நான் ரசித்த சிரிப்புக்கள் 16

நான் ரசித்த சிரிப்புக்கள் 16

என்னது பெண்ணை ஆணாகவும் ஆணை பெண்ணாகவும் மாத்துறாங்களா எங்கே?
  வேறெங்கே எல்லாம் வாக்காளர் அடையாள அட்டையிலதான்!
                          சி.மணி

எதுக்கு அடிக்கடி என் முகத்துல தண்ணி தெளிக்கறீங்க?
உங்கப்பா உன்ன பூ மாதிரி பார்த்துக்க சொன்னாருல்ல அதான்!
                            மதன்குமார்.

வாஸ்கோட காமா யாருன்னு தெரியுமா?
தெரியாதுமிஸ்!
கொஞ்சமாவது படிப்புல கவனம் செலுத்து!
பூஜா ஆண்ட்டி யாருன்னும் தெரியுமா மிஸ்?
தெரியாது ஏன் கேக்குற?
உங்க ஹஸ்பெண்ட் மேல கொஞ்சமாவது கவனம் செலுத்துங்க மிஸ்.
                         சதீஷ்குமார்.

என்னப்பா மாத்திரையோட சைடைல்லாம் வெட்டிகிட்டு இருக்கே?
அதுவா மாத்திரையை சாப்பிட்டா எந்த சைடு எஃபக்டும் வந்துட கூடாதுல்ல!
                             வி.வசுதா.
என்னடா கணக்கு தப்பா போட்டுட்டு டான்ஸ் ஆடுற?
நீங்கதானே டீச்சர் சொன்னீங்க கணக்கு தப்பா இருந்தாலும் ஸ்டெப்ஸுக்கு மார்க் போடுவேன்னு!
                      என் சௌபர் சுபுஹன்.

ஆணாக இருந்தால் ‘குரு’ன்னு அழைக்கிறோம் பெண்ணாக இருந்தால் எப்படி அழைப்போம்?
“குருவி”
                         சாலினி.

கடவுள் டாக்டர் ரெண்டு பேருக்கும் கோபம் வர மாதிரி நடந்துக்க கூடாது!
கடவுளுக்கு கோபம் வந்தால் டாக்டர்கிட்ட அனுப்பிடுவாரு ! டாக்டருக்கு கோபம் வந்தால் கடவுள்கிட்ட அனுப்பிடுவாரு!
                     வி.ஜே.பத்மப்ரியா
மன்னா! எட்டு திசைகளிலும் நமக்கு எதிரிகள் சூழ்ந்துவிட்டார்கள்!
  அடக்கடவுளே திக்கெட்டும் இக்கெட்டா?
                        வீ.விஷ்ணுகுமார்.

எனக்கும் டாக்டருக்கும் சின்ன வித்தியாசம்தான்! ஆனா அவரை மட்டும் எம்.பி.பி.எஸ்னு கொண்டாடுறீங்க?
  என்ன வித்தியாசம்?
நான் டோக்கன் கொடுக்கறேன்! அவர் டிக்கெட் கொடுக்கிறார்!
                            சிக்ஸ் முகம்.
நான் முடிவு எடுத்தா எடுத்ததுதான்!
உங்கள யாரு அதையெல்லாம் எடுக்க சொன்னது! போட்டுட்டு போங்க!
                         விகட பாரதி.
இளைஞர் அணித்தலைவர் பதவி கேக்குறீங்களே.. உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?
கட்சிக்காக 60வருஷம் நாயா உழைச்சி இருக்கேன்!
                          வி.சாரதி டேச்சு.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதற்காக எங்கள் தொலைக்காட்சி சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் தலைவரே!
 நீங்க கேள்வி கேட்டீங்க! நான் பதில் சொன்னேன்.. பங்கு எங்கே கொடுத்தீங்க?
                               சிக்ஸ் முகம்.
தலைவரே உங்களுக்கு ஸ்கூல்ல பாடம் எடுத்த வாத்தியார் உங்களை பார்க்கணும்னு வந்திருக்கிறார் உள்ளே அனுப்பட்டுமா?
  வெளியே அனுப்பு! அந்த ஆள் பொய் சொல்றார்!
                       போளூர் சி.ரகுபதி.

