இது எப்படி இருக்கு?


இது எப்படி இருக்கு?


நண்பர் ஒருவர் சொன்ன உண்மைக் கதை இது.ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கவே உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அந்த நண்பர் ஒரு டெக்ஸ்டைல் பிசினஸ் நடத்தி வந்தார் தொழில் விசயமாக பல்வேறு இடங்களுக்குச் செல்வது வழக்கம்.அப்போது நேர்ந்த சுவையான சம்பவம் தான் இது!

   நண்பர் தொழில் சம்பந்தமாக பேச சென்னைக்கு வந்திருக்கிறார். மிண்ட் (தங்கசாலை) நிறுத்தத்தில் இறங்கியிருக்கிரார். ஒரே தாகமாக இருக்க அருகில் ஏதாவது கடை தென்படுகிறதா என்று பார்த்திருக்கிறார். தொலைவில் ஒரு பழரசக் கடை தென்படவே அங்கு சென்றிருக்கிறார்.

  ஒரு சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு காத்து நிற்கும் சமயம் அங்கு ஒரு வயதான பெண்மனி  பிச்சைக் கேட்டு வந்திருக்கிறாள். கடைக்குச் சென்று பிச்சை கேட்டுத் தொந்தரவு செய்திருக்கிறாள். கடைக்காரனோ காலங்கார்த்தாலே இதுங்கிட்ட ஒரே ரோதனையாப் போச்சே என்று அலுத்து விரட்டி அடித்து இருக்கிறார். ஆனாலும் அந்த பிச்சைக்காரி இடத்தை விட்டு நகராமல் பிச்சை கேட்டு நச்சரிக்க கடைக்காரன் சில்லறையை எடுத்து வீசி எறிந்திருக்கிறார்.

   அதை எடுத்துக் கொண்டு அந்த பெண் சென்றதும் நண்பர் கடைக்காரனை பார்த்து கேட்டிருக்கிறார் ஏம்பா அவ்வளவு கோபம்? ஒரு ரூபாவ முதல்லயே கொடுத்து அனுப்பியிருக்கலாமில்லையா? என்று வினவ கடைக்காரன்  அட போங்க சார்! விவரம் தெரியாத பேசாதீங்க நான் இந்த இடத்துல இருவது வருசமா வியாபாரம் செய்யறேன் கடை இடம் சொந்தமில்லை வாடகைதான் கொடுத்துகிட்டு இருக்கேன்! ஆனா தோ பிச்சை கேட்டு போச்சே அந்த பொம்பளை ஆறு போர்சன் உள்ள வீட்டுக்கு சொந்தக்காரி மாசமான வாடகை கை நிறைய வருது! ஆனா பிச்சைக்கார வேசம் போடுதே அந்த வவுத்தெரிச்சல்தான் என்றானாம்.

  நண்பர் அசந்து விட்டாராம் பிச்சைக்காரிக்கு வாடகைக்கு விடற அளவுக்கு வீடு இருக்கா? ஆச்சர்யத்தில் திளைத்து நின்றபோது அந்த பிச்சைக்காரி மீண்டும் வந்து இவரிடம் பிச்சைக் கேட்டாளாம். நண்பர் சுதாரித்து! ஏம்மா யாருகிட்டே பிச்சை கேட்கிற நான் உன் வீட்டுல வாடகைக்கு இருக்கேனே அது கூடவா தெரியலை? என்றாராம்.

  அவளும் அப்படியா சார் கண்ணுத் தெரியலை! எந்த போர்சன்? என்று வினவ நண்பரும் அந்த கடைசி போர்சன்ல தான் என்று பீலா விட அவள் அப்படியா சார் ! என்று அங்கிருந்து கிளம்பி விட்டாளாம்.

  இதை பார்த்துக் கொண்டிருந்த கடைக்காரன்! சார் நான் கோடுதான் போட்டேன் நீங்க ரோடே போட்டுட்டீங்களே! என்று சிரித்தானாம்!

  இது எப்படி இருக்கு?

டிஸ்கி} பிச்சைக்காரர்கள் எவ்வளவு வளமாய் உள்ளனர் என்பதற்கு இது உதாரணம். இனியாவது பிச்சை போடும் போது யோசியுங்கள்! உடல் வளு இல்லாதவர்கள் ஊணமுற்றவர்களுக்கு மட்டுமே உதவி செய்யுங்கள்!

 தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. இன்றைய நிகழ்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறது

    ReplyDelete
  2. ///
    இது எப்படி இருக்கு?////

    சூப்பரா இருக்கு பாஸ்

    ReplyDelete
  3. very nice article....
    i always try to avoid giving money to beggers...
    rather i will encourage if someone is trying to sell some product for their living by buying it from them.

    ReplyDelete
  4. Shiva said...

    very nice article....
    i always try to avoid giving money to beggers...
    rather i will encourage if someone is trying to sell some product for their living by buying it from them.

    thank you !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!