முனைப்போடு செயல்படு!
முனைப்போடு செயல்படு!
முடியும் என்று
முனைப்போடு
செயல்படு தோழா!
உன்னால்
முடியாதது
ஏதும் இல்லை
இவ்வுலகில்!
முடியும் என
நினைத்ததால்தான்
ஆம்ஸ்டாராங்கால்
நிலவில் பீடுநடை
போடமுடிந்தது
முடியும் என்று
நினைத்ததால்தான்
சர்ச்சிலால்
ஹிட்லரை வீழ்த்த
முடிந்தது
முடியும் என்று
நினைத்ததால்தான்
காந்தியால்
வெள்ளையனை
விரட்ட முடிந்தது
முடியும் என்று நினைத்ததால்தான்
அப்துல் கலாமால்
இந்தியா விண்வெளியில்
சாதனை படைக்க முடிந்தது
முடியும் என்றநினைப்பே
தாரக மந்திரம்!
முயற்சியும் முனைப்பும்
இருந்தால்
முடியாதது ஏதும் இல்லை
தோழா!
முயன்று பார்
உன்னால் முடியும்!
உயர்வு உன் முன்
கைகட்டி நிற்கும்!
முனைப்போடு செயல்படு!
முடிவில் வெற்றிநடை போடு!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே
வாக்களித்து பிரபல படுத்தலாமே!
Comments
Post a Comment