குடி பெயர்ந்த கிராமமும்! குளித்த டாக்டரும்! சுவாரஸ்ய தகவல்கள்!



டிஸ்கி}  முதல் செய்தி எங்கள் பகுதியை சேர்ந்தது. இரண்டாவது செய்தி விழிப்புணர்வு சம்பந்த பட்டது என்பதால்  வெட்டி ஒட்டியுள்ளேன்!  காப்பி விரும்பாதவர்கள்  மன்னிக்க!



பொன்னேரி: சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காததால், ஒரு கிராமமே குடிபெயர்ந்து உள்ளது. கடைசியாக இருந்தவரும், வேலை தேடி வெளியூருக்குச் சென்றதால், தற்போது மக்கள் நடமாட்டம் முற்றிலும் இல்லாமல், கிராமம் வெறிச்சோடிக் கிடக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோளூர் ஊராட்சியில் அடங்கியது ஆண்டார்தோப்பு கிராமம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, 27 குடும்பங்களில், 120 பேர் வசித்து வந்தனர். அதில், குயவர்கள் பெரும்பான்மையாக இருந் தனர். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

தீவு கிராமம்: ஆண்டார்தோப்பு கிராமம், கோளூர் கிராமத்திற்கு செல்லும் சாலையிலிருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இதற்காக, அங்கு பேருந்து நிறுத்தமும் அமைக்கப் பட்டு உள்ளது. இந்த கிராமத்தை அடுத்து, வேறு கிராமங்கள் இல்லாமல், சுற்றிலும் விவசாய நிலங்களுக்கு, மத்தியில் தீவு கிராமமாக உள்ளது. ஊரில் விநாயகர், பெருமாள், முனீஸ்வரன் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி கோவில்களும் உள்ளன. ஒதுக்குப்புறமான இடத் திலும், சுற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமலும் இருந்ததால், பல வளர்ச்சித் திட்டங்களில் இருந்து இந்த கிராமம் துண்டிக்கப் பட்டது. போக்குவரத்து, சாலை, குடிநீர், மின்விளக்கு வசதி, உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல், மிகுந்த விரக்திக்கு ஆளாகினர். மழை காலங்களில் ஊரைவிட்டு வெளியேற முடியாமலும், குடிநீருக்கு கோளூர் கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

முன்னேற்றம் தேடி...: ஆண்டாண்டு காலமாக விவசாயத்தையும், மண்பாண்ட தொழிலையும் செய்து வந்த கிராம மக்கள், சந்ததியரின் கல்வி, சுகாதாரம், வருவாய், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை கருத்தில் கொண்டு, கிராமத் தில் இருந்து ஒவ்வொரு குடும்பமாக வெளியேறினர். கடைசியாக ஜெயசீலன் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கிராமமே காலியான சூழ்நிலையில் அச்சம் காரணமாக அவரும் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியேறினார். தற்போது ஆண்டார் தோப்பு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் பூட்டிக் கிடக்கின்றன. மின் கம்பங்களும், ஒயர்களும் அகற்றப் பட்டு உள்ளன. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இடிந்து கீழே விழுந்து நொறுங்கிக் கிடக்கிறது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. அதே சமயம், கோளூர், பொன்னேரி, சென்னை என, பல்வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்தவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை கிராமத்திற்கு வந்து இஷ்ட தெய்வங்களை வணங்க மட்டும் மறப்பதுஇல்லை.

