நான் ரசித்த சிரிப்புகள் 4

நான் ரசித்த சிரிப்புகள் 4

1.முருகன் கோயில்ல போயி ஏன் காவடியை திருடினே?
நான் காவடியை தூக்கினு போறதா வேண்டிக்கினு இருந்தேன்!
                  வி.சாரதி டேச்சு
2.டாக் ஷோவுக்கு வந்த மாடலிங் நடிகையை பார்த்து நாய்ங்கள்லாம் குரைக்குதே ஏன்?
    அவங்க கேட் வாக் பண்ணியில்ல வந்தாங்க!
                   ஜெயாபிரியன்
3.மன்னா மக்கள் தங்களிடம் நிறைய எதிர் பார்க்கிறார்கள்!
  என்னென்ன?
வெட்கம் மானம் சூடு சொரணை...!
       ஜே.மாணிக்கவாசகம்.
4.நம் மன்னருக்கு குழந்தை மனசு!
  அதுக்காக அவரை போருக்கு அழைச்சுனு போக ஆயாவை வேலைக்கு வைச்சிருக்கறது நல்லாயில்லை!
                வி.சாரதிடேச்சு
5.உனக்கு தம்பி பாப்பா வேணுமா? தங்கச்சிபாப்பா வேனுமா?
   உன் தங்கச்சியோட பாப்பாதான் வேணும்பா!
               மா.கண்ணன்.
6.வீடுகட்ட இவ்வளவு பெரிய லோன் கேட்கறீங்களே! திரும்பக் கட்டுவீங்களா?
   வீட்டை ஒரே தடவையிலே ஸ்ட்ராங்கா கட்டிடுவேன் திரும்ப ஏன் கட்டணும்?
              ஆர் ஜெசி.
நன்றி குமுதம்.

7.நம்ம தலைவருக்கு திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்திடுச்சாமே! எப்படி?
  அவர்கிட்ட யாரோ சுவிட்சர்லாந்துல பூகம்பம்னு போன்ல புரளி கிளப்பிவிட்டிருக்காங்க!
             என் ராஜேந்திரன்.
8.ஜெயில்ல இருக்கும் உங்களை பார்க்க கட்சி காரங்க யாரும் வரலியா?
    தினமும் பார்த்துகிட்டுதானே இருக்கோம்!
                    பாலா சரவணன்.
9.தலைவரை சிபிஐ தேடுதுன்னு தெரிஞ்ச உடனே பஞ்சாப் பறந்துட்டார்!
    எங்கே?
சொன்னேனே! ‘பஞ்சாப்’னு!
                சி.ரவிகுமார்
10.திருடின நகைகளை என்ன செய்தாய்?
  பவுன் ஐம்பதாயிரத்துக்கு வரட்டுமுன்னு பத்திரமா வெச்சிருக்கேன் எசமான்!
              சொக்கம்பட்டி தேவதாசன்.
11தலைவர் ரொம்ப பெருமையா பேசிக்கிறார்...
எதை?
தமிழ்நாடு பூரா இருக்கிற ஜெயிலை நம்ம கட்சிக்காரங்க அபகரிச்சதைத்தான்!
            பி.பாலாஜிகணேஷ்
12.தலைவர் ரொம்ப மோசம்!
 எப்படிசொல்றே!
பால்வளத்துறை அமைச்சரானா அமலாப் பாலை சந்திக்க முடியுமான்னு கேட்கறாரே!
                 பா.ஜெயக்குமார்.
13.அண்டைநாட்டு மன்னர் போர் தொடுத்து நமது நாட்டை கைப்பற்றியது எல்லாம் நில அபகரிப்பு வழக்கின் கீழ் வராது மன்னா!
              லிம்டன் பெர்ணாண்டோ
நன்றி ஆனந்த விகடன்
14.தலைவர் ஏன் சோகமா இருக்கார்?
 எல்லா தேர்தல்கள்லயும் அவர் டெபாசிட் இழந்ததால வாழ்நால் வேதனையாளர் விருது கொடுத்துட்டாங்களாம்!
   வி.சி கிருஷ்ணரத்தினம்.
15.என்னடா இவ்வள்வு குறைவா மார்க் வாங்கிட்டு வந்திருக்கே?
விலைவாசி ஏறிப்போச்சு இல்லையா.. எதையும் அதிகமா வாங்க முடியலைப்பா!
       சி.பி செந்தில்குமார்.சென்னிமலை.
நன்றி குங்குமம்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2