என் இனிய பொன்நிலாவே! பகுதி 7

என் இனிய பொன்நிலாவே!
              பகுதி 7
                           ‘ப்ரியம்வதா’

முன்கதை சுருக்கம்} இண்டர்வியூவிற்கு வந்த மதுமிதாவை அபிஷேக் விரும்புகிறான். அவள் சம்மதம் வேண்டி அவளை துரத்துகிறான். அதே சமயம் அவனது முறைப்பெண் ஸ்வேதா குறுக்கிட்டு மதுமிதாவை ஏளனம் செய்து அனுப்ப வீட்டிற்கு வரும் மதுமிதா வேலைக்கு போகப் போவதில்லை என்கிறாள். இனி }
     நல்லா தூங்கு! குட்நைட்! என்று ஒளிர்ந்த எழுத்துக்களை படித்த மதுமிதா செல்போனை தூக்கி அடித்தாள். இவன் யார் என்னை தூங்கச் சொல்ல கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்குகிறானே? அந்த முறைப்பெண்ணுக்கு சொல்ல வேண்டியதுதானே குட்நைட்டை! சே நிம்மதியாக தூங்க கூட முடியாமல்  செய்து விட்டானே என்று மனதில் திட்டி தீர்த்தாள்
  அடுத்த நொடி என்ன மடத்தனம் இது எதற்கு கோபப்பட்டு நம் நிம்மதியை கெடுத்துக் கொள்ள வேண்டும் அவன் யாரோ நாம் யாரோ அவன் குட் நைட் அனுப்பினால் அதை ஏன் பெரிது படுத்த வேண்டும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் எல்லாம் சரியாகப் போகும்.பதிலுக்கு பதில் பேசினால் தானே பேச்சு வளர்கிறது இனி அவன் முகத்தில் முழிக்கப் போவதும் இல்லை அப்புறம் எதற்கு அவனுடைய நினைப்பு என்று நினைத்து கொண்டாள்.
  அந்த ஸ்வேதா வேறு வந்து அவளை தொல்லை படுத்தினாள் சே என்ன பெண் அவள் நாகரீகம் என்று அரை குறையாய் ஆடை அணிந்து கொண்டு நடு ரோட்டில் நாலு பேர் முன் உலவிக் கொண்டு சினிமா நடிகைகள் கூட கெட்டார்கள் போல அப்படி ஒரு அலங்காரம் இவளை மனைவியாக அடையும் புருஷன் பாடு திண்டாட்டம் தான் என்ன பேச்சு பேசி விட்டாள்.
  பிச்சைக்காரி என்றல்லவா சொல்லிவிட்டாள்! போகட்டும் அவள் பார்வைக்கு நாம் பிச்சைக்காரியாக இருந்துவிட்டோம் போல என்று ஏதேதோ நினைவு படுத்திக் கொண்டு தூங்க மறுத்தது அவள் மனம் பின் எப்படியோ தூங்கிப் போனாள்.
     விடியற்காலையில் அன்னை எழுப்புவாள் என்று எதிர்பார்த்தாள் ஆனால் அன்னபூரணியோ அவள் தான் வேலைக்கு போகப் போவது இல்லையே எதற்கு எழுப்புவது என்று விட்டுவிட அவள் லேட்டாக தூங்கியதாலோ என்னவோ ஏழரை மணிக்குத்தான் எழுந்தாள்.
   என்னம்மா காலையில எழுப்ப மாட்டியா?
 ஏண்டி இன்னிக்கு என்ன பண்ண போறே வேலைக்குதான் போக போறது இல்லேன்னு சொல்லிட்டியே?
ஆமாமா ஆனா வேற ஏதாவது கம்பெனிக்கு போய் ரெஸ்யூம் கொடுக்கிலாமுன்னு நினைச்சேன்!
  அதுக்கு எதுக்கு அர்ஜெண்ட் நிதானமா செய்யலாம்! நேத்து நைட் சரியா தூங்கலை போல கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு! அப்படி என்னதான் நேத்து நடந்தது என்கிட்ட சொல்ல கூடாதாம்மா?
 சொல்லத் தான் போறேன் ஆனா குளிச்சிட்டு டிபன் சாப்பிட்டுகிட்டே சொல்றேன் என்று குளியலறையில் நுழைந்தாள் மதுமிதா.

