என் இனிய பொன்நிலாவே! பகுதி 8

என் இனிய பொன்நிலாவே!  பகுதி 8
              “ப்ரியம்வதா”

முன்கதைச் சுருக்கம்} மதுமிதாவை விரும்பும் அபிஷேக் அவளை தன்னுடைய பிஏவாக நியமிக்கிறான். ஆனால் மதுமிதா அந்த வேலைக்கு செல்ல விரும்பவில்லை. அபிஷேக் போனில் தொடர்பு கொண்டு ஏன் வேலைக்கு வரவில்லை என்று கேட்கிறான். இனி }
    எ.. என்ன சொன்னீர்கள்?
 ஒன்றுமில்லையே நீ என்ன விரும்பினாயோ அதைத்தான் தருவதாக சொன்னேன் என்றான் அமர்த்தலாக!
 ஏய் மிஸ்டர் பெண்களிடம் இப்படித்தான் பேசுவீர்களோ?
 அது எந்த பெண்கள் என்பதை பொறுத்தது என்றான் அவன் மேலும் நக்கலாக
  மதுமிதாவிற்கு எரிச்சலாக வந்தது. மிஸ்டர் அபிஷேக் நான் வேலைக்கு வருவதாக இல்லை நீங்கள் வேறு யாரையாவது நியமித்துக் கொள்ளுங்கள்!
  அது முடியாதே!
ஏன் ஏன் என்னை போல எத்தனையோ பேர் வேலைக்கு காத்துக் கிடக்கிறார்களே அவர்களுக்கு உங்கள் காரியதரிசி வேலையைத் தரலாம் அல்லவா?
  தரலாம்தான்! ஆனால் அதற்காக மீண்டும் நேர்முகத்தேர்வு அது இதுவென்று வைத்து நேரமும் பணமும் விரயமாகும் எனவே வீண் செலவு வைக்க வேண்டாமென்றுதான்...
  ஆம் வீண்செலவுதான் என்று மதுமிதாவிற்கு புரிந்துதான் இருந்தது ஆனாலும் அந்த ஸ்வேதா அவள் முன் மீண்டும் ஒருமுறை அவமானப் படவேண்டுமா? என்று அவள் மனம் யோசித்தது.
  என்ன பேச்சையே காணோம்! நீ வேலைக்கு வருகிறாய்தானே! இன்று ஏகப்பட்ட அலுவல்கள் எனக்கு அதைவிட்டு உன்னிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டிய சூழலாகிவிட்டது.
   ஏன் கெஞ்சவேண்டும் நீங்கள் வேறு நபரை பார்த்துக் கொள்ளுங்கள்! என்னை பொறுத்தவரை அந்த வேலை தேவையில்லை என்றாள் மதுமிதா.
   அப்படி நீ சொல்ல முடியாது மது!
  ஏன் ஏன் முடியாது? வேலைக்கு வருவதும் வராததும் என் விருப்பம் தானே!
  அது வேலையில் சேரும் முன்!
  ஆமாம் நான் என்ன உங்கள் கம்பெனியில் ஜாய்ன் பண்ணி விடவில்லையே?
  மது நேற்றே உனக்கு அப்பாயிண்ட் மெண்ட் ஆர்டர் போட்டாகிவிட்டது. நேற்று நீ கிளம்பும் சமயம் ஒரு ஃபைலில் கையெழுத்து போட்டிருப்பாய் அல்லவா  அது கம்பெனியின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ் அதில் நீ கம்பெனியில் சேர ஒத்துக் கொண்டதாயும் ஒரு வருடத்திற்கு வேலையை விட்டு நிற்க மாட்டேன் என்றும் ஒத்துக் கொண்டு கையெழுத்துப் போட்டிருக்கிறாய் அதனால் நீ வரவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
   இது சீட்டிங்! நான் இன்று தான் ஜாய்ன் பண்ணுவதாக சொன்னேன் நீங்கள் ஏன் நேற்றே அப்பாயிண்ட்  மெண்ட் செய்தீர்கள்?
  ஒரு நல்ல ஒர்க்கரை இழக்க எந்த நிறுவனமும் விரும்பாது!
 இல்லை! நான் வரமுடியாது!
 அப்படியானால் நீ சட்டப்படி எனக்கு ஐ மீன் கம்பெனிக்கு சேரவேண்டிய இழப்பீடை செலுத்த வேண்டியிருக்கும்.
 ஆகட்டும் செலுத்தி விடுகிறேன் அது எவ்வளவு என்று சொல்கிறீர்களா?
 எல்லாவற்றையும் போனிலேயே முடித்துவிடப் பார்க்கிறாயே? அதை கணக்கீடு செய்ய வேண்டி உள்ளது. இப்பொழுதே சொல்ல முடியாது!
 அப்படியானால் எப்போது முடியும்?
 நீ இன்று மாலை அலுவலகம் வந்து அறிந்து கொள்ளேன்!
 இனி ஒருமுறை உங்கள் அலுவலகப்படி ஏறமாட்டேன்!
 சரி லிப்ட் மூலம் வந்து சேர் ! என்றவன் போனை துண்டித்தான்.
