ருத்திராட்சம்! சில தகவல்கள்!
ருத்திராட்சம்! சில தகவல்கள்!
சிவனடியார்களும்
பிராமணர்களும் ருத்திராட்சம் அணிந்திருப்பர். அந்த ருத்திராட்சம் பற்றிய சில
தகவல்களை எளிமையாக தந்துள்ளேன். பிழைகள் இருப்பின் பொறுத்து சுட்டிக்காட்டவும்.
ருத்திராட்சம் தோன்றிய
கதை: முன்னொரு காலத்தில் திரிபுரர் என்ற அசுரர்கள் எவராலும் வெல்ல முடியாதவர்களாக
இருந்தனர். பிரம்மா விஷ்ணு, இந்திரன் போன்றவர்களுக்கும் தேவர்களுக்கும் தொல்லை
தந்த திரிபுரர்களை அழிக்க முயன்று முடியாது போனதால் சிவனிடம் வந்து முறையிட்டனர்.
அப்போது சிவன் ஆயிரம் வருடங்கள் நிஷ்டையிலிருந்து அகோர ரூபமாய் அக்கினி சுடராய்
இருந்தார். அவர் நிஷ்டையிலிருந்து விழித்ததும் அவரது கண்களில் இருந்து நீர்
துளிகள் விழுந்தன. அதில் இருந்து ருத்திராட்ச விருட்சங்கள் தோன்றின. அந்த
விருட்சங்களில் இருந்து சிவபெருமான் திருவுளப்படி முப்பத்தெட்டு விதமான
ருத்திராட்சங்கள் உண்டாகின.
வலக்கண்ணாண சூரிய
விழியில் இருந்து பன்னிரண்டு விதமான ருத்திராட்சங்களும் இடக்கண்ணான
சந்திரவிழியிலிருந்து பதினாறு விதமான ருத்திராட்சங்களும் நெற்றிக்கண்ணான
அக்னியிலிருந்து பத்துவிதமான ருத்திராட்சங்களும் தோன்றியது.
ருத்திராட்ச முகங்கள்:
ஒருமுகமுள்ளது சிவஸ்வரூபம். இது ப்ரம்மஹத்தியை நீக்கும்
இருமுகமுள்ளது தேவி ஸ்வரூபம்.
அது புத்தி பூர்வம் அபுத்தி பூர்வம் என்ற இருவிதமான பாவங்களை போக்கும்.
மூன்று முகமுடையது
அக்னிஸ்வரூபம், அது பெண்வதை செய்த பாபத்தை போக்கும்
நான்கு முகமுடையது
ப்ரம்மஸ்வரூபம், அது மனிதவதை செய்த பாபத்தை போக்கும்.
ஐந்து முகமுடையது
காலாக்னி என்ற ருத்ர ஸ்வரூபம். அது உண்ணக்கூடாததை உண்ட பாவத்தை போக்கும்.ஆறு
முகமுடையது சுப்ரமண்ய ஸ்வரூபம் பிராமண வதை செய்த பாவம் போக்கும்.
ஏழுமுகமுடைய ருத்திராட்சம் மன்மதஸ்வரூபம் அது
திருடிய பாவத்தை போக்கும்.
எட்டுமுகமுடைய
ருத்திராட்சம் விநாயகஸ்வரூபம் இது பலவிதபாவங்களை நீக்கி பரம பதத்தை
தரக்கூடியது.ஒன்பது முகமுடையது பைரவஸ்வரூபம் அது பல பிரம்ம ஹத்திகளையும்
போக்கக்கூடியது.பத்துமுகமுடையது விஷ்ணு ஸ்வரூபம் அது கிரக தோஷங்களையும் பூத பிசாச
பிரம்மராட்சஸ தோஷங்களை நீக்கும் பதினோரு முகமுடையது ஏகாதச ருத்திர ஸ்வரூபம் அது
ஆயிரம் அஸ்வ மேத யாகம் செய்த பலன் தரக்கூடியது இதைசிகையில் அணிய உகந்தது.
