த்ரி ரோஸஸ்! மணிப்பூர் மகாராணியும்! அம்மன் வேஷக்காரியும்

மணிப்பூர் மகாராணி மேரி கோம்!

லண்டன் ஒலிம்பிக்கில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட பெண்கள் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் மேரி கோம். இந்தியாவின் சிறிய பின் தங்கிய மாநிலம் மணிப்பூர். இந்த மாநிலத்தின் சுரத் சந்த்பூர் மாவட்ட கிராமமான கங்காதெய் என்ற ஊரில்தான் இந்த வீராங்கணை  வசிப்பது. பத்தாம் வகுப்பு கூட பாஸ் செய்ய வில்லை மேரி கோம். இந்த 29 வயது வீராங்கணைக்கு இரு மகன்கள். 5அடி இரண்டு அங்குல உயரமே கொண்ட இவர் தனது  விடா முயற்சியால் ஆணாதிக்க  போட்டியில் உலக அளவில் சாதித்து ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.துவக்கத்தில் வீட்டுக்கு தெரியாமல் கலந்து கொண்ட இவர்2000ல் மணிப்பூர் மாநில சாம்பியன் ஆன போதுதான் வீட்டுக்கு விசயம் தெரிந்தது.
18 வயதில் தனதுமுதல் சர்வதேச போட்டியில் உலக சாம்பியன்ஷிப் 2001ல் வெள்ளி வென்றார். 2002 ,05,06,08, ல் தங்கம் வென்ற இவர் இரண்டு வருட இடைவெளிக்குப்பின் 2010ல் மீண்டும் தங்கம் வென்று 5முறை தங்கம் வென்ற வீராங்கனையாக ஜொலித்தார்.
ஒலிம்பிக்கில் 51 கிலோ பிரிவில் பங்கேற்க வேண்டும் என்பதால் தீவிர பயிற்சியோடு தன் வழக்கமான 48கி எடையிலிருந்து 51 கிலோவாக மாற எடையை அதிகரித்தார். இவரது பயிற்சியாளரை ஒலிம்பிக்கில் அனுமதிக்க வில்லை! இருந்த போதும் தனி ஆளாக போராடி வெண்கலம் வென்ற அவர் தங்கம் வெல்லாததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். இது போன்ற தங்கங்களை நமது அரசாங்கம் சரியாக ஊக்குவித்தாலே நிறைய தங்கங்கள் கிடைக்கும்!  ஆனால் நமது அரசியல் வியாதிகளுக்கோ பணம் சேர்ப்பதில்தானே குறி! பதக்கம் வந்தால் என்ன போனால் என்ன?

 இன்று தனிநபர் மல்யுத்தத்தில் யோகேஷ்வர் தத் மேலும் ஒரு வெண்கலபதக்க்ம் பெற்று தந்து இந்தியாவின் அதிக பதக்க சாதனை செய்ய வைத்துள்ளார். இதுவரை இந்தியா ஐந்து பதக்கங்கள் வாங்கியதே இல்லை! இந்த முறை ஐந்தாவது பதக்கம் வாங்கியுள்ளது. பத்து பதக்கம் எதிர்பார்த்தோம். ஒரு தங்கம் கூட இல்லையென்றாலும் சில தங்கங்கள் பெற்றெடுத்த வெண்கலமே நமக்கு ஒரு சாதனைதானே!


  அம்மன் வேசத்தில் பூ விற்கும் பெண்மணி!

