ஒரு வில்லன்!ஒருஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
வில்லன் 108
காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதியில், நேற்று பகல் 12 மணிக்கு நடந்து சென்ற மூதாட்டி, வெயில் தாங்க முடியாமல் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த வியாபாரி ஒருவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. வெயிலில் சுருண்டு கிடந்த மூதாட்டியின், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ஆகியவற்றை ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் பரிசோதித்தனர். பரிசோதனை முடிவை சென்னை திருவல்லிக்கேணி தலைமை அலுவலகத்தில் உள்ள மருத்துவருக்கு தெரிவித்தனர்.
அவர், ""மூதாட்டியை மருத்துவமனையில் சேர்க்க, யாராவது உடன் வருவதாக இருந்தால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள், இல்லை என்றால் அங்கேயே விட்டுச் செல்லுங்கள்' எனக் கூறியுள்ளார். அதன்படி ஊழியர்கள், அருகில் இருந்தவர்களிடம் ""இவரை மருத்துவமனையில் சேர்க்க யாராவது உடன் வருகிறீர்களா,'' எனக் கேட்டனர். பொதுமக்கள் யாரும் முன் வரவில்லை. உடனே ஊழியர்கள் ஆம்புலன்சை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். இரக்க குணம் படைத்த சிலர், மூதாட்டியை தூக்கி, நிழலில் படுக்க வைத்தனர். பின், தேநீர், பிஸ்கட் வாங்கி கொடுத்து விட்டு சென்றனர். சில நிமிடங்களுக்கு பிறகு, மூதாட்டி சுய நினைவுக்கு வந்தார். வயதான ஒரு பெண்மணியை நிர்கதியாய் விட்டு விட்டு சென்ற, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
ஹீரோ நெ 1
மதுரை:வயதான நிலையில், வறுமையில் தவித்தபோதும், நகரெங்கும் நடந்தே சுற்றி பிளாஸ்டிக் மாலைகள் விற்று வயிற்றை கழுவுகிறார் முதியவர் கிருஷ்ணாராம், 78.
திருநகர் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர்நகர் மேட்டுக்காலனியில் வசிக்கும் அவரது மனைவி, பதினான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லாததால் தனிநபராக வசிக்கிறார். திருநகர், திருப்பரங்குன்றம், மதுரை என பல பகுதிகளுக்கும் நடந்து செல்லும் அவர், பிளாஸ்டிக் பூமாலைகளை விற்கிறார். வயதானவர் என கருதி காசு, பணம் கொடுத்தாலும் வாங்க மறுக்கும் அவர், மாலைகளை வாங்கி உதவும்படி கூறுகிறார். அவர் கூறுகையில், ""தினமும் ரூ. 50 வரை கிடைக்கும். போதுமானதாக இல்லாவிட்டாலும், சமாளிக்கிறேன். வியாபாரம் ஆகாதபோது, சரிவர உணவு உண்ண முடியாமலும் போகிறது. முதியோர் உதவித் தொகை கேட்டு 2 ஆண்டுகளில் பலமுறை விண்ணப்பித்தேன். இன்னும் கிடைக்கவில்லை,'' என்றார்.
உதவித் தொகையை எதிர்பாராமல், தள்ளாத வயதிலும் "தன்னம்பிக்கையுடன்' வலம் வரும், கிருஷ்ணாராம் பாராட்டுக்குரியவரே.
ஹீரோ நெ 2
சென்னை: படிக்க வாய்ப்பில்லாத சிறுமிகளை கண்டறிந்து, பள்ளியில் சேர்த்த
சாதனை மாணவியால், அப்பகுதியில் பல குழந்தைகள் படித்து வருகின்றனர். சென்னை
புளியந்தோப்பு, சாஸ்திரி நகரில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், இடைக்கால
பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் நோக்கம் படிக்க வாய்ப்பில்லாத, 14
வயதுக்குட்பட்ட குழந்தைகளை கண்டறிந்து, ஓர் ஆண்டு அடிப்படைக் கல்வியை கற்று
தர வேண்டும். பின் மாணவர்களின் வயதுக்கேற்ப, உரிய வகுப்பில், படிப்பை தொடர
செய்ய வேண்டும். இடைக்கால பள்ளியில், இந்த ஆண்டு 20 பேர் சேர்ந்துள்ளனர்.
அதில் லட்சுமி என்ற மாணவி பெற்றோர் அனுமதியின்றி, பள்ளியில்
சேர்ந்துள்ளார். அத்துடன் ஏழு மாணவர்களை இடைக்கால பள்ளியிலும், இரண்டு
மாணவர்களை சத்துணவு மையத்திலும் சேர்த்துள்ளார்.
