படம் ஓடாதததால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விமல்!

 படம் ஓடாதததால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விமல்!


வாகை சூடவா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததால் தனது சம்பளத் தொகையான ரூ.50 லட்சத்தையும் மொத்தமாக திருப்பிக் கொடுத்து சினிமா துறையிலேயே புரட்சி செய்திருக்கிறார் நடிகர் விமல். பொதுவாக தான் நடிக்கும் படங்கள் ஓடாவிட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்திக்கவே அஞ்சுவார்கள் பெரும்பாலான ஹீரோக்கள். படம் நல்லா ஓடுனா நமக்கா கொடுக்க போறாரு? என்றொரு கேள்வியையும் கேட்பார்கள் அந்த ஹீரோக்கள்.

அப்படிப்பட்ட ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ ஹீரோவாக மாறி விமல் செய்திருக்கும் காரியம் சினி இன்டஸ்ட்ரியையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. வாகை சூடவா படத் தயாரிப்பாளர் முருகானந்தம் அப்படத்தின் தோல்விக்கு பின்பு படு சிக்கலுக்குள்ளாகியிருக்கிறார். இதுபற்றி கேள்விப்பட்ட விமல், அவருக்கு உதவும் விதத்தில், தான் வாங்கிய ஐம்பது லட்ச ரூபாய் சம்பளத்தையும் மொத்தமாக திருப்பிக் கொடுத்துவிட்டாராம். தன் கையில் பணமில்லாத நிலையிலும், இரண்டு படங்களை ஒப்புக் கொண்டு அதில் கிடைத்த அட்வான்சுடன், மீதி தொகையை புரட்டிக் கொடுத்திருகிறார் விமல். இதோடு நிறுத்தியிருந்தால் கூட ஆச்சர்யமில்லை. ஒரு படத்தில் இலவசமாகவே நடிச்சு தர்றேன். கவலைப்படாதீங்க என்றும் கூறியிருக்கிறாராம்.

உண்மையிலேயே விமல் ரியல் ஹீரோ தான்...!

டிஸ்கி}  உண்மையிலேயே விமல் ஹீரோதான்! களவாணியில் மக்களை கவர்ந்தவர் இன்று உள்ளங்களை கொள்ளை கொண்டுவிட்டார்! இவர் போல நடிகர்கள் துணிந்தால் கோலிவுட் பழைய நிலைக்கு திரும்பும்! தயாரிப்பாளர்கள் தலையில் துண்டுபோடவேண்டிய அவசியம் நேராது. வளரும் கலைஞரை வாழ்த்துவோம்!
நன்றி தினமலர்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

  1. விமல் நிஜ ஹீரோதான். மற்றவர்களும் அவரை பின்பற்றினால் சந்தோசமே

    ReplyDelete
  2. ஒரு வளர்ந்து வரும் ஹீரோ இப்படி செய்திருப்பது மிகவும் போற்றுதலுக்குறியது உண்மையில் விமல் ரியல் ஹீரோதான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2