கலக்கல் கதம்பம்! .உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோடாத ஒப்பிலாமணிகள்!
கலக்கல் கதம்பம்!
கலக்கல் கதம்பம் என்ற இந்த புதிய பகுதியில் பல்சுவையான நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். உங்கள் கமெண்டுகளை வழக்கம்போல எதிர்பார்க்கிறேன்!
1.உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோடாத ஒப்பிலாமணிகள்!
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ரஜினி, சூர்யா திரிஷா, ப.சிதம்பரம் போன்றவர்கள் வாக்களிக்கவில்லையாம்! ஓட்டளிக்காத நடிகர்களை எதிர்த்து இந்து மக்கள் கட்சி கண்டணபோராட்டம் நடத்தியுள்ளது. ஒரு சாதாரணகுடிமகன் வாக்களிக்காது போனால் யாரும் பெரிது படுத்துவது இல்லை! ஆனால் பிரபலமான மக்கள் செல்வாக்குள்ளவர்கள் மக்கள் தங்கள் ரோல் மாடலாக கொண்டுள்ளவர்கள் வாக்களிக்கவில்லை என்ற செய்தி வேதனைக்குரியது மட்டுமல்ல! அவமானத்திற்குரியது! இவர்கள் இந்திய குடிமக்களா? படங்களில் யோக்கியவானாக நடிப்பவர்கள் நிஜத்தில் ஜனநாயகக் கடமை ஆற்றமறந்தது ஆத்திரமூட்டும் விசயமே! ரஜினியும் என்ன செய்வார் பாவம்! அவர் எப்போதடா வாக்களிக்க வருவார் என்று காத்திருந்து அவர் யாருக்கு ஓட்டளித்தார் என்பது வரை மீடியாக்கள் வெளிச்சம் போட்டு காட்டினால் என்ன பண்ணுவது? வாக்குரிமையானது ரகசியம்! அந்த ரகசியம் வெளியானதில் சென்றமுறை பெரிதும் பாதிக்கப்பட்டவர் ரஜினிதான் அதான் ஏனடா வம்பு நாம் ஓட்டு போடாமலே இருந்து விடலாம் என்றிருந்துவிட்டாரோ என்னமோ? ஆனால் இந்த சூர்யாவிர்கும் திரிஷாவிற்கும் என்ன காரணம்? ஒரு வேளை சூட்டிங்கில் பிசி என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்! நம்ம உள்துறைக்கு இப்பல்லாம் ஞாபக மறதி ஜாஸ்தி ஆயிடிச்சி அதனால ஓட்டு போடறதையும் மறந்துட்டாருன்னு சகஜமா எடுத்துக்கோங்க பாஸ்! இதுக்கெல்லாம் ஆர்பாட்டம் பண்ணிகிட்டு டென்சன் ஆகி உடம்ப கெடுத்துகிட வேண்டுமா? இந்திய ஜனநாயகம் இன்னும் செத்துவிடவில்லை! என்பதை ஆங்காங்கே வயோதிகர்கள் வந்து வாக்குப் பதிவு செய்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் முன் இவர்களெல்லாம் கால் தூசூக்கு சமானம்!
2. வெற்றி சூடும் இந்தியா!
நம்ம இந்தியாவுக்கு விளையாட்டுனாலே அது கிரிக்கெட்டுதான்! ஜெயிச்சா தூக்கி வச்சி கொண்டாடறதும் தோத்தா குப்பையில தூக்கி வீசறதும் வாடிக்கை! இங்கிலாந்துல வாங்கின அடி காயறதுக்குள்ளே சாம்பியன்ஸ் லீக்லயும் தோனி சொதப்ப இங்கிலாந்து-இந்தியா டூர் ரொம்ப பேருக்கு மறந்தே போச்சு! முதல் மேட்ச்லயும் மைதானம் காலியாவே இருந்தது. நம்ம ஆளுங்கதான் உள்ளூர்ல சூரப்புலிகளாச்சே! முதல் மேட்ச் ஜெயிச்ச கையொடு இரண்டாவதையும் அள்ளிட்டாங்க! இதுல என்ன ஆச்சர்யம்னா! இங்கிலாந்து கொஞ்சம் கூட எதிர்ப்பு காட்டாம அப்படியே சரண்டர் ஆனதுதான்! பஜ்ஜி அதாங்க நம்ம ஹர்பஜன் நிலைமை தான் இப்போ ரொம்ப கவலைக்கிடமா ஆகிப்போச்சு! முதல் ரெண்டு மேட்ச்ல சேக்காம் விட்ட தேர்வுக்குழு அடுத்த மூணு மேட்ச்சுக்கும் அவரை கைகழுவி விட்டுடுத்து! இளம் வீரர்கள் அசத்த தொடரை வெல்ல காத்திருக்கிறது இந்திய அணி! ரவீந்திர ஜடேஜா, வினய்குமார், விராத் கோஹ்லி என இளைஞர்கள் இந்திய அணியை எழுச்சியுற செய்ய தோனியும் பார்முக்கு திரும்ப அதிர்ஷ்ட காற்று திரும்பவும் தோனி பக்கம் வீச ஆரம்பித்துவிட்டது. இனி இங்கிலாந்துக்கு சங்குதான்!
3. ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி சொத்து குவித்த வழக்கு!
இந்த வழக்குக்கு அம்மாவை தூங்க விடாம செஞ்சிடுச்சி! அம்மாவும் எவ்வளவோ குட்டிக் கரணம் அடிச்சும் வாய்தா மேல வாய்தா வாங்கியும் மேல் முறையீடு செஞ்சும் ஒண்ணும் பலிக்காம போயிடிச்சு! இந்திய வரலாற்றில் ஒரு முதல்வர் இன்று கோர்ட் படியேறியுள்ளார். இது தவறு செய்யும் அரசியல் வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக அமையும் என்று நினைக்கிறேன். எங்க திருந்த போறாங்க? இனியாவது பதவியில்இருப்பவர்கள் பதவிக்குரிய நடத்தைவிதிகளை ஒழுங்காக கடைபிடிப்பார்களா?
4. கூடன்குளம் கண்ணாமூச்சி!
கூடன் குளம் அணுமின்நிலையத்தை மூடவேண்டுமென்று போராட்டக் குழுவினர் போராட மூட முடியாது எனமத்திய அரசு கைவிரித்த நிலையில் போராட்டக்குழுவிற்கு முதல்வர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதில் மத்திய அரசுக்கு ஒத்துழிப்பு தரவேண்டுமென பிரதமர் கடிதம் அனுப்பியதாகச் சொல்ல அந்த கடிதம் கிடைக்கவில்லை என்று முதல்வர் கூற ஒரே கண்ணாமூச்சி விளையாட்டு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன என்று முதல்வர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஒரு தீர்வு கிடைக்குமென காத்திருக்கிறார்கள். இந்த போரை அரசியல் கண்ணாமூச்சி ஆக்கி அப்பாவி மக்களை வதைக்க கூடாது!
5. பூனம் பாண்டேயின் பப்ளிக் நியுசென்ஸ்!
யாராவது நிர்வாணமாக தெருவில் சென்றால் முகத்தை திருப்பிக் கொள்வார்கள் அல்லது தலையில் அடித்துக் கொண்டு ஆடை அணிவித்து போலிஸில் ஒப்படைப்பார்கள்! அது பைத்தியமாக இருந்தாலும் கூட மக்களுக்கு இடையூறு விளைவித்ததாக நியுசென்ஸ் கேஸ் கூட பதிவார்கள்! ஆனால் இணையத்தில் நடக்கும் கூத்து இந்த பூணம் பாண்டே கூத்து! இதை கண்டிக்கவோ தடை செய்யவோ இதுவரை அரசு முயலவில்லை! இது உணைமையிலேயே கேலிக்குரிய விஷயம்! எங்கே போய்க் கொண்டிருக்கிறது இந்தியா! இந்த இரண்டு மூன்று தினங்களில் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டது இந்த பூனம் பாண்டேவின் குளியல் காட்சிகள்தான்! குளிப்பதை படம் பிடித்து போட்டு பப்ளிசிட்டி தேடும் அந்த பைத்தியத்தை பிடித்து உள்ளே தள்ள அரசுக்கோ காவல் துறைக்கோ வக்கில்லை! ஆனால் வயிற்று பிழைப்புக்கு எதோ ஒர்கிராமத்தில் ரிக்கார்ட் டேன்ஸ் நடந்தால் கைது செய்ய ஓடிவந்து விடுவார்கள்! இதை எங்கே போய் அடித்துக் கொள்வது!.
6. பிரபஞ்ச அழகியின் பிரசவம்! பெட்டுக்கு விடப்படுகிறது!
நம்ம இந்தியர்களுக்கு இருக்கற ஒரு கெட்டபழக்கம் பெட்டு கட்டறது! இப்ப கொஞ்ச நாளா பெட்டுக் கட்ட எதுவும் அம்புடாம இருந்தாப்பல இப்ப அதுக்கு வேட்டு வைக்க வந்தாங்க நம்ம ஐஸ்! அதாங்க முன்னாள் பிரபஞ்ச அழகி கல்யாணமான புள்ள பெத்துக்கிறது சகஜம்! ஆனா இவங்க உலக மகா அழகியாச்சுங்களே! அதனால இவங்க கர்பம் ஆனது ஒரு நியுஸ் அப்ப உலகமே கொண்டாடுச்சி அந்த நியுஸை இப்ப அவங்களுக்கு குழந்தை பிறக்கப் போவுதாம் அடுத்த மாசம் அது ஆணா? பெண்ணான்னு! பெட் நடக்குது எப்படிஎல்லாம் யோசிக்கிறாய்ங்க மக்க! பலகோடி இதுல புரளுதாம்! ம்ம்! கொடுத்து வச்ச மகராசி என்று சந்தோஷப்படுவதா! பிரபலமானாலே இந்த கஷ்டம் தான் என்று கவலைப் படுவதா?
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
Comments
Post a Comment