நான்ரசித்தசிரிப்புகள்! 17

நான்ரசித்தசிரிப்புகள்! 17

அதிக வெயிட் தூக்க கூடாதுன்னு தலைவர்கிட்ட டாக்டர் சொல்லி இருக்காராம்!
அதுக்காக தன் தொப்பையை தூக்கி பிடிச்சபடி தனக்கு முன் நடக்க ரெண்டு ஆட்களை வெச்சிட்டுருக்கிறது ரொம்ப டூ மச்!
                         வீ.விஷ்ணுகுமார்.

தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சா.. ஏன்?
மீட்டிங்ல பேச வந்தவர் மைக் டெஸ்ட் ரிப்போர்ட் எங்கேன்னு கேட்கிறாரே?
                         ஆதில் ஆதம்

டாக்டர் அந்த லேடிக்கு நம்ம கிளினிக் வாசல்லேயே குழந்தை பிறந்திருச்சு!
அப்படின்னா மறக்காம டோர் டெலிவரி சார்ஜ் சேர்த்து போடுங்க!
                          பி.கவிதா.

தலைவர் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க பல வகையில் முயற்சி எடுத்துள்ளாரா.. எப்படி?
இதற்காக மட்டும் எட்டு மிமிக்ரி கலைஞர்களை நியமித்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளேன்!
                            டி.கே.சுகுமாரன்.

இருந்தாலும் மாப்ள இவ்வளவு அல்பமா இருப்பார்னு எதிர்பார்க்கவே இல்லை!
  ஏன் என்னாச்சு?
கல்யாண மண்டபத்துல மாமனார் செருப்பையே ஆட்டைய போட்டுட்டு போறாரு பாருங்க!
                          ரெங்கை பழனி.
இந்த டாக்டர் மட்டும் ஆபரேஷனுக்கு  கம்மியா பீஸ் வாங்கிறாரே? எப்படி?
மயக்கமருந்துக்கு பதில் மயக்க பிஸ்கெட்தானே உபயோகிக்கிறார்!
                            பர்வீன் யூனுஸ்.
சின்ன வயசுல இருந்தே என் பையனுக்கு புளிப்பு மாங்காய் கொடுத்திட்டு வரேன்!
  எதுக்கு?
அவன் அரசியல்வாதி ஆகி வாய் கூசாமல் பொய் பேசனுமே!
                      சி.பி.செந்தில்குமார்.
வேலை தேடி மூணு மாசமா நாயா பேயா அலையறேன்; வேலை கிடைச்சபாடில்லை!
கொஞ்ச நாளைக்கு மனுசனா அலைஞ்சு பாரேன்!
                         அதிரை புகாரி.

உங்க ஆபிஸ்ல யார் யார் சம்திங் வாங்குறாங்கன்னு சொல்ல முடியுமா?
எனக்கு எவ்வளவு சம்திங்க் தருவீங்க?
                           ச.அ. கேசவன்.
நீங்க சொன்னதுல பாதிபுரிஞ்சது பாதி புரியலை!
எதுபுரிஞ்சது எது புரியலை?
நாளைக்கு ஹாலிடேன்னு சொன்னது புரிஞ்சது!நாளை மறுநாள் டெஸ்டுன்னு சொன்னது புரியலை!
                       பர்வத வர்த்தினி.

இந்த பரிசு குலுக்கலை நடத்த ஆட்டோக்காரர்தான் வரணும்னு ஏன் சொல்றீங்க?
எப்படி குலுக்கறதுன்னு அவருக்குத்தானே தெரியும்!
                            லக்கி, மதுரை
எதிரி மன்னர் உங்களுடன் கிரிக்கெட் விளையாட வரமாட்டேன் என்று கூறிவிட்டார் மன்னா!
ஹா!ஹா! நான் தான் அதிக ‘ரன்’ எடுப்பேன் என்று பயந்து விட்டான்!
                           சிக்ஸ்முகம்.
தலைவர் மேல மறுபடியும் என்ன வழக்கு?
தன்னை நிரபராதின்னு விடுதலை செய்யும் நீதிமன்றத்துக்கு ஒரு கோடி ரூபாய் டொனேஷன் தரப்படும்னு அறிவிச்சாராம்!
                        ஆர்.ஜெயலஷ்மி.

தலைவரு தன்னோட இனத்துக்காரர்களை மட்டும்தான் கட்சியில சேர்த்துக்கிறாரு!
அதுக்காக அவரை அநியாயத்துக்கு ‘ஓரினச்சேர்க்கைப்பிரியர்’னு எதிரணிக்காரங்க பேசறது நல்லாவா இருக்கு!
                          பொன்ராஜ்குமார்.

பஞ்சபூதம்னா என்ன?
ரொம்ப இளைச்சு துரும்பா போயிட்ட பூதம்!
                        டி.ஆர்.
ஒருமாத காலமா என் மனைவியை திட்டிவந்த நான் நாளையில இருந்து திட்டறதில்லைன்னு முடிவுக்கு வந்துட்டேன்!
ஏன் அப்படி?
நாளைக்குத்தான் அவ ஊரிலிருந்து வர்றா!
                      பி. பொன்காவியா.

எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வந்தா வீடே போர்க்களமாயிடும்! எங்கப்பா மன்னர் மாறி ஆயிடுவார்!
 வீரமா சண்டை போடுவாரா?
இல்லை தப்பிச்சு ஓடிடுவார்!
                   பி.இலக்கியா.
எங்க பொண்ணை கட்டிக்கொடுத்தா மாப்பிள்ளை சந்தோஷமா வச்சிக்குவாரா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க? அவர் ஏற்கனவே ரெண்டு பொண்ணுங்களை சந்தோஷமா வெச்சிருந்தவர்தான்!
                            சிக்ஸ்முகம்.

நானும் ஒரு பத்திரிக்கையாளர்தான்னு தலைவர் சொல்லிக்கொள்கிறாரே ஏன்?
அவர் பேர்ல நிறைய குற்றப்பத்திரிக்கை இருக்காம்!
                     எஸ்.எஸ். பூங்கதிர்.

ஜப்பான் போன தலைவரை அடிச்சு துரத்திட்டாங்களா... ஏன்?
ஜப்பானை ஆறே மாசத்துல இந்தியாமாதிரி ஆக்கி காட்டறேன்னாராம்!
                              சி.சாமிநாதன்.

நன்றி} தினமலர்-வாரமலர், சிறுவர்மலர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தலாமே! நன்றி!Comments

 1. ஹா. ஹா.. நல்ல தொகுப்பு...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
 2. நாங்களும் சிரிச்சு மகிழுவோம்ல :D

  ReplyDelete
  Replies
  1. நல்லாசிரிச்சு மகிழத்தானே பகிர்வே! நன்றி நண்பா!

   Delete
 3. நானு ரசித்தேன் சிரித்தேன் நன்றிகள் அண்ணா

  ReplyDelete
 4. ரசித்துச் சிரித்தோம்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. எல்லாமே மனம் விட்டுச் சிரிக்க வைத்தது.நன்றி !

  ReplyDelete
 6. ஹி..ஹி...ஹா. ஹா....நன்றி!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2