சிறுவாபுரி முருகா! சிறப்பெல்லாம் தருவாய்!
சிறுவாபுரி முருகா! சிறப்பெல்லாம் தருவாய்!
மூலவர் பால சுப்ரண்மண்யர் |
சென்னைக்கு வடமேற்கே சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில்
சென்னையில் இருந்து 33 கீ.மீ தொலைவில் இடப்பக்கம் பிரியும் சாலையில் சிறுவாபுரி
பாலசுப்ரண்ய சுவாமி கோயில் அமைந்துள்ளது. புதுரோடு என்னும் இடத்தில் இருந்து
வயல்களின் ஊடே செல்லும் சாலையில் மூன்று கி.மீ தொலைவில் சின்னம்பேடு என்ற
சிறுவாபுரி அமைந்துள்ளது.
கோயில் கோபுரம் |
கோயில் பிரகாரம் |
சிறுவாபுரியின்நுழைவாயிலில் சப்த மாதர் கோயில், நடுநாயகமாக அகத்தீஸ்வரர்
கோயில் மேற்கே பெருமாள் கோயில் பெருமாள் கோயிலுக்குப் பின்னால் விஷ்ணுதுர்கை
கோயில்கள் உள்ளன.வடக்கே வாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்ரமண்ய சுவாமி ஆலயம்
கம்பீரமாக நம் கண்ணுக்கு காட்சி தருகிறது.
அருணகிரி நாதரால் போற்றி பாடப்பட்ட தலம் சிறுவாபுரி.
ஸ்ரீ பாலசுப்ரமண்யர் |
இங்குள்ள
விக்கிரகங்களில் பாலசுப்ரமண்யர், ஆதி மூலவர், நவகிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள்
அனைத்தும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை.கோவிலுனுள் உயரமான கொடிமரம் முன் காணப்படும்
பச்சை மரகத மயிலின் காட்சி கண்கொள்ளா அழகு. இது போன்ற சிறந்த வடிவமைப்பை வேறு
எங்கும் காண்பது அரிது.
சிறுவாபுரி
முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை
ஏந்தியிருக்க முன் இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம
சாஸ்தா கோலத்தில் இருக்கிறார்.பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற
கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி
நாதர் பாடியுள்ளார்.
வாஸ்து
அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால்
இவரை வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது
நம்பிக்கை!
தலபுராணம்: அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட
ராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட அது வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின்
அருகில் வந்தது. அதை அங்கு வளர்ந்து வந்த ராமனின் பிள்ளைகளான லவனும் குசனும்
கட்டிப்போட்டு விட்டனர். இது அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும்
சிறுவர்களை வெல்ல முடியவில்லை.ராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது.
இவ்வாறு சிறுவர்களான லவனும் குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று வழங்கியது.
உற்சவர் திருமண க்கோலத்தில் |
அருணாஜலேஸ்வரர் அபித குஜலாம்பிகை இருவருக்கும் நடுவே
அற்புத தோற்றமாய் அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்புடன் கூடிய வள்ளி நங்கை நம்
மணவாளப்பெருமான் முருகனை கைத்தலம் பற்றும் திருமணக் காட்சியாய் எழுந்தருளி
இருக்கிறார்.
கைத்தலம்
பற்றும் போது இயற்கையாய் பெண்ணுக்கு ஏற்படும் கூச்சம் நாணம் காரணமாக வள்ளி
ஒய்யாரமாக லேசாக முன் சாய்ந்து ஒரு கண் மூடிய நிலையில்நிற்கின்ற கோலத்தினை காண கண்
கோடி வேண்டும். பின்புறத்தில் நோக்கும் பொழுது வள்ளி கள்ளத்தனமாக அரைக்கண்
பார்வையாக முருகனை நோக்குவது போல சிற்பி சிலையை வடிவமைத்து இருப்பது சிறப்பு.
சர்வ அலங்காரத்துடன் வள்ளியை கைப்பிடிக்கும் கோலம். |
மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு
எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம்
போல துணை அமையும் என்பது ஐதீகம்.
வழிபாட்டு நேரம்: கார்த்திகை, செவ்வாய் மற்றும்
ஞாயிற்று கிழமைகளில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை. மாலை 4 மணி முதல் இரவு 8
மணிவரை.
மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை.
மாலை5 மணிமுதல் இரவு 7 மணிவரை.
மரகத மயில் |
சென்னை கோயம் பேட்டில் இருந்தும் செங்குன்றத்தில்
இருந்தும் மாநகர பேருந்துகள் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு உண்டு.இது தவிர ஷேர்
ஆட்டோக்கள் புது ரோடு என்னுமிடத்தில்
இருந்து உண்டு.
கிருத்திகை நன்னாளில் முருகன் தரிசனம்கண்டு
மகிழ்வோம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை
கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!
முருகன் கோவில் மிகவும் அருமை அதைவிட அவர் ஆசி வெகு பெருமை நன்றிகள் அண்ணா
ReplyDeleteகண்ணால் காணமுடியாத இடத்தை தங்கள் பதிவில் கண்டு ரசித்ததற்கு மிக்க நன்றிகள் அண்ணா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!
Deleteசிறப்பான நாளில் சிறப்பான பகிர்வு...
ReplyDeleteநன்றி ஐயா...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன் சார்!
Deleteநல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDeleteஎம்பெருமானை நன்னாளில் தரிசனம் செய்யவைத்தமைக்கு நன்றி சகோ!
ReplyDeletehttp://www.krishnaalaya.com
நல்ல வர்ணனை. மிகவும் ரசித்தேன்.
ReplyDelete