இதோ ஒரு நிமிஷம்!
யாராவது கூப்பிடுகையில் நாம் வேறு வேலையாக இருந்தால் இதோ ஒரு நிமிஷத்தில வந்திடறேன் என்று சொல்கிறோம். போனில் பேசிக்கொண்டிருக்கும் போது ஏதாவது குறுக்கிட ஒரு நிமிஷம் என்கிறோம். இந்த ஒரு நிமிஷம் என்ற வார்த்தையை குறிப்பிடாதவர்கள் இருக்க முடியாது.
சுருக்கமாக சொன்னால் ஒரு நிமிஷம் என்பது மிகவும் அற்பமான காலமாகவே நமக்கு தோன்றுகிறது. ஆனால் ஒரு நிமிஷத்தில் மனிதன் என்னென்ன செய்ய முடியும்? என்னென்ன செய்து கொண்டிருக்கிறான் ? இதை ஒரு நூலில் படித்தேன். உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு நிமிடத்தில் மனிதன் 1200 அடி தூரம் ஓடலாம்.
ஒரு நிமிடத்தில் மனிதன் 150 வார்த்தைகள் பேசலாம்.
ஒரு நிமிடத்தில் மனிதன் 600 அடி தூரம் நடக்கலாம்.
ஒரு நிமிடத்தில் மனிதன் 300 வார்த்தைகளை ஊன்றி படிக்கலாம்.
ஒரு நிமிடத்தில் மனிதன் 410 கன அங்குலம் காற்றை சுவாசித்து வெளியேற்றலாம்.
ஒரு நிமிடத்தில் மனிதன் 18 முறை சுவாசிக்கிறான்.
ஒரு நிமிடத்தில் மனித இதயம் 6.5 சேர் ரத்தத்தை இரத்தக்குழாய்களுக்கு அனுப்பி வைக்கிறது.
ஒரு நிமிடத்தில் இதயத்திலிருந்து இரத்தம் மற்ற இரத்த குழாய்கள் அனைத்திற்கும் சென்று மீண்டும் இதயத்திற்கு திரும்பி வருகிறது.
இவையெல்லாம் மனித உடலில் ஒரு நிமிடத்தில் நடக்கும் விசயங்கள், இப்போது உலகில் ஒரு நிமிடத்தில் நிகழும் விசயங்களை பார்ப்போம்.
ஒரு நிமிடத்தில் பூமி தன்னுடைய அச்சில் 950 முறை சுற்றி வருகிறது.
ஒரு நிமிடத்தில் இந்த உலகில் 1400 கன அடி மழை பொழிகிறது.
ஒரு நிமிடத்தில் கடல்களில் 35000 டன் குடிநீர் நதிகள் மூலம் கடலில் வந்து கலக்கிறது.
ஒரு நிமிடத்தில் உலகில் 100 பேர் மரணம் அடைகின்றனர்.
ஒரு நிமிடத்தில் உலகில் 114 குழந்தைகள் பிறக்கின்றன
ஒரு நிமிடத்தில் உலகில் 34 திருமணங்கள் நடைபெறுகின்றன.
ஒரு நிமிடத்தில் உலகில் 3 விவாகரத்துக்கள் நடக்கின்றன.
ஒரு நிமிடத்தில் உலகில் 60 லட்சம் சிகரெட்டுகள் புகைக்கப்படுகின்றன.
ஒரு நிமிடத்தில் உலகில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பத்திரிக்கைகள் விற்பனையாகின்றன.
ஒரு நிமிடத்தில் உலகில் இரண்டுலட்சத்து பத்தாயிரம் முறை தொலைபேசி பயன்படுத்த படுகிறது.
ஒரு நிமிடத்தில் உலகில் 63,800 காலன் தண்ணீரை மக்கள் பருகுகின்றனர்.
ஒரு நிமிடத்தில் இந்த உலகில் 4000 டன் உணவு உட்கொள்ளப்படுகிறது.
ஒரு நிமிடத்தில் உலகில் 3300 டன் நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.
ஒரு நிமிடத்தில் உலகில் 700 டன் இரும்பு தயாரிக்கப்படுகிறது.
ஒரு நிமிடத்தில் உலகில் 4600 காலணிகள் தயாரிக்கப்படுகிறது.
ஒரு நிமிடத்தில் உலகில் 18000 கார்கள் உருவாக்கப்படுகின்றன.
ஒரு நிமிடத்தில் உலகில் 6000 விண் வீழ் கொள்ளிகள் வானத்திலிருந்து விழுகின்றன.
ஒரு நிமிடத்தில் உலகில் 38 புயல்கள் வீசுகின்றன.
ஆம்! இவையெல்லாம் ஒரே நிமிடத்தில் நடப்பவைகள்தாம்! காலம் பொன் போன்றது என்று சும்மாவா சொன்னார்கள் பெரியோர்கள்! காலத்தை வீண்செய்யாமல் செயலில் இறங்குவோம்! இலக்கினை எட்டுவோம்!
சமய பிரச்சார நிலையம் வெளியிட்ட தெரிந்து கொள்வோம் என்ற நூலில் இருந்து தொகுப்பு!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் நண்பர்களே! நன்றி!
சார்..ஒரு நிஷம் இருங்க..பதிவை படிச்சுட்டு வந்திர்றேன்!
ReplyDeleteஓக்கே ஓக்கே! நன்றி!
Deleteதெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் சூப்பர் ஆமா இதெல்லாம் தேடி கண்டுபிடிக்க எவ்ளோ நிமிஷம் ஆச்சு
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteபதிவை படிக்க மூணு நிமிஷம் ஆனது அதற்குள் நிறையவே தெரிந்து கொண்டோம்
ReplyDeleteநேரத்தோட படித்து கருத்திட்ட உங்களுக்கு நன்றி!
Deleteநேரத்தின் அருமை... அருமை...
ReplyDeleteபாராட்டுக்கள்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
Deleteஒன்று சொன்னீர் அதை நன்று சொன்னீர்
ReplyDeleteஅருமையான தகவல்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
நன்றி நண்பரே!
Deleteஒரு நிமிடத் தகவல்கள் ஓராயிரம் செய்திகளைத் தருகிறது.
ReplyDeleteஅப்பாடி....ஒரு நிமிஷம் என்பது சின்னதில்ல....நினைச்சாலே அதிசயமாயிருக்கு !
ReplyDelete