இதுகுறித்து லட்சுமி கூறியதாவது: நான் படித்தது போல் என் தெருவில் உள்ள, பிள்ளைகளும் படிக்க வேண்டும் என நினைத்தேன். ஆரம்பத்தில் நான் அழைத்து, பள்ளிக்கு வர முடியாது என்று கூறி விட்டனர். பின், தினமும், இரவில் வீட்டில் சென்று, நான் படிப்பதை பார்த்து விட்டு பள்ளியில் சேர்வதாகக் கூறினர். அதனால், பள்ளிக்கு அழைத்து வந்தேன். இப்போது அவர்களும் நன்கு படிக்கிறார்கள். இவ்வாறு லட்சுமி கூறினார்.
இடைக்கால பள்ளி ஆசிரியை கீதா கூறுகையில், "படிக்க வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து, பிழைக்க வந்தவர்களின் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற நோக்கில் இது துவங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், பிள்ளைகளை தேடி சென்று, படிக்க வருமாறு அழைத்தேன். பின்பு தான் பெற்றோரிடம் பிள்ளைகளை படிக்க அனுப்புமாறு கூறுவேன். வீடு வீடாக தினமும் சென்று, பிள்ளைகளை அழைத்து வந்து பாடம் நடத்து வன். ஒருநாள் லட்சுமி, நானும் படிக்க வருகிறேன் என கேட்டாள். நானும் அவளை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தேன். தான் படிப்பதை போல் மற்றவர்களும் படிக்க வேண்டும் என, எண்ணி பலரை பள்ளியில் சேர்த்துள்ளார்' என்றார்.
டிஸ்கி} தினமலரில் படித்து நெகிழ்ந்த சில பதிவுகளை உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன்! இவர்கள் எங்கோ அறியாமல் போய் விடக்கூடாது! உலகம் அறிய வேண்டியவர்கள்! ஏதோ என்னால் ஆனது நாலு பேருக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்! பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுத்த அந்தபோலீஸை என்ன வென்று சொல்வது! தமிழ்நாடு போலீஸ் நாறுகிறது!
நன்றி} தினமலர்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப் படுத்துங்கள்! நன்றி!
காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதியில், நேற்று பகல் 12 மணிக்கு நடந்து சென்ற மூதாட்டி, வெயில் தாங்க முடியாமல் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அதைப் பார்த்த வியாபாரி ஒருவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. வெயிலில் சுருண்டு கிடந்த மூதாட்டியின், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ஆகியவற்றை ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் பரிசோதித்தனர். பரிசோதனை முடிவை சென்னை திருவல்லிக்கேணி தலைமை அலுவலகத்தில் உள்ள மருத்துவருக்கு தெரிவித்தனர்.
உத்தரவு:
அவர், ""மூதாட்டியை மருத்துவமனையில் சேர்க்க, யாராவது உடன் வருவதாக இருந்தால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள், இல்லை என்றால் அங்கேயே விட்டுச் செல்லுங்கள்' எனக் கூறியுள்ளார். அதன்படி ஊழியர்கள், அருகில் இருந்தவர்களிடம் ""இவரை மருத்துவமனையில் சேர்க்க யாராவது உடன் வருகிறீர்களா,'' எனக் கேட்டனர். பொதுமக்கள் யாரும் முன் வரவில்லை. உடனே ஊழியர்கள் ஆம்புலன்சை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். இரக்க குணம் படைத்த சிலர், மூதாட்டியை தூக்கி, நிழலில் படுக்க வைத்தனர். பின், தேநீர், பிஸ்கட் வாங்கி கொடுத்து விட்டு சென்றனர். சில நிமிடங்களுக்கு பிறகு, மூதாட்டி சுய நினைவுக்கு வந்தார். வயதான ஒரு பெண்மணியை நிர்கதியாய் விட்டு விட்டு சென்ற, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
Chenduraan - tiruchendrue,இந்தியா
மனிதாபிமானத்தை
பற்றி பேசும் போது போன வாரம் நடந்த காரியத்தை பகிர்ந்தது கொள்ள
விரும்புகிறேன். மதுரை - தூத்துக்குடி பஸ்சில் பயணம் செய்யும் போது வயதான
பட்டி தாதா பிச்சை எடுத்து பிழைப்பவர்கள் பஸ்சில் வந்தார்கள். அவர்கள்
இதற்கு முந்திய பஸ்சில் ஏறியபோது அந்த பிச்சக்கரர்களிடமிருந்து யாரோ 1000
ருபாய் பணத்தை திருடி விட்டார்கள். அந்த பிச்சக்கர பாட்டி டிரைவரிடம்
சொன்னபோது அந்த டிரைவர் அங்கு இருந்த போலீசிடம் சொல்லி உதவி செய்யுமாறு
சொன்னாராம். போலீஸ் வந்து அருகில் இருந்த இன்னொரு பெண்ணிடம் திருட்டு போன
பணத்தை கண்டிபிடித்து விட்டார்கள். ஆனால் பரிதாபம்... அந்த மீட்ட பணத்தை
பிச்சைக்கார பாட்டியிடம் கொடுக்காமல் போலீஸ் காரர்கள் எடுத்துக்கொண்டு போய்
விட்டார்கள். பவம் அந்த பாட்டி. எங்களிடம் பகிர்ந்து கொண்ட சம்பவம். எங்கே
மனிதாபம்
ஹீரோ நெ 1
மதுரை:வயதான நிலையில், வறுமையில் தவித்தபோதும், நகரெங்கும் நடந்தே சுற்றி பிளாஸ்டிக் மாலைகள் விற்று வயிற்றை கழுவுகிறார் முதியவர் கிருஷ்ணாராம், 78.
