வெற்றி உன் பக்கம்! கவிதை!
வெற்றி உன் பக்கம்!
நாட்கள் தேயத் தேய
நாமும் தேய்கிறோம் நண்பா!
நாளை நாளை என
வேலையை தள்ளிப் போடாதே!
வேளை வரும் என்று
மூலையில் கிடாதே!
மூளையை உபயோகி!
உற்சாகமாக புறப்படு!
உன் வாழ்க்கை சிறக்க
உறுதியாய் திட்டமிடு!
இறுதி வரை போராடு!
சலித்து போகாமல்
சல்லடை போடு! உன் வாய்ப்பு
உன் காலடியில் விழும்!
வீணாக்காமல் விரைந்து பற்றிடு!
வெற்றி உன் பக்கம்
விரைந்து வந்திடும்!
நம்பு இளைஞா!
நம்மால் முடியும்
என்று நம்பு
நண்பா!
முடியாதது எதுவும்
இல்லை என்ற
முனைப்பு உன்னிடம் இருந்தால்
மலையும் கடுகாகும்!
கடலின் அலைகளை
எதிர்த்து கப்பல்
நீந்த வில்லையா?
காற்றை கிழித்து
விமானங்கள்
பறக்கவில்லையா?
பூமியைத்
துளைத்து நீர்
ஊற்றெடுக்கவில்லையா?
முட்டையை உடைத்து
பறவைகள்
பிறக்கவில்லையா?
நிலவை மறைக்க
மேகம்
முயல்வதில்லையா?
எதிர் நீச்சல் போட
பழகு! என்னாலும்
முடியும் என நினை!
எந்நாளும் உன்
பொன்னாள் ஆகும்நாள்
தூரத்தில் இல்லை!
டிஸ்கி} நேற்று பேய்கள் ஓய்வதில்லை பதிவிட்ட சில நிமிடங்களில் மின்சாரம் தடைபட்டு இரவு 11 மணி வாக்கில்தான் மீண்டும் வந்தது. பின்னர் காலையிலும் மின்சாரம் தடைபட்டு விட்டது. எனவே பின்னூட்டம் இட்ட நபர்களுக்கு நன்றி கூற இயலவில்லை! இந்த பதிவின் மூலம் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தலாமே! நன்றி!
// எதிர் நீச்சல் போட
ReplyDeleteபழகு! என்னாலும்
முடியும் என நினை!
எந்நாளும் உன்
பொன்னாள் ஆகும்நாள்
தூரத்தில் இல்லை!//
உண்மையான வரிகள்...
உற்சாகம் தரும் வரிகள் எடுத்தாண்ட உவமைகள் அழகு.
ReplyDeleteநல்ல டானிக். வாழ்த்துக்கள்
ReplyDeleteதன்னம்பிக்கை வரிகள்!
ReplyDeleteBoost Horlicks மாதிரி நல்ல இருக்கு.
ReplyDeleteமுடியாதது எதுவும்
ReplyDeleteஇல்லை என்ற
முனைப்பு உன்னிடம் இருந்தால்
மலையும் கடுகாகும்!
தன்னம்பிக்கை வரிகள்
தன்னம்பிக்கை தரும் உறுதியான வரிகள்....
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி...
வாழ்வில் தொய்வு வரும்போது இம்மாதிரியான பூஸ்டுகள் அவசியம் . நன்றி
ReplyDeleteதன்னம்பிக்கை தருகிறது ஒவ்வொரு வரிகளும் நன்றி...!
ReplyDeleteவரிகள் ஒவ்வொன்றும் அருமை அண்ணா நேற்று நேரம் கிடைக்கவில்லை இன்று வந்து பார்த்தேன் இன்றைய தலைமுறைக்கு மிகவும் பொருத்தமான கவிதை பாராட்டுக்கள் அண்ணா
ReplyDeleteஉங்கள் வரி மிக அழகு அதை கோர்வையுடன் இணைத்து அற்புதமான இணைப்பு
ReplyDelete