பன்னிரண்டு முகமுடையதுதுவாதசாதித்த
ஸ்வருபம். அது கோமேத அஸ்வமேத யாக பலன் தரும். பயத்தை போக்கும்.பதிமூன்று
முகமுடையது ஷண்முகனுக்கு ஈடானது. அது தாய் தந்தை உடன் பிறந்தாருக்கு செய்த
பாவங்களை போக்க கூடியது.சகல இஷ்ட சித்தி தரும். பதினான்கு முகமுடைய
ருத்திராட்சத்தை யார் அணிந்திருக்கிறானோ அவன் சிவபெருமானுக்கு இணையானவன் ஆவான்.
தேவர்களும் வணங்குவர்.
சிரசில் அணியும்
ருத்திராட்ச மாலையின் மணிகள் இருபத்தாறு.மார்பில் அணிய 50 மணிகள்,தோள்களில் அணிய
பதினாறு.மணிக்கட்டுகளுக்கு பன்னிரண்டு.
நூற்றிஎட்டு,ஐம்பத்துநான்கு,இருபத்து ஏழு, என்ற
எண்ணிக்கையோடு மணிகள் கோர்த்து அணிந்து கொள்ளலாம். இந்த ருத்திராட்சங்களை தரித்து
மந்திரம் ஜபித்து வந்தால் அவனுக்கு அஸ்வ மேத யாக பலன் கிடைக்கும்.
ருத்திராட்சத்தை கயிற்றொடு அல்லது தங்கம் மணி
முதலானவற்றொடு சேர்த்து கோர்த்து அணியலாம்.தூய்மையின்றி அணியக் கூடாது.ருத்திராட்ச
மரத்தின் காற்று பட்ட தூசி கூட புண்ணிய லோகத்தை அடைகிறது.
சிவலோகம் அடைந்த கழுதை: விந்திய மலைச்சாரலில் கழுதை ஒன்று திரிந்து
கொண்டு இருந்தது. அதன் முதுகின் மீது வியாபாரி ஒருவன் ருத்திராட்ச மூட்டைகளை ஏற்றி
ஓட்டிக் கொண்டு போனான். மூட்டையின் பாரம் தாங்காமல் அது வருந்தி தரையில் விழுந்து
மூச்சிழந்து உயிரை விட்டது. அப்போதே அது சிவஸ்வரூபம் பெற்று சிவலோகத்தை அடைந்தது.
ருத்திராட்ச மூட்டை சுமந்ததற்கே அதற்கு சிவலோகம் கிடைத்தது. எனவே பக்தி சிரத்தையுடன்
ருத்திராட்சம் அணிவதால் சிவனருள் கிடைக்கப் பெறுவோம்.ருத்திராட்சத்தை அணியும்
மனிதன் அதில் எத்தனை முகம் உள்ளதோ அத்தனை முகத்திற்கு ஒவ்வொரு யுகத்திலும்
சிவலோகத்தில் வைத்து பூஜிக்கப்படுவான்.
ருத்திராட்சத்தை
சிரசில் அணிந்து நீராடுபவனுக்கு கங்கையில் குளித்த பலன் கிடைக்கும் வறுமையில்
வாடுபவன் பக்தி சிரத்தையோடு ருத்திராட்சத்தை பூஜித்து அணிந்து வந்தால் விரைவில்
ராஜபோகம் அடைவான்.
ருத்திராட்சத்தை
எப்போது அணிய கூடாது?
தூங்கும் போதும் ஏதேனும் அருந்தும் போதும்
மற்றெந்த தொழிலை செய்யும்போதும் மலஜலம் கழிக்கும் போதும் ருத்திராட்சம் தரிக்க கூடாது.
