குஷ்பாபிஷேகம்! ஓல்ட் ஜோக்ஸ்

ஓல்ட் ஜோக்ஸ்

டாக்டர் அந்த பேஷண்ட் தையலை பிரிக்கக்கூடாதுன்னு அடம்பிடிக்கிறாரு!
ஏன் என்ன சொல்றாரு?
ரெண்டாயிரம் செலவு பண்ணி போட்ட தையலை ஏன் பிரிக்கணும்னு கேக்கறாரு!
                  அ.தெய்வசிகாமணி.

ஏன் உங்க டிவியில ஒரே சண்டைக்காட்சியா வருது?
டிஷ் ஆண்டெனாவுக்கு பதிலா தப்பா ‘டிஷ்யூம்’ ஆண்டெனானு எதையோ போட்டுட்டு போயிட்டானுங்க!
                            பாஸ்கி.

இன்ஸ்பெக்டர்! நேத்து எங்க வீட்டுல ஒரு நகையை காணோம்னு ரிப்போர்ட் கொடுத்தேன்.. ரொம்ப சாரி! அந்த நகை கிடைச்சிடுச்சி!
  இப்ப நாங்க என்னம்மா பண்றது? நாங்க திருடனை பிடிச்சிட்டோமே!
                             கார்த்திக்.

ஒரு லாரி நிறைய பழைய பாய்  தலையணைகளா ஏத்திகிட்டு போறாங்களே?!
 ஏதாவது ஆபிஸ்ல ரெய்டு பண்ணியிருப்பாங்க!
                       கே.ஏ.கே விவேக்குமார்.

என்னதான் உங்களுக்கு ஞாபக மறதின்னாலும் வெள்ளப்பகுதியை பார்க்கப் போன இடத்தில், ‘மேலும் தண்ணீர் விட ஆவண செய்வேன்’னு பேசியிருக்க கூடாது!
                   எஸ். மஞ்சு பிரியன்.

ஹலோ டாக்டர்! நான் தான் ராமசாமி.. போன வருஷம் உங்க கிட்ட ஆபரேஷன் செய்துகிட்டேனே...!
   ஸாரி! ராங் நம்பர்!
                வேதபுரி.எஸ்.ரமேஷ்.

உங்களுக்கு கால்ல அடிபட்டதுதான் சரியாப் போச்சே! இன்னும் ஏன் நொண்டி நொண்டி நடக்கறீங்க?
நாளைக்குத் தானே எங்க கட்சி தலைவர் என்னை நலம் விசாரிக்க வரப்போறார்!
                    பா.சித்ரா.

டைரக்டர் சார்! இந்த படத்திலாவது சொந்தக்குரல்ல பேச சான்ஸ் தாங்க!
  சரிம்மா! நீங்க ஹீரோவுக்கு டப்பிங் வாய்ஸ் பேசிடுங்க!
                             தஞ்சை மாதவன்.

நான் குடிச்சிட்டு போறது என் பொண்டாட்டிக்கு பிடிக்கலை!
குடிக்காம போகவேண்டியதுதானே!
குடிக்காம போனா எனக்கு பொண்டாட்டியை பிடிக்கமாட்டேங்குதே!
                     எஸ் அருண்.

ஏன் டாக்டர் எனக்கு ஆபரேஷன் பண்ணிட்டு அழறீங்க?
அழலே ஆனந்த கண்ணீர்! சாதாரண எட்டாங்கிளாஸ் படிச்ச நான் ஆபரேசன் பண்ற அளவுக்கு வாழ்க்கையிலே உயருவோம்னு நினைக்கலை!
                         ஆர்.ஜே அனுசூயா.

போலீஸ் திருடனிடம்,
   கபாலி உன் தொழிலுக்கும் வீரம் தேவை என் தொழிலுக்கும் வீரம் தேவை.. என்ன நான் சொல்றது?
உண்மைதான் எஜமான்.. ஆனா என் தொழிலுக்கு கொஞ்சம் புத்திசாலித் தனமும் தேவையாச்சுங்களே!
                             அ.தெய்வசிகாமணி.

நீ ஏன் உன் மனைவியை கொலை செய்தாய்?
என்கிட்ட அவள் ‘நான் உங்க முன்னாடி போயிடனும் உங்களுக்கு முன்னாடி போயிடனும்னு’ அடிக்கடி சொல்லிகிட்டே இருந்தாள்... அவ ஆசையை நிறைவேத்தி வைச்சேன்! இது தப்பா?
                              அ.தெய்வசிகாமணி.


