தளிர் சென்ரியூ கவிதைகள்! 2
நல்லது சொன்னதற்கா நடுக்கடலில் தள்ளினார்கள்? வள்ளுவர் சிலை! பிடித்தவனை பிடித்துக்கொண்டார்கள் சிகரெட்! உயிர்களை கொன்று ஜடங்களை நட்டார்கள் பாலம் நாடோடிகளின் நீண்ட படுக்கையானது நடைபாதை! தாய்ப்பால் விலை போக தள்ளிக்கட்டப்படுகிறது கன்று! காசைக் கொடுத்து சிறையில் அடைக்கப்படுகின்றன பிள்ளைகள் நர்சரி பள்ளி அஹிம்சாவாதியின் கையில் தடி! காந்தி! அஹிம்சையை போதித்தவனுக்கு இன்னுமா ஹிம்சை! தபால் தலையில் காந்தி! ஊற்றிக் கொடுத்து பீற்றிக் கொள்கிறது அரசு டாஸ்மாக். கான்க்ரிட் வயல்களில் காணாமல் போனது பசுமை! வெட்ட வெட்ட வளர்கிறது மின்வெட்டு! நகரில் புகுந்த மிருகங்கள்! நாசமானது மான்! இரவிலும் ஒளிர்ந்தது சூரியன்! சோலார் விளக்கு! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!