தாயகத்தை தாக்காதே! கவிதைகள்!

 தாயகத்தை தாக்காதே!

தாயகத்தை தாங்க வேண்டாம்
தோழா!
தாக்காமல் இரு!

நாம் பிறந்த மண் இது!
மதிக்கா விட்டாலும்
மிதிகாமல் இருப்போம்!
வீட்டை போல நாட்டை
காக்க வேண்டாம் ஆனால்
காசுக்காக விற்காமல்
இருப்போம்!

பாரதப் பெருமைகளை
புகழ வேண்டாம்!
இகழாமல் இருப்போம்!

நம் பாரம்பரியத்தை
போற்றி பாட வேண்டாம்
தூற்றாமல் இருப்போம்!

நம் நாட்டு சின்னங்களை
சீர் படுத்த வேண்டாம்!
சின்னாபின்னமாக்காமல் இருப்போம்!

உனக்கு வெட்கமாயிருந்தால்
இந்தியன் என்று சொல்லாதிரு
ஆனால் அந்நியனாய் மாறி
உன்னை அடகு வைத்து
கொள்ளாதிரு! நண்பா!

தாயகத்தை தாங்க வேண்டாம்
தோழா!
தாக்காமல் இரு!


 சும்மா கிடைக்க வில்லை சுதந்திரம்!

சும்மா கிடைத்ததா
இந்த சுதந்திரம்!
நம் பாட்டனும்
பூட்டனும் தேடி
தந்த இந்த சுதந்திரம்!
பாரினுள் அடிமைத் தளை
நீக்கி பாடி வந்த சுதந்திரம்!
எத்தனை தலைவர்கள்
எத்தனை தொண்டர்கள்
இரத்தம் சிந்தினர்!
உத்தமர் காந்தியோடு
அணிவகுத்து அத்தம
ஆங்கிலேயரை அடித்து விரட்டினர்!
போராட்டங்கள் போர்கள்
அடைப்புகள் என
அடி மேல் அடி விழ
அம்மியும் நகருமென்பது பொல
ஆங்கிலேயர் நகர்ந்தனரே!

 கொடிகாக்க உயிரிழந்து
வெடிவாங்கி தனை மரித்து
சிறைபட்டு செக்கிழுத்து
சுதேசிகள் எத்தனை எத்தனையோ?

அத்தனையும் மறந்து மீண்டும்
அடிமைகள் ஆவோமோ?
அன்னிய பொருட்கள் இங்கே
கடைவிரிக்க அடங்கி போகுதே
நம் பொருளாதாரம்!

இத்தனை நாள் பாடுபட்டு
மீண்டும் இழக்கவா பெற்றோம்
விடுதலை!
சொந்த வீட்டினில் திருடும்
திருடர்கள் தலைவர்கள் ஆனதில்
குருடர்கள் ஆனதே நம்பாரதம்!

என்று கிடைக்கும் மீண்டும் விடுதலை?
இந்த ஊழல்வியாதிகள் ஒழிந்திடின்
அன்றே பூரண விடுதலை!
ஒளி படைத்த பாரதம் மீண்டும்
உருவாகிட குரல் கொடுப்போம்!
ஒன்று பட்டு உயர்த்திடுவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள் நன்றி!

Comments

 1. அருமையான கவிதை.
  //ஒன்று பட்டு உயர்த்திடுவோம்!// சகோ.

  ReplyDelete
 2. உற்சாகப்படுத்தும் வரிகள்...

  சிறப்புக் கவிதைக்கு பாராட்டுக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே தவறாமல் வந்து உற்சாகப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ளேன்!

   Delete
 3. தாயகத்தைத் தாக்காதே!

  “சொந்த வீட்டினில் திருடும்
  திருடர்கள் தலைவர்கள் ஆனதில்
  குருடர்கள் ஆனதே நம்பாரதம்!“

  கண்ணாடி வீட்டிற்குள்
  நின்று கொண்டு
  கல்லெறிகிறோம் தான்,
  பாவம்ங்க நம் பாரதம்!
  தாக்கக் கூடாது தான்.
  நன்றிங்க.

  ReplyDelete
 4. ஊழல்வியாதிகள் ஒழிந்திடின்
  அன்றே பூரண விடுதலை!

  ஆனால் அந்நியனாய் மாறி
  உன்னை அடகு வைத்து
  கொள்ளாதிரு! நண்பா!
  -அருமை!

  ReplyDelete
 5. ஒவ்வொரு வரியும் பாடம் சொல்வதுப்போல அருமையாகச் சொல்லப்பட்டிருக்கு.அருமை.சுதந்திர தின வாழ்த்துகள் சுரேஷ் !

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோதரி!

   Delete
 6. ஊழல்வியாதிகள் ஒழிந்திடின்
  அன்றே பூரண விடுதலை!

  அருமை நண்பா...

  ReplyDelete
 7. தாங்க வேண்டாம் தாக்காமல் இருந்தால் நன்று முதல் வரிகளே சிறப்பு .

  ReplyDelete
  Replies
  1. நன்றி! பாராட்டுக்கு மட்டுமல்ல வருகைக்கும்!

   Delete
 8. ///சும்மா கிடைத்ததா
  இந்த சுதந்திரம்!///

  சிந்திக்க வைத்த கேள்வி தோழரே ....!!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2