ஆடிமாதம் என்றால் அம்மனுக்கு வைபவம் தான் கூழ் வார்த்தல் அபிஷேகம் ஆராதனை என்று மாதம் முழுவதும் களைகட்டும். இந்த ஆடி மாதத்தில் கோயம்பேட்டில் பூ கட்டி விற்கும்  மாலா அம்மன் அவதாரம் எடுத்துள்ளார்.
பாடியநல்லூரை சேர்ந்த மாலா காதலித்து கணவனை கரம் பிடித்துள்ளார். கணவனோ இரு பிள்ளைகளை கொடுத்தபின் மனைவியின் தங்கையை மணமுடித்துக் கொண்டு விட மனம் வெறுத்த  மாலா அம்மன் வேசம் போட துவங்கி உள்ளார். அவரது குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி! அவரிடம் முறையிட்ட மாலா அவர் போலவே வேடம் அணிந்து வாழத்துவங்கினார்.
முகம் முழுக்க மஞ்சள் வட்ட நிலவு போல குங்கும பொட்டு, கால் சிலம்பு ,சூலாயுதம் என்று இவர் வலம் வந்தால் சாட்சாத் அம்மனே தான் வருவது போல தோன்றும்.அதிகாலை 4 மணிக்கு கதவை தாழிட்டு பூஜை செய்யும் இவர் ஒரு மணி நேரம் வரை யார் கூப்பிட்டாலும் சட்டை செய்யமாட்டாராம். வானமே இடிந்து விழுந்தாலும் கதவை திறக்க மாட்டேன் என்று கூறும் இவர் கணவரின் நம்பிக்கை துரோகமே தன்னை இவ்வாறு மாற்றிக் கொள்ளச் செய்தது என்றும் அவரோடு வாழ பிடிக்க வில்லை. தனியாக வாழும் போது மற்ற ஆண்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க அம்மன் வேசத்தில் இருப்பதாக கூறுகிறார். இப்படி இருந்தாலும் சில ஆண்களின் பார்வை சரியில்லை அப்படி பார்க்கும் போது கோபம் வரும் என்று கூறுகிறார். வித்தியாசமான பெண்மணிதான்.

குறை சொல்லாதே! ஜென் கதை!

துறவி ஒருவர் தன் மடாலயத்தில் சீடர்களுடன் தங்கி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் தன் சீடனுடன் டீ குடிக்க சென்றார். அப்போது அந்த சீடனான ரோஷி என்பவன் துறவியிடம் "ஏன் தான் இந்த ஜப்பானியர்கள் இந்த டீ கோப்பையை இவ்வளவு மெல்லியதாக தயாரித்துள்ளனரோ, இது கை நழுவி கீழே விழுந்தாள் உடனே உடைந்துவிடும் போலவும் உள்ளது. இதை கொஞ்சம் பருமனாக செய்திருந்தால் கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்கும் அல்லவா!" என்றான்.
அதற்கு குருவும் அவனிடம் "அவர்கள் கோப்பையை மெல்லியதாக தயாரித்ததில் தவறில்லை. அவற்றை நம்மால் சரியாகக் கையாளத் தெரியாததே தவறு. முதலில் நாம் எந்த ஒரு பொருளையும் எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதை விட்டு மற்றவர்களை குறை கூறுவது தவறு" என்று கூறினார்.
இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால் "நாம் நம்மை பற்றி முழுவதும் அறியாமல் பிறரை குறை கூறுவதில் முழுமையாக உள்ளதால் எல்லாம் தவறாகவே தெரிகிறது. ஆகவே பிறரைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு நம்மை நாம் திருத்திக் கொள்ள முயல வேண்டும்" என்பது நன்கு புரிகிறது.

டிஸ்கி} ஒலிம்பிக்கில் இன்னும் ஒரு பதக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் சுஷில் குமார். சென்ற முறை வெண்கலம் வென்ற இவர் இந்த முறை அரையிறுதியில் வென்று இறுதி சுற்றினுள் நுழைந்துள்ளார். வென்றாலும் தோற்றாலும் பதக்கம் ஒன்று உறுதி ஆகி உள்ளது. வெல்டன் சுஷில் குமார். உங்களை போன்றவர்களால் நாடு பெருமை அடைகிறது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
 

Comments

  1. // சில தங்கங்கள் பெற்றெடுத்த வெண்கலமே நமக்கு ஒரு சாதனைதானே! // உண்மை தான் .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழா!

      Delete
  2. வாழ்த்துகள் சொல்லி மகிழ்வித்து உற்சாகம் கொடுப்போம் !

    ReplyDelete
  3. இந்த வருடம் நிறைய பதக்கங்கள்...

    ReplyDelete
  4. கிடைத்ததை நினைத்து பெருமை பட வேண்டியது தான்... மேலும் கிடைக்கும் வழியை யோசிக்க வேண்டியது தான்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…


    அப்படிச் சொல்லுங்க...! (இது என் தளத்தில் !)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2