அஞ்சு ரூபாயில் 180 கி.மீ செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ! மாணவர்கள் சாதனை!
வெறும் 5 ரூபாய்க்கு சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை பயணிக்கக் கூடிய
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெரம்பலூர், தனலட்சுமி சீனிவாசன் எஞ்சினியரிங்
கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
தனலட்சுமி சீனிவாசன்
எஞ்சினியரிங் கல்லூரியில் பயின்று வரும் சி.பிரடெரிக், கே.கோபிநாத்,
டி.மனோஜ் பிரபாகர், எஸ்.குரு மற்றும் கணேஷ் பிரியன் ஆகிய மாணவர்கள் இணைந்து
இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கியுள்ளனர்.
சிறிது நேரம்
சார்ஜ் செய்து கொண்டு ஸ்கூட்டரை கிளப்பினால் போதும். இரண்டு
சக்கரங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார்கள் மூலம் மின் உற்பத்தி
செய்யப்பட்டு பேட்டரிகளில் மின்சாரம் சேகரிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில்
பொருத்தப்பட்டிருக்கும் மற்றொரு மோட்டார் பேட்டரியில் சேமிக்கப்படும்
மின்சாரத்தை பயன்படுத்தி ஸ்கூட்டரை இயக்குகிறது.
தற்போது சாதாரண
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒரு முறை அதாவது 8 மணி நேரம் சார்ஜ் செய்தால்
அதிகபட்சம் 60 கிமீ வரை செல்ல முடியும். ஆனால், இந்த ஸ்கூட்டருக்கு ஒரு
முறை சார்ஜ் செய்யும்போது ஒரு யூனிட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி 180
கிமீ தூரம் வரை செல்ல முடியும். இதற்கு 5 ரூபாய் மட்டுமே செலவாகும்
என்கின்றனர் மாணவர்கள்.
பெட்ரோல், டீசல் எரிபொருளால் காற்று
மாசுபாடு ஏற்பட்டு வரும் நிலையில், இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.
இந்த
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மாணவர் பிரடெரிக் சமீபத்தில் பலர் முன்னிலையில்
ஓட்டிக் காட்டினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி பாராட்டு
தெரிவித்தனர். இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எதிர்காலத்துக்கு தேவையான
அடிப்படை தொழில்நுட்பமாக அமையும் என கருத்து தெரிவித்தனர்.
இந்த
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வடிவமைத்த மாணவர்களை கல்லூரி முதல்வர் டாக்டர்
சார்லஸ், தாளாளர் சீனிவாசன் ஆகியோர் வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த புதிய
எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழில்நுட்பத்தை எஞ்சினியரிங் சயின்ஸ் அண்டு
டெக்னாலஜி என்ற பன்னாட்டு ஆய்வு இதழ் ஏற்றுக் கொண்டுள்ளதாக கல்லூரி
தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி } தட்ஸ் தமிழ்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
சாதனைக்கு சொந்தக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதமிழக மாணவர்களின் சீரிய முயற்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும்.! பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteபயனுள்ள செயல்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
மாணவனுக்கு எமது வாழ்த்துகள்...
ReplyDeleteபயனுள்ள கண்டுபிடிப்பு..பாராட்டப்ப்பட வேண்டியவர்.
ReplyDeleteமாணவர்களை பாராட்டுவோம்..
ReplyDeleteசாதனைகள் ஊக்குவிக்கப் பட வேண்டும்! மாணவர்கள் தொடர்ந்து இந்த ஆராய்ச்சியை கொண்டு செல்ல வேண்டும்!
ReplyDeleteசாதனைக்குத்தலைவணங்கி என் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.மிக்க நன்றி சொந்தமே!இதை பதிந்தமைக்காய்!
ReplyDelete\\சிறிது நேரம் சார்ஜ் செய்து கொண்டு ஸ்கூட்டரை கிளப்பினால் போதும். இரண்டு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரிகளில் மின்சாரம் சேகரிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் மற்றொரு மோட்டார் பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி ஸ்கூட்டரை இயக்குகிறது.\\ஒரு அறிவியல் அடிப்படை விடயம் இருக்கிறது. அது ஒருவித ஆற்றலை இன்னொரு வித ஆற்றலாக மாற்றும்போது 100 % சதவிகிதம் மாற்ற முடியாது, இழப்பு இருக்கும். நீர் வீழ்ச்சியில் டைனமோவை வைத்து மின்சாரம் தாரிக்கலாம், ஆனால் ஒரு பேட்டரியில் இருக்கும் மின்சக்தியை வைத்து டைனமோவை இயக்கி, அது மின்சாரம் தாயாரித்து மீண்டும் பேட்டரிக்கே வந்தால்......... ஒரு சுத்து சுத்தி மீண்டும் வரும் போது அங்கங்கேயும் இழப்பு ஏற்ப்பட்டு பாதிக்கும் மேல் காணாமல் போயிருக்கும். இது சிறந்த வழியல்ல. இராமர் பெட்ரோல் கதை மாதிரியே இருக்கு.
ReplyDeleteசாதனை மாணவ்ர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல பயனுல்ள்ள தகவல்கள்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Has to be appreciated...Thanks for sharing
ReplyDeleteNice to hear new inventions.
ReplyDeleteCheck Tamil's No.1 Informative,Best Time pass website http://tamilinfoway.com