அணியும் முறை:
சிரசில் ஈசான மந்திரத்தை ஓதியும் காதுகளில்
தத்புருஷ மந்திரத்தினை ஓதியும் நெற்றி இதயம் ஆகியவற்றில் அகோர பீஜ மந்திரத்தை
ஓதியும் வயிற்றில் வாம தேவ மந்திரத்தை ஓதியும் மற்ற அங்கங்களில் அங்க மந்திரங்கள்
ஓதியும் ருத்திராட்சத்தினை அணிய வேண்டும். குருவிடம் உபதேசம் பெற்று ருத்திராட்சம்
அணிவது சிறப்பு.
இந்த மந்திரங்கள்
அறியாதவர்கள் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் ஓதி அணிவது சிறப்பு.
சிறப்பு வாய்ந்த
ருத்திராட்ச மாலைகள் அணிந்து இறைவனை பூஜித்து நற்கதி பெறுவோமாக!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!
ருத்திராட்சத்தின் சிறப்புகள்... ஆனால் கவனம் மிகவும் தேவை... நன்றி...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சார்......
ReplyDeleteஅறியாது மற்றும் கேள்விப்படாதது...
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.
நல்ல தகவல்கள்! நன்றி...
ReplyDeleteஅருமையான பதிவு நண்பா, ருத்ராட்சம் குறித்த எனது பல சந்தேகங்களுக்கு விடையிருந்தது உங்களின் இந்த பதிவில், தொடரட்டும் உங்கள் சேவை!
ReplyDeleteஅறிந்தது அறியாதது அனைத்தும் இப்பதிவில் அறியப் பெற்றோம்! நன்றி..வாழ்த்துக்கள்!
ReplyDeleteஸகல பாவங்களும் நீங்கிவிடும் என்றொரு கருத்துடன் கழுத்தில் அணிந்து செய்யக் கூடாதவைகள் எல்லாம் நிறைய பேர் செய்து வருகின்றார். கலிகாலத்திற்கு இவை பொறுந்தாது. மற்றபடி எவ்வித விசேஷ பலனும் கிடைக்கப் போவதில்லை!. பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteஎன் அன்பு நண்பா,
ReplyDeleteபிரமாதமான பதிவு. இதத்தான் நண்பா உன்னிடம் நான் எதிர்பாத்தேன். என் விமர்சனங்களை அதை எப்படி எடுத்துக் கொள்ளனுமோ அப்படி எடுத்துக் கொண்டு, அழகாக செயலாற்றும் உன் நற் குணத்துக்கு நமஸ்காரம்.
நீ இப்ப எல்லாம் விளம்பரம் போட்றதில்லை... நீ என் பேச்சைக் கேட்டதால் நானும் உன் பேச்சைக் கேட்கிறேன் . எங்கே உனது பாராட்டுங்களேன் ப்ளீஸ் பதிவு. யாருக்கேனும் இதைப் படியுங்கள் என்றால், அதன் லிங்க்-ஐ தந்துவிட வேண்டும் தெரியுமோ...... லிங்க்+ஹெச்.டி.எம்.எல் என்று டைப் செய்தால் அதை எப்படி செய்யனும் என்று அறியலாம் அய்யனே. இது போன்ற டெக்னிக்கல் விஷயங்களில் ஐயமிருப்பின் அண்ணனிடம் கேட்டால் கிடைக்கும்.
கொண்றைவானத்தம்பிரான்
அறிந்து கொண்டேன் படங்கள் அருமை. இத்தனை விதமா? பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள் நண்பரே.
ReplyDeleteருத்திராட்சம் என்பது உடல் வெப்பத்தை தணிக்கும் possitive energy'ஐ கொடுக்கும் அவ்வளவே. நீங்கள் சொல்வதை பார்த்தால் எல்லா பாவங்களையும் செய்து விட்டு ருத்திராட்சை அணிந்தால் போதும் என்று கூறுவது போல் உள்ளது
ReplyDeleteஅறிந்தது அறியாதது அனைத்தும் இப்பதிவில் அறியப் பெற்றோம்! நன்றி..
ReplyDelete