சாலை அமைப்பு: மக்கள் அங்கு குடியிருக்கும் வரை சாலை வசதி செய்யப்படாத நிலையில், தற்போது யாருமே இல்லாத கிராமத்திற்கு, தார் மற்றும் செம்மண் சாலை வசதி செய்யப் பட்டு உள்ளது. ஆனால் போக்குவரத்து தான் இல்லை. யாருமே இல்லாத இக்கிராமத்தில், 70 வாக்காளர்கள் அட்டைகள் மற்றும் 27 குடும்ப அட்டைகள் பதிவு செய்யப் பட்டு உள்ளன. ஊராட்சி வார்டு உறுப்பினரும் உள்ளார், ஆனால், அவருக்கு எவ்வித பணியும் இல்லை. இது குறித்து, ஆண்டார்தோப்பு கிராமத்தில் வசித்து, சென்னை ஆவடியில் குடியேறிய ஜெயசீலன் கூறியபோது, ""எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அப்போது செய்து தரப்படவில்லை. யாரும் அற்ற அனாதைகளாக வாழ்ந்து வந்தோம். வேறு வழியின்றித் தான் குடிபெயர்ந்தோம். தற்போது, அங்கு சாலை வசதிகள் செய்யப் பட்டு உள்ளதாக கேள்விப்பட்டேன். நாங்கள் இருக்கும்போது சாலை வசதிகளை செய்து கொடுத்திருந்தால், நிச்சயம் கிராமத்தை விட்டு வெளியேறி இருக்க மாட்டோம்,'' என்றார்.

நேரில் சென்று ஆய்வு: இது குறித்து, பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர் கந்தசாமியிடம் கேட்டபோது, ""ஆண்டார்தோப்பு கிராமத்தின் நிலை குறித்து, நேரில் சென்று ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து அக்கிராமத்திற்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். யாரும் இல்லாத கிராமத்திற்கு அர” பணத்தை வீணடிக்க வேண்டுமா என்பது கேள்வியாக உள்ளது.


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மறவர் தெருவைச் சேர்ந்த சித்தா டாக்டர் வேல்முருகன் 38. இவர் மானாமதுரையில் நடந்த "ஏசியன் ஜிம்' 7ம் ஆண்டு விழாவில், நாட்டில் நிலவும் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி "ஒரு லிட்டர் தண்ணீரில் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கும் சாதனையை' நடத்திக் காட்டினார். பொதுவாக ஒருவர் குளிப்பதற்கு ஒரு வாளி தண்ணீராவது தேவைப்படும். ஆனால் இவர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு லிட்டர் தண்ணீரில் குளிக்கும் சாதனையை செய்து காட்டினர். வேல்முருகன் கூறியதாவது: தமிழகத்தில் சில இடங்களில் பொதுமக்கள் குடிப்பதற்குஒரு வாய் தண்ணீர் கூட இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆனால் நாம் குளிப்பதற்கு 2,3 வாளி தண்ணீரை செலவழிக்கின்றோம்.வரும் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் கிடைப்பதே அரிதாகி விடும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களிடம் தண்ணீரை வீணாக செலவழிக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை செய்து காட்டினேன் என்றார். 

தகவல் உதவி} தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!



Comments

  1. பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. ஒரு லிட்டர் தண்ணீரா.. இதெல்லாம் ஓவர் சார்

    ReplyDelete
  3. களவுக்குக்குப்பின்னால்தான்
    எப்போதும் அரசாங்கம் கதவடைக்கும்
    இரண்டாவதுபதிவு அதிக ஆச்சரியப்படுத்தியது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. ஒரு லிட்டர் தண்ணீரிலே முகத்தை கூட நல்லா கழுவ முடியாதுங்களே?

    ReplyDelete
  5. இனி அடுத்து வரும் உலகப் போருக்கு காரணாம்: தண்ணீர்!
    கேட்க சிரிப்பாக இருக்கும்; ஆனால் அது தான் உண்மை!

    ReplyDelete
  6. கிராமங்களை அரசு கைவிட்டால் மக்களை விவசாயம் கைவிட்டு விடும்
    தண்ணீரை வீணடிப்பதை தடுக்கும் நோக்கத்துடனே அதை செய்திருக்கிறார்.நல்ல நோக்கம்தான்.

    ReplyDelete
  7. முதல் செய்தி வருந்தத்தக்கதாகவும் இரண்டாவது செய்தி ஆச்சிரியமாகவும் இருந்தது நல்ல பகிர்வு.

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி அண்ணா

    ReplyDelete
  9. ம்ம் .... தண்ணீர் தண்ணீரென்று....கொஞ்சம் கவலையான விஷயம்தான் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!