புரியாத நாகரீகம்! நகைச்சுவை துணுக்கு


புரியாத நாகரீகம்!

கோடைக்காலம் கால் சட்டை மட்டுமே அணிந்திருந்த ஆறுவயது குழந்தையை முடித் திருத்தகத்திற்கு அழைத்து வந்தாள் தாய்.
அந்த குழந்தை எவ்வளவோ அழுதும் தாய் எவ்வளவோ மறுத்தும் முடி திருத்துபவர் விடாப் பிடியாக அந்தக் குழந்தையின் முடியை ஒட்ட வெட்டி முடித்தார்.
பிறகு பெருமிதமாக ‘இப்ப பையன்களுக்கெல்லாம் இப்படி முடிவெட்டுவதுதான் நாகரீகம் அதனாலதான் நீங்க சொன்னதை கேக்காம நான் செய்தேன்” என்றார் முடி திருத்துபவர்.
 “பையனா! இவள் என் மகள் என்று கத்தினாள் தாய்.

அது முடியாது!

பிரெஞ்சு மொழி தெரியாத வெளிநாட்டுகாரர் பாரீஸில் புகழ்பெற்ற ஓட்டல் ஒன்றிற்குள் நுழைந்தார். சர்வர் மெனு கார்டை மேசையின் மேல் வைத்தார்.
  அந்த கார்டை மேலும் கீழும் பார்த்த அவர் ‘அடியில் கடைசியில் எழுதி இருப்பதை காட்டி இதைக் கொண்டு வாருங்கள்’ என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
 உடனே, ‘அது முடியாதுங்க’ என்று சர்வர் பதில் சொன்னார்.
  “ஏன் முடியாது?”
‘அது இந்த ஓட்டல் நடத்தும் முதலாளியம்மா பெயர் என்றார் சர்வர்.


 தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2