சிக்கண நடவடிக்கை தேவைதாங்க! அதுக்காக சுற்றறிக்கையை இப்படி உள்ளங்கையில எழுதிட்டு வந்து காட்டறது கொஞ்சம் கூட நல்லா இல்லே!
         ஸ்ரீகலைமகள்.

வேலைக்காரியை நீங்க கை நீட்டி அடிச்சிருக்க கூடாது சார்!
சார்! நீங்க புரிஞ்சுக்காம பேசறீங்க... நான் அவளை வேலைக்காரியா நினைச்சு ஒருநாள் கூட பழகியதில்லை சார்!
                         அ.தெய்வசிகாமணி.

தலைவர் சமாதியை  கண்டுபிடிச்சிட்டீங்களா?
அதை ஏன் கேக்கறீங்க.. இங்க கூட ஏதோ பினாமி பேரைக் கொடுத்திருக்காராம்!
                         கார்த்திக்.

நீங்க எப்படி இவ்ளோ பெரிய அகராதி எழுதனீங்க?
ஒருநாள் நானும் என் சம்சாரமும் சண்டைபோட ஆரம்பிச்சோம்! வார்த்தைக்கு வார்த்தை வளர்ந்து போச்சு!
                          கார்த்திக்.

வெயில் காலம் வந்துடுச்சேன்னு நினைச்சா பயமா இருக்கு!
  ஏன்?
 ஆபிஸூக்கு லீவு போட்டுட்டு வடாம் பிழியணுமே!
                     ஆர்.வசந்தகுமார்.

என்னங்க கோயில் கும்பாபிஷேகத்திற்கு இவ்வளவு கூட்டம்?
போஸ்டர்ல ‘குஷ்பாபிஷேகம்’னு தப்பா போட்டுட்டாங்களாம்!
                  பாஸ்கி.

மிஸ்டர் கோ.. உங்களுக்கு போன் வந்திருக்கு!
ஏன் சார் கோபாலகிருஷ்ணன்னு கூப்பிடக்கூடாதா? எதுக்கு பெயரை சுருக்கிக் கொஞ்சமா’கோ’னு கூப்பிடறீங்க?
  உங்க மனைவிதான் உங்களை ‘கொஞ்சம்’ கூப்பிடச் சொன்னாங்க!
                       வி.கி.குமார்.

தமிழ்நாட்டிலிருந்து பெண்களை வெளிநாட்டிற்கு கடத்திகிட்டு போயிருக்கே.. இது எத்தனை காலமா நடக்குது?
 ரொம்ப பின்னோக்கிப் போகனும்னா, ராவணன் சீதையைக் கடத்திகிட்டு போன காலத்திலிருந்தே நடக்குதுங்க!
                               வாணி.
 நன்றி} ஆனந்தவிகடன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்தலாமே!

Comments

 1. ஹா... ஹா... நல்லா இருக்குங்க...

  ReplyDelete
 2. Good Jokes..thanks for sharing boss...

  ReplyDelete
 3. அன்புத் தம்பீ...

  அற்புதமான ஜோக்குகள். நீ சொல்லியடிச்சிருக்கே.
  //ஒரு லாரி நிறைய பழைய பாய் தலையணைகளா ஏத்திகிட்டு போறாங்களே?!
  ஏதாவது ஆபிஸ்ல ரெய்டு பண்ணியிருப்பாங்க!//

  விழுந்து விழுந்து சிரித்தேன். நிசமாவே நான் ஆபீஸ்ல தூங்க்குவேன் தெரியுமா ?

  பின்னூட்ட சூறாவளி தனபாலை இன்னும் கானோம்

  கொண்றைவானத்தம்பிரான்

  ReplyDelete
 4. பெயர்களோடு நகைச்சுவை

  இருந்தாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு

  ReplyDelete
 5. //
  வெயில் காலம் வந்துடுச்சேன்னு நினைச்சா பயமா இருக்கு!

  ஏன்?

  ஆபிஸூக்கு லீவு போட்டுட்டு வடாம் பிழியணுமே!
  ///

  ஹா ஹா ஹா செமையா இருக்கு!

  ReplyDelete
 6. ஹா... ஹா... நல்லா இருக்கு

  ReplyDelete
 7. குஷ்பாபிஷேகம்.....ம்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!