்து பற்றுப் போட குணமாகும்
தேமல்
குணமாக ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் தேய்த்து
குளித்துவர தேமல் குணமாகும்.
கோரைக்கிழங்கு
கஷாயம் வைத்து சாப்பிட எவ்வித காய்ச்சலும் குணமாகும்.
ஆடாதொடை |
சளிக்காய்ச்சல்
குணமாக ஆடாதொடை இலையை கஷாயம் வைத்து குடிக்க
குணமாகும்.
ஜலதோஷம்
நீங்க துளசிச் சாறு இஞ்சி சம அளவு கலந்து குடிக்கலாம்.
இருமல்
குணமாக வெந்தயக்கீரை சமைத்து உண்டு வந்தால் குணமாகும்.
வெட்டுக்காயம்
குணமாக இலந்தை மர இலையை அரைத்து காயத்தின் மீது பூசி வர குணமாகும்.
வில்வ
இலையை தினமும் காலையில் மென்று தின்று வர வாய்திக்கல் குணமாகும்.
வில்வம் |
வாத
நோய் தீர ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டி வர குணமாகும்.
அகத்திக்கீரை |
அகத்திக்
கீரை வாரம் ஒருநாள் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் குணமாகும்.
துத்திக்கீரை |
கற்றாழை |
துத்திக்கீரை
பொரியல் செய்து சோற்றுடன் 120 நாட்கள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும். இந்த
நாட்களில் மாமிசம் புளி காரம் சேர்க்க கூடாது.
அத்திப்பழம்
தினம் தோறும் ஐந்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
காய்ச்சிய
வெப்பெண்ணையை தடவி வர சேற்றுப் புண் குணமாகும்.
நாக்கு
பூச்சி நீங்க குப்பைமேனி வேர் பொடி கஷாயம் செய்து சாப்பிடலாம்.
தான்றிக்காய்
பொடி கால் ஸ்பூன் தேனில் கலந்து காலையில் சாப்பிட்டுவர கண்பார்வை நன்றாக தெரியும்.
இஞ்சி
சாறுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட ரத்தம் சுத்தமாகும்.
பூவரசு
இலைகளை அரைத்து வதக்கி கட்ட வீக்கம் குணமாகும்.
கசகசா
கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர தூக்கம் நன்கு வரும்.
சிலந்திகடி
குணமாக கடிவாயில் கற்றாழை வைத்துக் கட்ட குணமாகும்.
பாம்புக்
கடி விஷம் குறைய ஆடு தின்னாப் பாலை வேர் எடுத்து கஷாயம் செய்து குடித்தால் விஷம்
முறியும்.
பூரான்
கடிக்கு குப்பை மேனி உப்பு மஞ்சள் அரைத்து பற்று போட குணமாகும்.
நாய்க்கடி
விஷம் முறிய ஊமத்தை இலையை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி கட்ட முறியும்.
தேள்
கடிக்கு நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொள்ள விஷம் குறையும்.
சீதபேதி
குணமாக கசகசாவை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர மூன்று நாட்களில் குணமாகும்.
முள்ளங்கிச்
சாறு சாப்பிட தலைவலி, ஜலதோஷம் , இருமல் குணமாகும்.
அகத்தி
இலை அவித்த தண்ணீர் பருகினால் வாய்ப்புண் குணமாகும்.
தேங்காய்
பாலுடன் தேன் கலந்து குடித்தால் வாய்ப்புண் குணமாகும்.
துளசி |
வல்லாரை
இலையுடன் தூதுவளை சேர்த்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர நுரையீரலில் உள்ள
சளி நீங்கும்.
மகிழம்
இலையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல் நோய்கள் வராது.
பிரம்ம
தண்டு எரித்த சாம்பலால் பல் துலக்கி வர பல்கரை பல்சொத்தை குணமாகும்.
சிறியா
நங்கை தினமும் சிறிது மென்று தின்று வர நீரிழவு நோய்கள் குறையும்.
கோவைப்பழம்
தினசரி 1 சாப்பிட்டுவர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
குப்பைமேனி
சாறை தடவினால் தலைவலி குறையும்.
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
குறிப்புக்கள் அருமை! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!
Deleteமிக உபயோகமான குறிப்புகள்.
ReplyDeleteசிறப்பான பகிர்வு... பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteஎங்களைச் சுற்றி எத்தனை மூலிகைகள்.அதைத் தேடவோ தேடினாலும் அரைக்கவோ நேரமின்றி மாத்திரைகள் போட்டு விழுங்கி வியாதிகளைக் கூட்டிக்கொள்கிறோம்.பிரயோசனமான பதிவு சுரேஷ் !
ReplyDeleteஇந்த இனையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் நன்றாக இருக்கிறது. நான் சமீபத்தில் http://www.valaitamil.com/medicine_women-only என்ற இணைய முகவரியை பார்த்தேன் அதில் மகளிர் மருத்துவம் குறித்து சில தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்களும் சென்று பாருங்களேன்.
ReplyDelete