 என்ன இவள் பெரிய ராங்கிக் காரியாக இருப்பாள் போலுள்ளதே! இவள் பின்னால் சுற்றுகிறோமே! அவளானால் கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறாளே! இவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது சிந்திக்க ஆரம்பித்தான் அபிஷேக்.
  என்னம்மா! யாரு போன்லே! நேத்து என்ன தான் நடந்துச்சு? குளிச்சிட்டு வந்து சொல்றேன்ணே! குளிச்சு வந்ததும் போன் வந்துடுச்சு இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்கே?
  அப்போதுதான் மதுமிதா கவனித்தாள் நேரம் ஓடிப்போனதை கிட்டத்தட்ட அரை மணிநேரம் பேசியிருக்கிறாள். அவளால் நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது. பேசிக்கொண்டே இருந்தவன் திடிரென துண்டித்து விட்டானே! பேச்சில் என்ன ஒரு எள்ளல்! இவனை சரிக்கு சரி கேட்க வேண்டும். அதெப்படி ஏமாற்றி கையெழுத்து வாங்குவான்?
  ஏன்மா! என்ன ஆச்சு? யாரு போன்ல? ஏன் ஒரு மாதிரி இருக்கே? அன்னபூரணி கேட்கவும் மீண்டும் இயல்புக்கு திரும்பினாள் மதுமிதா.
  அம்மா ஒண்ணுமில்லேம்மா! அந்த கம்பெனியில் இருந்துதான் போன் வந்துச்சு வேலைக்கு வரலையான்னு கேட்கறாங்க?
  அவ்வளவுதானா? வர விருப்பமில்லேன்னு சொல்லிட வேண்டியதுதானே!
  அப்படித்தான் சொன்னேன் ஆனா கட்டாயம் வந்து ஆகணும்னு சொல்றாங்கம்மா!
  ஏம்மா அது நல்ல கம்பெனிதானே! உனக்கு ஏதும் சங்கடம் தர வேலை இல்லையே அப்ப போய் ஜாய்ன் பண்ணிடேன் அவங்களும் கூப்பிடறாங்கன்னு சொல்லறீயே!
 அவங்க கூப்பிட்டா உடனே போயிடனுமா?
 இல்லம்மா! யாரும் வேலைக்கு வான்னு போன் பண்ணி கூப்பிடமாட்டாங்க! ஆனா இவங்க கூப்பிடறாங்கண்னா உன் மேல ஏதோ நல்ல அபிப்பிராயம் இருக்கவேதானே கூப்பிடறாங்க!
 மண்ணாங்கட்டி! அபிப்பிராயமாம்! அபிப்பிராயம்! ஏமாத்தி கையெழுத்து வாங்கிட்டு இப்ப மிரட்டுறாங்கம்மா ! நீ என்னடான்னா!
  என்னது என்னம்மா சொல்றே? எனக்கு ஓண்ணுமே புரியலையே தாய் மிரள மதுவிற்கு ஏன் சொன்னோம் என்று ஆகிவிட்டது.
  ஒண்ணுமில்லேம்மா! நீ பயப்படாதே நான்  பார்த்துக்கறேன்!
இல்ல நீ ஏதோ மறைக்கிற என்ன சொல்லு என்றாள் தாய் ஒன்னுமில்லேன்னு சொல்றேன் இல்ல நீ ஏன் திரும்பவும் திரும்பவும் கேட்கிற?
 இல்லேம்மா! ஏதோ மிரட்டறாங்கண்னு சொன்னியே! எனக்கு நெஞ்சு படபடன்னு அடிச்சிகிது!
சும்மாவே எல்லாத்துக்கும் பயப்படுவ நீ அவங்க கம்பெனிக்கு வேலைக்கு வரச்சொல்லி கூப்பிடறாங்க வரலைன்னா நஷ்ட ஈடு தரணுமாம்!
  ஏன் நீதான் இன்னும் சேரவே இல்லையே!
அதைத் தான் நானும் சொன்னேன்! ஆனா அந்த கம்பெனிக்காரன் நீ நேத்தே ஜாய்ன் பண்ணிட்டேன்னு சொல்லறாங்க
 அதுமட்டுமில்லே நான் அவங்க ரூல்ஸ்ல கையெழுத்து வேற போட்டு தொலைச்சிட்டேன்
 சரி எவ்வளவு கட்டணமுமாம்?
  அதை சொல்லலே சாயங்காலம் வரச் சொல்லி இருக்காங்க!
நமக்கு ஏண்டி இப்படியெல்லாம் ஆகுது?
 நீ சும்மா பயப்படாதேம்மா! நான் சாயந்திரமா கம்பெனிக்கு போயிட்டு வந்துடறேன் ஒண்ணும் ஆகாது நீ கவலைப் படாதே என்று தாயை தேற்றினாள் மகள்.
  மாலை ஒரு 4 மணி அளவில் அபியின் அந்த சாப்ட் வேர் நிறுவனம் முன் வந்து நின்றாள் மதுமிதா.
 நல்ல வேளையாக லிப்ட் வேலை செய்ய நாலாவது மாடிக்குச் சென்று ரிசப்ஷனிஸ்டிடக் தன் வருகையை தெரிவித்தாள்.
  அனுமதி கிடைத்ததும் அபிஷேக்கின் அறைக்குள் நுழைந்தாள் மதுமிதா!
சொன்னபடியே படி ஏறாம லிப்ட் வழியா வந்துட்டீங்க போல என்று சிரித்த அபிஷேக்கை எரித்து விடுவது போல பார்த்தாள் மதுமிதா.
    நிலவு வளரும்(8)

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2