கழுதை! கௌரவம் கிடைக்கலன்னா!

பதவிக்கு மரியாதை!

கடவுள் உருவம் செதுக்கப்பட்டிருந்த கல் ஒன்றை ஓர் ஊரிலிருந்து இன்னோரு ஊருக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அதை ஒரு கழுதையின் மேல் ஏற்றினார்கள். கழுதையின் சொந்தக்காரன் அதை ஓட்டிக் கொண்டு புறப்பட்டான்.
  வழியில் மக்கள் பலர் கழுதையின் மேலிருந்த கடவுள் சிலையை கண்டார்கள். எல்லோரும் வணங்கினார்கள்.
   இதைப்பார்த்த கழுதை தன்னைத்தான் மனிதர்கள் வணங்குகிறார்கள் என்று நினைத்தது. அதற்கு பெருமை பிடிபடவில்லை. மனிதர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டதுபோல தலையை ஆட்டிக்கொண்டு கம்பீரமாக நின்றது.
  அதன் உள்ளக் கருத்தை புரிந்து கொண்ட சொந்தக்காரன், ‘ஏ கழுதையே! உனக்கு இவ்வளவு திமிரா? கழுதையை மனிதர்கள் வணங்கும் காலம் எப்போதும் வராது. நட” எண்று அதை அடித்து விரட்டினான்.
    *******************************************************************************************
   இந்த கதையை சமீபத்தில் புத்தகம் ஒன்றில் படித்ததும் பிடித்து போனது. மனிதர்கள் நாமும் இந்த கழுதையைப் போலத்தான் நடந்து கொள்கிறோம். உருவத்திற்கு ஏது கவுரவம். நம் பண்புக்குத்தான் கவுரவம் உண்டு.
   சிலர் இப்படித்தான்! நாம் ஏதாவது பதவியில் இருக்கும் வரையோ அல்லது நம்மால் ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றாலோ சுற்றி சுற்றி வந்து நம்மை கவனித்து மரியாதை செய்து கொண்டிருப்பர். காரியம் ஆனதும் கண்டு கொள்ளமாட்டார்கள்.
   இன்னும் சிலர் ஒரு பதவியில் இருக்கும் போது பலர் தம்மை வணங்குவதையும் நாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்றும் நினைத்து வீண் பெருமை பேசிக் கொள்ளுவர்.டாம்பீகமாக தனக்குத்தான் இத்தனை கவுரவம் என்று நினைத்துக் கொள்வர்.
   உண்மையில் அது உண்மையான மரியாதை அல்ல! அவருக்கான மரியாதை அல்ல அது அவர் வகிக்கும் பதவிக்கான மரியாதை! ஒருவனிடம் மிகுந்த பணம் இருக்கிறது என்றால் அவனை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். அவன் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடும்! மறுத்து பேசாது! அவரும் தனக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று நினைத்து பெருமித பட்டுக் கொள்ளலாம்! ஆனால் அது நிலையானது கிடையாது.
   பொதி சுமந்த இந்த கழுதையை வணங்கிய கதையாகிவிடும்! நாம் நம் உண்மை நிலையை உணர்ந்து நடந்து கொண்டால் நம் கவுரவம் நம்மை காப்பாற்றும்!

   ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்லியிருக்கேன்! இன்னும் விவரமா சொல்ல விவரம் பத்தலை! அதுவும் இல்லாம நிறைய வேளைப்பளு இருக்கு! அதனால இன்னிக்கு உங்கள இதோட விட்டுடறேன்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே! நன்றி!

Comments

 1. மனிதர்கள் நாமும் இந்த கழுதையைப் போலத்தான் நடந்து கொள்கிறோம். உருவத்திற்கு ஏது கவுரவம். நம் பண்புக்குத்தான் கவுரவம் உண்டு.
  சிறந்த கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. கழுதை....கழுதை தான்

  ReplyDelete
 3. //தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே! நன்றி!//

  யோக்யன் வர்றான் சொம்ம்பை உள்ள வைன்ன கதையா .... என்னா மேன் என்னா ஸ்டேட்மெண்ட் இது.

  அங்க இங்க எதையாவது பிறாண்டி கொண்டாந்து அதை ஒரு பதிவுனு போட்டுட்டு.. கருத்து கருத்துன்னு அலையுற... என்னா ? யாரும் கேட்டகமாட்டாங்கன்னு நினைச்சுகினியா ?

  என்னா சுரேஷ் மனுசா சொந்தமா எதாவது எழுது தம்பீ.... காக்கை பறந்துச்சுன்னு எழுது இல்லை நான் காலாட்டிக்கிட்டு ரோட்ட பாத்துகினு உட்காந்துகினு இருந்தேன்...அப்ப சிங்கம் ஜீப் ஓட்டிக்கிட்டு போச்சுனு எழுது ...எதையாவது சொந்தமா பிறாண்டி வை அண்ணன் வந்து நல்ல கருத்தா சொல்றேன். காலம் பொன் போன்றது காப்பி பேஸ்ட் பண்னி கரியாக்காதேப்பா.....

  கொண்றைவானதம்பிரான்

  ReplyDelete
  Replies
  1. எல்லா பதிவிலயும் குறை கண்டுபிடிக்கும் நக்கீரரே முதல்ல தைரியம் இருந்தா உங்க சொந்த புரொபைல்ல கமெண்ட் போடுங்க! முடிஞ்சா என்னோட பதிவான எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ் போய் படித்துவிட்டு வாருங்கள்! இதை கூட பிச்சை எடுப்பதாக கூறுவீர்கள்! உங்கள் கமெண்ட்களுக்கு எல்லாம் விளக்கமாக ஒரு பதிவு விரைவில் போடுகிறேன்! அப்போதாவது நல்ல கருத்து சொல்ல முயலுங்கள்! நன்றி நண்பரே!

   Delete
 4. கதையும் கருத்து அருமை! நன்றி!...

  ReplyDelete
 5. உதாரணத்துடன் நல்ல கருத்து... நன்றி...

  ReplyDelete
 6. கருத்திட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2