சுதந்திர தினத்தில் சில தகவல்கள்!
ஜெய் ஹிந்த் என்ற கோஷத்தை முதலில் எழுப்பியவர்
யார்?செண்பகராமன் பிள்ளை.
தமிழ் நாட்டில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற
ஊர் எது? வேதாரண்யம்.
மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர்
யார்? கன்னியப்ப செட்டியார்.
இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்த ஆண்டு
எது? 1952
தமிழ் நாட்டில் விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு
சிறை சென்ற முதல் பெண்மணி யார்?டாக்டர் ருக்மணி லட்சுமிபதி.
கைதிகளுக்காக கைதிகளே கட்டிய சிறை எது? அந்தமான்
சிறை.
சுயராஜ்யம் என்ற சொல்லை முதன் முதலில்
உருவாக்கியவர் யார்? தாதாபாய் நவ்ரோஜி.
இந்திய தேசியப்பாடல் முதன் முதலில் எங்கு
பாடப்பட்டது? கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் 1911ல் பாடப்பட்டது.
முதன் முதலில் உருவாக்கப்பட்ட தேசியக் கொடியில்
நடுவில் அசோகச்சக்கரத்திற்கு பதிலாக எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன? வந்தே மாதரம்.
ஆங்கிலேயரை எதிர்த்து முதன் முதலில் முழக்கம்
செய்த வீரத்தமிழன் யார்? பூலித்தேவன்.
இந்தியாவின் தாத்தா அல்லது இந்தியாவின்
முதிர்ந்த மனிதர் என்று அழைக்கப்பட்டவர் யார்? தாதாபாய் நவ்ரோஜி.
ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் செங்கோட்டையில்
கொடி ஏற்றுவது ஏன்?
நாம்
சுதந்திரம் பெற்றால் செங்கோட்டையில் கொடி ஏற்றுவோம் என்று முழங்கிய நேதாஜியின்
விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக.
ஜாலியன் வாலாபாக் படுகொலையின் வேறு பெயர் என்ன?
பஞ்சாப் படுகொலை.
வீரப்பாண்டிய கட்டபொம்மனின் இயற்பெயர் என்ன?
கருத்தப்பாண்டி.
வ.உ.சி செக்கு இழுத்த சிறை எது? கோவை சிறை.
வந்தே மாதரம் பாடல் உள்ள நூலின் பெயர் என்ன? ஆனந்த
மடம்.
டெல்லி சலோ என்ற கோஷத்தை ஏற்படுத்தியவர் யார்?
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
முதன் முதலில் கார்டூன் வெளியிட்ட தமிழ்
இதழ் பாரதியாரின் இந்தியா.
தேச
விடுதலைக்காக 17வருடங்களும் 6 மாதங்கள் சிறையில் இருந்த தலைவர் ஜவகர்லால் நேரு.
சபர்மதி சாது என்பவர் யார்? மகாத்மா காந்தி.
தீனபந்து என்று அழைக்கப்பட்டவர் யார்? சி.எஃப்
ஆண்ட்ரூஸ்
பிளேக் பாதித்த மக்களை கொட்டடியில் அடைத்துவிட்ட
ஆங்கிலேயரை சுட்ட வீர சிறுவர்கள் யார்? குதிராம் போஸ் மற்றும் பிரபுல்ல கார்க்கி 1908ல்
சுதந்திர போராட்டத்தில் குறைந்த வயதில் தூக்கில்
இடப்பட்டவர் யார் குதிராம் போஸ் 15 வயதில் தூக்கில் இடப்பட்டார்.
காந்தியின் அரசியல் குரு யார்? கோபால கிருஷ்ண
கோகலே
கோபால கிருஷ்ண கோகலேயின் குரு யார்? ரானடே
இந்தியருக்கு தேசியமும் இல்லை தேசியக் கொடியும்
இல்லை என ஆங்கிலேயர் கேலி செய்த போது தனது சேலை முந்தானையை கிழித்து இதுவே எங்கள்
தேசியக் கொடி என்று முழங்கிய பெண்மணி யார்?
தில்லையாடி வள்ளியம்மை.
கொடி தந்த பெருமைக்குரியவர் யார்? தில்லையாடி
வள்ளியம்மை.
கொடிகாத்த குமரனின் இயற்பெயர் என்ன? குமாரசாமி.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஜனாதிபதி மாளிகை
எவ்வாறு அழைக்கப்பட்டது. கவர்மெண்ட் ஹவுஸ் (அரசு இல்லம்)
நமது சட்டசபையில் இவரைப்போல் பத்து பேர்
இருந்தால் வெள்ளைக்காரன் எப்போதோ நாட்டை விட்டு ஓடியிருப்பான் என்று காந்தியால்
பாராட்டப்பெற்றவர் யார்? தீரர்
சத்தியமூர்த்தி.
(மு. அப்பாஸ் மந்திரி எழுதிய பொன் விழா குவிஸ் என்ற நூலில் இருந்து தொகுப்பு)
தங்கள்வருகைக்கு நன்றி!பதிவுகுறித்த கருத்துக்களை
கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! திரட்டிகளில் இணைத்து பிரபல படுத்துங்கள்
நன்றி!
அருமையான தகவல்கள்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி .
நன்றி நண்பா!
Deleteபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி... பாராட்டுக்கள்... நன்றி...
ReplyDeleteஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!
நல்ல தகவல் நண்பா! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதொடர்ந்து உற்சாகமூட்டும் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்!
Deletepakirvukku nantri!
ReplyDeleteநல்ல தகவல்களின் தொகுப்பு, பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஅரிய தகவல்களை பகிந்துள்ளீர்கள் அய்யா...
ReplyDeleteநமது சட்டசபையில் இவரைப்போல் பத்து பேர் இருந்தால் வெள்ளைக்காரன் எப்போதோ நாட்டை விட்டு ஓடியிருப்பான் என்று காந்தியால் பாராட்டப்பெற்றவர் யார்? தீரர் சத்தியமூர்த்தி.
இந்த வரிகள் எனக்கு புரியவில்லை...
தீரர் சத்திய மூர்த்தி தைரியமாக துணிச்சலாக பேசக்கூடியவர்! இவரைப் போல இன்னும் பலர் இருந்தால் ஆங்கிலேயர் சீக்கிரமாக விடுதலை தந்திருப்பர் என்று காந்தியால் பாராட்டு பெற்றவர் சத்தியமூர்த்தி! வருகைக்கு நன்றி நண்பா!
Deleteபல அரிய தகவல்கள் தொடருங்கள்
ReplyDeleteசுரேஷ் ,
ReplyDeleteநல்ல தகவல் தொகுப்பு ஆனால் சில பிழையானவை,குறிப்பாக தில்லையாடி வள்ளியம்மை தென் ஆபிரிக்காவில் சுமார் 15 வயதாக இருக்கும் போதே இறந்துவிட்டவர்.
முந்தானையை கிழித்து கொடியாக காட்டியவர் மேடம் காமா என்கிறவர். அந்த முந்தானையில் சிவப்பு வெள்ளை, பச்சை இருந்து பின்னர் அதன் அடிப்படையில் கொடி அமைக்கப்பட்டது என்பது வரலாறு.
இந்தியா சுதந்திரம் அடையும் வரையில் மையத்தில் ராட்டை உள்ள கொடியே இந்திய கொடியாக இருந்தது.