திருநகர் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர்நகர் மேட்டுக்காலனியில் வசிக்கும் அவரது மனைவி, பதினான்கு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லாததால் தனிநபராக வசிக்கிறார். திருநகர், திருப்பரங்குன்றம், மதுரை என பல பகுதிகளுக்கும் நடந்து செல்லும் அவர், பிளாஸ்டிக் பூமாலைகளை விற்கிறார். வயதானவர் என கருதி காசு, பணம் கொடுத்தாலும் வாங்க மறுக்கும் அவர், மாலைகளை வாங்கி உதவும்படி கூறுகிறார். அவர் கூறுகையில், ""தினமும் ரூ. 50 வரை கிடைக்கும். போதுமானதாக இல்லாவிட்டாலும், சமாளிக்கிறேன். வியாபாரம் ஆகாதபோது, சரிவர உணவு உண்ண முடியாமலும் போகிறது. முதியோர் உதவித் தொகை கேட்டு 2 ஆண்டுகளில் பலமுறை விண்ணப்பித்தேன். இன்னும் கிடைக்கவில்லை,'' என்றார்.
உதவித் தொகையை எதிர்பாராமல், தள்ளாத வயதிலும் "தன்னம்பிக்கையுடன்' வலம் வரும், கிருஷ்ணாராம் பாராட்டுக்குரியவரே.
ஹீரோ நெ 2
தளவாய்புரம்: சொந்த செலவில், 20 ஆண்டுகளாக மரங்களை வளர்த்து
வருகிறார், சேத்தூர் வெற்றிலை வியாபாரி தலைமலை.விருதுநகர், சேத்தூர் அருகே
தேவதானத்தை சேர்ந்தவர் தலைமலை, 50. இவர், தினமும் சைக்கிளில் வெற்றிலை
வியாபாரம் செய்கிறார்.
ஒரு நாள், வியாபாரத்தை முடித்து விட்டு வரும் போது, வெயிலின் கொடுமைக்கு மூதாட்டி இறந்ததை கண்டார். "மரம் இருந்தால், மூதாட்டி உயிரை காப்பாற்றியிருக்கலாம்' என, எண்ணினார். அன்று முதல், மரம் வளர்க்க வேண்டும் என, ஆசை வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி அன்று, மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறார். சுற்றியுள்ள கிராமங்கள், ரோடு ஓரம், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், கோயில்களில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளார்; இவற்றை சொந்த செலவில், தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி குஜராத், தமிழக அரசுகள் விருது வழங்கியுள்ளன. வருமானத்தில் பாதியை, மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு செலவிடுகிறார்.
தேவதானம் நச்சாடை தவிர்தருளிய சுவாமி கோயில் பூஜைக்கு தேவையான பூக்களுக்காக, ஒரு தோட்டத்தை அமைத்துள்ளார்; அருகில் 120 மரக்கன்றுகளையும் பராமரித்து வருகிறார். மரக்கன்றுகளையும் இலவசமாக தருகிறார். 93632 62808 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஹீரோயின்!
இதுகுறித்து லட்சுமி கூறியதாவது: நான் படித்தது போல் என் தெருவில் உள்ள, பிள்ளைகளும் படிக்க வேண்டும் என நினைத்தேன். ஆரம்பத்தில் நான் அழைத்து, பள்ளிக்கு வர முடியாது என்று கூறி விட்டனர். பின், தினமும், இரவில் வீட்டில் சென்று, நான் படிப்பதை பார்த்து விட்டு பள்ளியில் சேர்வதாகக் கூறினர். அதனால், பள்ளிக்கு அழைத்து வந்தேன். இப்போது அவர்களும் நன்கு படிக்கிறார்கள். இவ்வாறு லட்சுமி கூறினார்.
