ஆன்றோர் மொழிகள்!

ஆன்றோர் மொழிகள்!

துன்பத்தை கண்டு இரங்குவது மனித இயல்பு. அதை நீக்குதல் தெய்வப்பண்பு.
                                              எமர்சன்.

அனுபவம் சிறந்த பள்ளி, அதனால் பள்ளிக் கட்டணமும் அதிகம்தான்!
                                           ஆஸ்பர்.
அதிகாரத்தை நாடி புலியின் முதுகில் சவாரி செய்யும் அறிவிலிகள், இறுதியில் புலியினால் விழுங்கப்படுவர்.
                                                 ஜான்.எஃப்.கென்னடி.
எளிதில் கிடைக்கும்வெற்றி மதிப்பற்றவை. கடுமையான போராட்டத்தால் வருபவைகளேமதிப்புயர்ந்த வெற்றிகள்!
                                           பீச்செர்.
மனசாட்சிதான் நம் எல்லோரையும் கோழைகளாக்கி விடுகிறது.
                                       ஷேக்ஸ்பியர்.

தேவைகள் குறையும் அளவே தெய்வீகத்தன்மை அடைவோம்.
                                            சாக்ரடீஸ்.
உனக்கு நீ உண்மையாக நடந்து கொண்டாயானால் மற்றவர்களுக்கு நீ உண்மையுள்ளவனாக இருப்பாய்.
                                     ஷேக்ஸ்பியர்.
உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் மனிதன், தனக்குத்தானே அதிபதியாக இருக்க முடியாது.
                                        ஸ்பினோஸோ.
பேராசை உடலிச்சை, தற்பெருமை ஆகிய மூன்றும் மக்களை அழித்துவிடும்.
                                          நபிகள் நாயகம்.
எண்ணத்தைக் கோண்டே செயல்கள் தீர்மானிக்கப்படும்.
                                      நபிகள் நாயகம்.
நம்பிக்கை எதிர்காலத்திற்கு ஒளி தரும்.
                                 மூர்.
எந்தவித முயற்சியும் எடுக்காமல் இருப்பவர்களுக்கு கடவுள் உதவி செய்வதில்லை!
                                                ஸாபாக்ளீஸ்.
சாதாரண செயல்கள் கூட அன்புடன் கலந்தால் அழகு பெறுகின்றன.
                                              ஷெல்லி.
துன்பங்களில் வடித்தெடுக்கப்பட்ட சாறுதான் அனுபவம்.
                                      ஹெல்ப்ஸ்.
நாம் நம்பிக்கையினால் நடக்கிறோம். பார்வையினால் அல்ல.
                                ஜே.எம். பெர்ரி.

உனக்குத் தெரிந்ததை பற்றி சிறிதளவு பேசு. தெரியாததைப்பற்றி எதுவும் பேசாதே.
                                             கர்னாட்.
யாராவது குறை கூறினால் அதில் உண்மை இருப்பின் திருந்தி விடு.பொய்யானால் நகைத்துவிடு.
                                        எபிக்டேட்டஸ்.

பேச்சு வெள்ளியைப் போன்றது. மவுனம் தங்கத்திற்கு ஈடானது.
                                        கார்லைல்.

இன்பத்தில் இனியதும் துன்பத்தில்கொடியதும் காதல்.
                                     பெய்லி.
அறிவின்மை கேவலம், அதைவிட கேவலம் அறிய மனமில்லாமை!
                                         ஜேம்ஸ் ஆலன்.

தங்கள்வருகைக்குநன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. சிறப்பான தொகுப்பு... பாராட்டுக்கள்...

  அனைவருக்கும் அன்பான இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா! தங்களுக்கு என் இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள்!

   Delete
 2. //யாராவது குறை கூறினால் அதில் உண்மை இருப்பின் திருந்தி விடு.பொய்யானால் நகைத்துவிடு.///

  அருமை நண்பரே!

  ReplyDelete
 3. ஆன்றோர் மொழிகள் அவசியம், அதை நாம் வாழ்கையில் கடைப்பிடிப்பது நமக்கு வாழ்க்கை பற்றிய நல்ல அணுகுமுறை தரும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. எம் தளத்திற்கு தங்களின் நல்வரவுக்கு நன்றி!

   Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2