குடிதான் காரணம்!
குடிதான் காரணம்!
குடிவெறியில் மாமியாரைத் துப்பாக்கியால்
சுட்டதாக கைது செய்யப்பட்டான் ஒருவன்
நீதிபதி
அவனைப்பார்த்து, `இப்போது நீ
நல்ல பாடம் கற்றுகொண்டிருப்பாய் குடிப்பது கெட்ட
பழக்கம் என்று உனக்கு புரிந்திருக்கும். நீ மட்டும்
குடிக்காமல் இருந்திருந்தால் உன் மாமியார் மீது
கோபப் பட்டிருக்க மாட்டாய். நீ உன் மாமியாரை
சுட்டிருக்க மாட்டாய் ` என்று அடுக்கிக் கொண்டே போனார்.
குறுக்கிட்ட அவன், “நீதிபதி அவர்களே? நான் நல்ல பாடம்
கற்றுக்கொண்டேன். இனி நான் குடிக்கவே மாட்டேன்
குடித்ததினால் தான் என் குறி தவறிவிட்டது”
என்றான் அவன்.
புகழ்
பெற்ற ஜோக்ஸ் என்ற
நூலிலிருந்து
நினைத்தது நடந்தது!
ஓர் கிணற்றருகில் ஓர்
அறிவிப்பு “நீங்கள் எதை மனதில் நினைத்துக் கொண்டு இந்த கிணற்றில் காசு
போடுகிறீர்களோ அது நடக்கும்”. இதைப்பார்த்த ஒரு கணவர் தன் மனதில் ஒன்றை
நினைத்துக்கொண்டு காசைப்போட்டார். அவருடைய மனைவியும் அதே போல் கண்களை மூடி மனதில்
ஒன்றை நினைத்து காசு போடும் போது தவறி உள்ளே விழுந்து விட்டார்.உடனேஅந்த கணவன்
கைதட்டி “ உண்மையிலேயே நான் நினைச்சது நடந்திடுச்சி” என்று குதித்தான்.
- நல்ல
நல்ல ஜோக் என்ற புத்தகத்திலிருந்து.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
Comments
Post a Comment