இடைக்கால பள்ளி ஆசிரியை கீதா கூறுகையில், "படிக்க வாய்ப்புகள் கிடைக்காத மாணவர்கள், வெளி மாவட்டங்களில் இருந்து, பிழைக்க வந்தவர்களின் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற நோக்கில் இது துவங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், பிள்ளைகளை தேடி சென்று, படிக்க வருமாறு அழைத்தேன். பின்பு தான் பெற்றோரிடம் பிள்ளைகளை படிக்க அனுப்புமாறு கூறுவேன். வீடு வீடாக தினமும் சென்று, பிள்ளைகளை அழைத்து வந்து பாடம் நடத்து வன். ஒருநாள் லட்சுமி, நானும் படிக்க வருகிறேன் என கேட்டாள். நானும் அவளை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தேன். தான் படிப்பதை போல் மற்றவர்களும் படிக்க வேண்டும் என, எண்ணி பலரை பள்ளியில் சேர்த்துள்ளார்' என்றார்.
டிஸ்கி} தினமலரில் படித்து நெகிழ்ந்த சில பதிவுகளை உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன்! இவர்கள் எங்கோ அறியாமல் போய் விடக்கூடாது! உலகம் அறிய வேண்டியவர்கள்! ஏதோ என்னால் ஆனது நாலு பேருக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்! பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுத்த அந்தபோலீஸை என்ன வென்று சொல்வது! தமிழ்நாடு போலீஸ் நாறுகிறது!
நன்றி} தினமலர்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப் படுத்துங்கள்! நன்றி!
//தினமலரில் படித்து நெகிழ்ந்த சில பதிவுகளை உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன்!//
ReplyDeleteஅருமையான பகிர்வு.
நன்றி நண்பரே!
Deleteபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteமனிதநேயம் மரித்துபோய்விட்டது :((
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅவர்கள் போலிஸ் அல்ல
ReplyDeleteபொறுக்கிகள்....
தகவலுக்கு நன்றிங்க சுரேஷ் ஐயா.
நன்றி சகோ!
Deletenalla muyarchi!
ReplyDeletenalla visayangal!
பலருக்கு பாடம் நடத்திடும் பகிர்வு! தினசரி தாளில் படித்தாலும், மனதில் எதாவது செய்ய வேண்டுமென நினைப்பவர்கள், வலியினை மனதளவில் உணர்ந்தவர்கள் மட்டுமே அடுத்தவருக்கு உதவவேண்டும் என நினைத்து அதனை செயலிலும் செய்வார்கள்! மற்றையோர் போலிஸ்காரரைப் போல சந்தர்ப்பத்திற்கேற்ப செயல்படுபவர்களாகவே இருக்கின்றனர். மனதில் மாயையின் விடியல் எப்போது?
ReplyDeleteசீனி, மற்றும் கிருஷ்ணா ரவி,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteபடித்து நெகிழ்ந்த பதிவு. தொடருங்கள் நண்பரே.
ReplyDeleteஎன்னுடைய தளத்தில் ஏணிப்படி
ரியல் ஹீரோக்களை அறிமுகம் செய்தமைக்கு
ReplyDeleteமனமார்ந்த நன்றி
பிச்சைகாரர்களைவிட பெரிய பிச்சைக்காரரை
அறிமுகம் செய்தவிதம் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சீனியர் சிட்டிசன்களின் (சிட்டிசர்கள்?!) நிலைமையைப் படிக்கும்போது கஷ்டமாக இருந்தது! 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செய்தது சரியில்லை என்று சொன்னாலும் அங்கு வேடிக்கை பார்த்த பல பேர்களில் ஒருவருக்குக் கூட அந்த மூதாட்டியின் உடன் சென்று உதவ வேண்டும் என்றும் தோன்றாதது ஏன்?
ReplyDeleteஅவசர சிகிச்சை எல்லாம் இன்று வெறும் பேச்சாகவே உள்ளது என்ன செய்வது பாட்டிக்கு ஆயுசு கெட்டியாக உள்ளதே.
ReplyDeleteபிச்சை எடுக்கும் பாட்டியிடம் பிச்சையெடுத்த போலிஸ் என்ன கொடுமை அண்ணா
ரியல் ஹீரோக்களையும், வில்லன்களையும் அடையாளப் படுத்தியதற்கு நன்றி சகோ
ReplyDelete