ஈழ தமிழருக்காக குரல் கொடுக்கும் ஹிந்தி பேசும் வாலிபர்

ஈழ தமிழருக்காக குரல் கொடுக்கும் ஹிந்தி பேசும் வாலிபர்

சீனிவாஸ் திவாரி. இவர் இந்தியை தாய் மொழியாக கொண்ட இந்தியர். தமிழர் அல்ல. ஆனால் தமிழீழ பிரச்சனைக்கு தமிழகமெங்கும் தன்னுடைய சொந்த செலவில் வாகன சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல ஊர் மக்களை சந்தித்து ஈழத்தில் நடந்த இனப் படுகொலை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.
இவருக்கு என்ன தலைஎழுத்து இந்த இளநீர் விற்பவரிடம் ஈழப் படுகொலை பற்றி சொல்ல வேண்டும் எ

ன்று ? இதனால் இவருக்கு என்ன லாபம் கிடைக்க இருக்கிறது?

தமிழருக்கு தான் நம்மையே தவிர இவருக்கு இதில் எந்த லாபமும் இல்லை. நியாயமாக தமிழர்கள் நாம் தான் இவருக்கு கடமைப் பட்டுள்ளோம். நம்மால் இவருக்கு உதவி செய்ய முடியவில்லை என்றாலும் இவரது பயணத்திற்கு தடை செய்யாமல் இருக்கலாம். இவரது நோக்கத்தை கொச்சை படுத்தாமல் இருக்கலாம். அல்லது இவரை பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி இருக்கலாம்.
அதை விடுத்து, இவர் ஒரு ஒரு வியாபாரி, உளவாளி, பிராமணர், இந்திய தேசியத்திற்கு ஆதரவாளர் என்று கூறி இவரை பற்றி அவதூறு சொல்லி இவரது பயணத்தை முடக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? இவர் யாராகவும் இருந்து விட்டு போகட்டும். இவருடைய பயணம் ஈழம் சார்ந்தது . நடந்த இனப் படுகொலை பற்றிய விழிப்புணர்வு செய்கிறார். ஈழப் பிரச்சனைக்கு உயிர்ப்பு கொடுக்கிறார் . நம்மால் இதை செய்ய முடியவில்லை . இவர் செய்கிறார். இவருடைய அடுத்த கட்ட பயணத்திற்கு உங்களால் முடிந்தால் ஆதரவு வழங்குங்கள். முடியாது என்றாலும் இவர் தன் பிரச்சாரத்தை தனி மனிதராக தொடங்க உள்ளார். நல்ல உள்ளம் படைத்தவர்கள் இவருக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 நன்றி - Rajkumar PalaniSwamy 

தகவல் உதவி: பேஸ்புக்.

டிஸ்கி } முகநூலில்மேய்ந்த போதுகிடைத்த தகவல் இது! என்னை பின் பற்றுபவர்களும் அரிய  பகிர்ந்துள்ளேன்! தமிழின தலைவர்களே இலங்கை பிரச்சனையில் வாய் மூடிக்கொண்டிருக்க இந்த  வாலிபரின் செயல் வியக்க வைப்பதோடு  மனதில் ஒரு இடத்தையும் கொடுக்க வைக்கிறது! வெல்டன் சீனிவாஸ் திவாரி!

Comments

  1. இவரின் செயல்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன்,
    பயனுள்ள பதிவு,
    நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!

      Delete
  2. சுரேஷ் ,

    நல்ல பகிர்வு, டெசோ என சொல்லி அரசியல்யாவாரம் செய்பவர்கள் இவரைப்பார்த்தாவது திருந்தனும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!

      Delete
  3. மனிதம் இருக்கிறது இன்னும் கொஞ்சம்.அரசியல் கண்ணுக்கு எதுவுமே தெரிவதில்லை !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!

      Delete
  4. அருமையான அனைவரும்
    அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியை
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

      Delete
  5. தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தங்களின் கமெண்டுகள் ஸ்பேம் பாக்ஸ் சென்று விடுகிறது அங்கிருந்து எடுத்தேன்! நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!