எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வைத்த கரூர் டாக்டர் மோகன்

கரூர்: கரூரில் உள்ள பண்டரிநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர் பலரது பார்வையை கவர்ந்துள்ளது. இது ஒரு டாக்டரின் வீடாகும்.

கரூர் நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் நிற்கும் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப கரூரில் உள்ள பல்வேறு பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு ரூ 300 முதல் 2000 வரை வாக்களிக்க ஊக்கத் தொகை வழங்கி வருகின்றனர். அதிமுக, திமுக வேட்பாளர்கள்தான் இதில் முன்னணியில் உள்ளனராம்.

இந்த நிலையில், கரூர் பண்டரிநாதன் தெருவில் வசிக்கும் டாக்டர் மோகன் என்பவரது வீட்டின் கேட்டில், எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகம் தாங்கிய டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இநத் பேனர் அந்த வழியாக வரும் பலரது பார்வையை கவர்ந்துள்ளது. யாரும் காசு கொடுக்க வந்து விடக் கூடாது என்பதற்காகவும், வாக்களிக்க காசு வாங்கக் கூடாது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த போர்டை டாக்டர் மோகன் வைத்துள்ளார்.

இதைக் கண்டு அந்த வழியாக வரும் அரசியல் கட்சி நிர்வாகிகள் தலையை குனிந்தபடியே செல்கின்றனர். ஆனால், நடு நிலை வாக்காளர்கள் இந்த வாசகத்தை கண்டு சபாஷ் என பாரட்டுகின்றனர்.

இந்த பேனர் வைத்து பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்க முயன்றோம். அவர்கள் நமக்கு அளித்த பதில், ''நோ கமெண்ட்ஸ். நன்றி''.

பாராட்டுக்குரிய விஷயம்தான்!
 டிஸ்கி} எல்லா ஊறிலும் ஓட்டுக்கு பணம் வாங்கும் செயல் பேஷனாகியுள்ள இந்த காலத்தில் கரூர் டாக்டர் மோகனை பாராட்ட வார்த்தைகள் இல்லை! மக்கள் ஒவ்வொருவரும் இப்படி மாறினால் கண்டிப்பாக மாநிலம் மாறும் என்பதில் ஐயமில்லை!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2