ஆயிரக்கணக்கில் ஜோடி சேர்த்து வைப்பவர் எங்கள் தலைவர். மத்திய அரசில் இருந்துகொண்டு ஒரு டென்னிஸ் பிளேயருக்கு உங்களால் சரியான ஜோடி சேர்த்துவைக்க முடிந்ததா?
                   தே.ராஜாசிங் ஜெயக்குமார்.

சொதப்பறதே நம்ம தலைவரோட பொழப்பா போச்சு!
இப்ப அப்படி என்ன செஞ்சார்?
புதுக்கோட்டையில நீங்கன்னா, பாளையங்கோட்டையில நாங்க மட்டும் தான்னு அறிக்கை விட்டிருக்கார்!
                       எஸ் ரஜினி வெங்கடாசலம்.

எங்கள் தலைவரை கடத்தல் வழக்கில் கைது செய்து விடலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்! அவர் காலத்தைத்தான் வெட்டியாக கடத்துகிறாரே தவிர வேறு எதையும்  கடத்தவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்!.
                        இரா.வசந்த ராசன்.

நன்றி:  மங்கையர் மலர், ஆனந்தவிகடன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
 

Comments

 1. ஹா ஹா ஹா.. அருமை நண்பா!

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றி நண்பா!

   Delete
 2. ///
  வாஸ்கோட காமா யாருன்னு தெரியுமா?
  தெரியாதுமிஸ்!
  கொஞ்சமாவது படிப்புல கவனம் செலுத்து!
  பூஜா ஆண்ட்டி யாருன்னும் தெரியுமா மிஸ்?
  தெரியாது ஏன் கேக்குற?
  உங்க ஹஸ்பெண்ட் மேல கொஞ்சமாவது கவனம் செலுத்துங்க மிஸ்.
  ///

  ஹி ஹி தூள இது மட்டும் அல்லை அனைத்தும் செம :D

  ReplyDelete
 3. ஹா..ஹா.. நகைச்சுவைகளின் நல்லதொரு தொகுப்பு...

  நன்றி...

  ReplyDelete
 4. நீங்களும் எழுதலாமே நகைச்சுவைத் துணுக்குகளை...உங்கள் பதிவுகளில் தெரிகிறதே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆலோசனைக்கு நன்றி நண்பரே! சில துணுக்குகள் ஆரம்ப காலத்தில் எழுதினேன்! இப்போது கொஞ்சம் மக்கர் பண்ணுவதால் எழுதமுடியவில்லை!

   Delete
 5. முதல் ஜோக் நல்ல இருக்கு
  ஜோக் மட்டும் இல்லை உண்மையும் கூட

  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

  ReplyDelete
 6. ”வாடா மாப்பிள்ள வாழைப்பழ தோப்புல” என்பது மாதிரி அருமையான தொகுப்பு. தம்பி உன்னை மெச்சினோம்.

  கண்ணா இன்னைக்கு எதுக்கு அண்ணா நல்ல கமெண்ட் போட்டுகினுறேன் பார்கிறியா..... ஏன்னா இரண்டு நாளா என் சைட்லேயும் நான் போய் படிக்கிற சைட்லேயும் நீ துண்டே விரிக்கலை.

  இன்னொரு லட்டு திங்க ஆசையா..அப்ப்டின்னா இப்படி சூடு கண்ணா
  ! டெய்லிஇப்படி நல்ல புள்ளய இருந்தியானா, ஆஹா பிரமாதம், அருமையான தொகுப்பு நண்பரே, அசத்துங்க, வெளுத்து கட்டிடீங்க, எங்காதான் இவ்வளவு விசயம் படிக்கிறீங்களோ என்பது மாதிரி அருமையான கமெண்ட்களை அண்ணன் போட்டு தருகிறேன்.


  மெய்யாலுமே இந்த ஜோக்ஸ் சூப்பர் ராஜா.

  கொண்றைவானத்தம்பிரான்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2