ஸ்டாரும் ஸ்டார் பிளஸும்!தீபாவளி ஜோக்ஸ்!

ஸ்டாரும் ஸ்டார் பிளஸும்!தீபாவளி ஜோக்ஸ்!

டிஸ்கி} தீபாவளி(லி) நெருங்கிவிட்ட வேளையில் என்னுடைய நூலகத்தில் பழைய தீபாவளி மலர்களை புரட்டினேன். இப்போது வாங்குவது இல்லை! அதில் கிடைத்த சில துணுக்குகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!


1.“தீபாவளி போனஸ் பணத்தை ஒழுங்கா கொடுத்திடு!”
 “உன்னைவிட ஒருத்தன் முந்திகிட்டான்!”
  “யார் அவன்?”
  ‘கடன் கொடுத்த சேட்டு!”
                -ஜீவி
2. “பாருய்யா அக்கிரமத்தை! நம்ம ஸ்டேஷன்ல அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களாம்.. அதுக்காக தலை தீபாவளி இங்கேதான் கொண்டாடுவேன்னு ஒரேடியா அடம்பிடிக்கிறான் கேடி கபாலி!”

3. உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கணும் அதுதான் உயர்ந்த பண்பாடு!
   அதுக்காக தீபாவளி ஸ்வீட்ட உப்பை போட்டுச் சாப்பிடா சொல்றதா?!
                                          -ஜீவி
4. ஒரு பட்டுப்புடவை செலக்ட் பண்ண பத்துக்கடை ஏறி இறங்குறியே ஞாயமா?
   ஒரு பெண்டாட்டியை செலக்ட் பண்ண நீங்க முப்பது வீடு ஏறி இறங்கினேன்னு பீத்திக்கலை!
                    -வெ. சீதாராமன்.
5.உங்க கடை இட்லி மல்லிகைப் பூ மாதிரி இருக்கு!
  அவ்ளோ மெத்துன்னு இருக்கா?
 சைஸை சொன்னேன்! கொஞ்சம் பெரிசா போட்டுத் தொலைங்கசார்!
                         -K அனந்தன்.

6.அன்பே நீ ஸ்டார் மாதிரி இருக்கே!
  அது இருக்கட்டும் என் வயித்துல ஸ்டார்பிளஸ் வளருதே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க..!
                             -க. கலைவாணன்.

7.அடடா என் வீட்டுக்காரகிட்ட உனக்கும் ஒரு புடவை எடுத்துவரச் சொல்ல மறந்துட்டேனே!
   கவலையை விடுங்கம்மா! அதெல்லாம் அவர் கரெக்டா செஞ்சிடுவாரு!
                               -கமுதி எஸ்.ஜெயராமன்
8.கடவுள் உனக்கு காட்சி தந்து இந்த செடியை கொடுத்துட்டு போனாரா.. ஏண்?
  நான் தா வரம் தா வரம்னு கேட்டதை அவர் தப்பா புரிஞ்சிகிட்டார்னு நினைக்கிறேன்!
                            -சாயம் வெ. ஜெயராமன்.
9.உங்க நாய் ஏன் என்னை அமைதியா பாக்குது?
  குரைக்கிற நாய் கடிக்காதுனு அது காதுபட சொல்லிட்டேன்!
                              - அம்பை தேவா
10 ஏன் வீட்டு உள்ளேயே ஆட்டம் பாம் வெடிச்சீங்க?
 நீங்கதானே வாடகை கொடுக்க முடியலைன்னா வீட்டை காலி பண்ணிடுன்னு சொன்னீங்க!
                        -வி.சாரதி டேச்சு

11.கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் தரைச் சக்கரம் சுத்தமாட்டேங்குது!
   முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க அது கொசுவத்திச் சுருளு...!
                                  - தஞ்சை தாமு
12.மாப்பிள்ளைக்கு காது கேக்காதுங்கற விஷயம் தலை தீபாவளி அன்னிக்குத்தான் தெரிஞ்சது!
   எப்படி?
  இந்த வருஷம் தீபாவளிக்கு ஏன் யாருமே பட்டாசு வெடிக்கலைன்னு கேட்டாரு!
                          - வி சாரதி டேச்சு

13. தீபாவளி அன்னிக்கு நீங்களே பலகாரம் செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா?
  ஆமா டாக்டர்! அதனால என்ன?
அதிர்ச்சியான விஷயம் எதுவும் அவர்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?
                                எஸ்.எஸ்.பூங்கதிர்.
14.நான் தாலாட்டுப் பாடியும் பையலு தூங்கலியே! நீங்க எப்படி தூங்க வைச்சீங்க?
   நீ இனிமே பாடமாட்டாய்னு அவனுக்கு வாக்குறுதி அளிச்சேன்!
                                   பெட்லி
15.தம்பி மணி என்னங்க?
  ஒன்பதுபத்து..
 என்னய்யா கிண்டலா? ஒன்பதா? பத்தா?
        எஸ் வெங்கட்.

நன்றி தினமலர், கலைமகள், ஆனந்தவிகடன் தீபாவளிமலர்கள்.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. அனைத்து சிரிப்பு துணுக்குகள் நன்று. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2