அபிஷேக்கின் இல்லம் அவன் தாயார் என்னடா அபி ஆபிஸுக்கெல்லாம் ஒழுங்கா போக மாட்டே! இன்னிக்கு என்னடா காலையிலேயே குளிச்சு ரெடியாயிட்டே! என்று கேட்டாள்.
  போம்மா! உனக்கு எல்லாம் விளையாட்டுதான். நான் என்னிக்கு ஆபிஸ் போகாம் இருந்திருக்கேன். உங்களை கவனிச்சுக்க ஆள் இருந்தாலும் நான் கிட்ட இருந்து கவனிச்சிகிட்டாதான் ஒரு திருப்தி கிடைக்கிறது அதான் நீங்க எழுந்து குளிச்சு முடிச்சு டிபன் சாப்பிடறவரைக்குமாவது கூட இருக்க பார்ப்பேன். நீங்களும் வேண்டாம் நான் என் வேலையை பார்த்துக்கத் தெரியும் நீ ஆபிஸ் போன்ன்னு சொல்லுவீங்க !
  சரி இன்னிக்கு ஒரு நாள் சீக்கிரமா கிளம்பலாம்னு பார்த்தா! இப்படி கிண்டல் பண்றீங்களே?
  அபி உன்னை பத்தி எனக்குத் தெரியாதா? அப்பா போனப்புறம் நட்டாத்துல இருந்த நம்ம கம்பெனியை உன்னோட திறமையால வளர்த்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கே கூடவே என்னையும் கவனிச்சிக்கிற ஆனா நான் சொன்ன பேச்சைத்தான் கேட்க மாட்டேங்கற?
 என்னம்மா கேட்காம் போயிட்டேன்?
 அந்த ஸ்வேதா பொண்ணு உன் பின்னாடியே சுத்தி வருது .அவ நம்ம தூரத்து உறவும் கூட தொழிலும் உன்னோட தொழில் தான் அவங்க வீட்டுலயும் உன்னை விரும்பறாங்க ஆனா நீதான் பிடி கொடுத்து பேசமாட்டேங்கற!
  எப்படிம்மா அவளை உங்க மருமகளா ஏத்துக்க தோணுது? அவளும் அவ உடையும் நடையும் கொஞ்சம் கூட சகிக்கலை?
  எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்தப்புறம் சரி பண்ணிட்டா போச்சு?
 நாய் வாலை நிமிர்த்த முடியாதும்மா! ஆனா உனக்கு கூடிய சீக்கிரமே ஒரு நல்ல நியுஸ் சொல்றேன் இப்ப ஆள விடு!
 ஏண்டா அத இப்பவே சொன்னாத்தான் என்ன?
இன்னும் கன்ஃப்ர்ம் ஆகலையேம்மா?
என்னடா? காதலா? யாரு அந்த தேவதை?
தேவதையேதான்மா! பார்த்தா உனக்கு ரொம்பவே பிடிச்சு போகும் நம்ம ஆபிசுக்கு இண்டர்வியுவிக்கு வந்தா! எனக்கு பிடிச்சு போச்சு வேலையும் கொடுத்திட்டேன் என்னோட மனசையும் கொடுத்திட்டேன்
 சரி அப்ப போயி பொண்ண பார்த்திட வேண்டியதுதான்!
அவசரப் படாதேம்மா! அவ என்னை விரும்பறாளா இல்லியான்னு தெரியனுமே கொஞ்ச நாள் போகட்டும் எங்க ரெண்டு பேர் மனசும் இணைஞ்சா உடனே உனக்கு மருமக ரெடி! என்றான் அபிஷேக்.
  அதுக்கு நான் இன்னும் எத்தனை காலம் காத்து கிடக்கணுமோ என்றாள் அவன் தாய். ரொம்பதான் அவசரப் படறேயே சரி சரி  இப்ப ஆபிசுக்கு கிளம்பறேன் என்று அலுவலகம் கிளம்பினான் அபிஷேக்.
 அவன் ஆவலுடன் அலுவலகம் சென்ற போதும் அவன் ஆவலை நிறைவேற்ற மதுமிதா அங்கு வரவில்லை! ஏன் வரவில்லை? என்னாயிற்று ? என்று பலவாறு யோசித்தவன் மதுமிதாவை செல்லில் அழைத்தான். ரிங் சென்று எடுக்கப் பட்டது
 அலோ யாரு? என்றாள் மதுமிதா
 நான் அபிஷேக் ஏன் இன்னும் வேலைக்கு வரலை? என்றான்
இந்த பிச்சைக்காரிய இன்னும் ஞாபகம் வைச்சிகிட்டு இருக்கீங்களா? உங்க பணக்காரி எங்கே போனாள் என்று குத்தலாக கேட்டாள் மது.
ஷிட்! என்றவன் மது அவள் ஒரு முட்டாள் இதற்காகவா வேலைக்கு வரவில்லை? ப்ளீஸ் மது நீ உடனே கிளம்பி வா என்றான் அபிஷேக்.
 அலோ மிஸ்டர் நான் ஒன்றும் உங்கள் வீட்டுக்காரியல்ல அழைத்தவுடன் வருவதற்கு?
 அப்படியானால் அந்த பதவியை தந்துவிட்டால் போயிற்று என்றான் அபிஷேக்.
நிலவு வளரும்(7)

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. சுவாரஸ்யம் அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் பாஸ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2