தளிர் அண்ணா கவிதைகள்!
உலகை வலம் வா பெண்ணே!
பெண்ணே!
உன்னைத் தெய்வமென்று
சொன்னது தவறாகிவிட்டது!
கல்லாக சமைந்து
கிடக்கிறாயே?
தெய்வமாக வாழ்ந்தது
போதும் பெண்ணே!
மனுஷியாக வாழக்
கற்றுக்கொள்!
மனதைத் திற!
நீ நினைத்தால்
நிழல்கூட சுடும்!
நினைவில் வை!
உன்னை நீ
உணர்ந்துகொள்!
உலகை வலம் வா!
பெண்ணே!
தடைகளைக் கண்டு தளராதே!
எத்தனைதான்
தடைகள் வந்தாலும்
தளரவேண்டாம் தோழா!
தட்டி தட்டி போகிறதே என
வெட்டியாகத் திரியாதே!
கட்டி கட்டிப் போடுகிறார்களே
என்று கலங்கி நிற்காதே!
முட்டி முட்டி மோதியே
முட்டை குஞ்சு பொறிக்கிறது!
கூட்டை விட்டு குளவி வர
உடைத்து உடைத்து முயல்கிறது!
உலகைக் காணும் ஆவலில்
சிசுவும் உதைத்தே வெளியில்
வருகிறது!
தடையில்லா வாழ்வில்லை!
தயங்கி நிற்காதே! தடைகளையே
தடமாக்க கற்றுக்கொள்!
தடைகள் நம்மை புடம் போடும்
கலன்கள்!
தடைக் கற்களை
படிக்கற்களாக்கு!
துடிப்போடு படி ஏறிவா!
பாரதம் உன்னை வறவேற்கும்!
பாரினுள் உன் புகழ் நிற்கும்!
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
நல்ல கவிதை .. அற்புதமான கருத்துகள்
ReplyDelete////எத்தனைதான்
ReplyDeleteதடைகள் வந்தாலும்
தளரவேண்டாம் தோழா!
தட்டி தட்டி போகிறதே என
வெட்டியாகத் திரியாதே!/////
அற்புதமான வரிகள்
தடைகள் நம்மை புடம் போடும் கலன்கள்!
ReplyDeleteதடைக் கற்களை
படிக்கற்களாக்கு!
துடிப்போடு படி ஏறிவா!
பாரதம் உன்னை வறவேற்கும்!
பாரினுள் உன் புகழ் நிற்கும்!
அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி பகிர்வுக்கு .........