தென்றலைத் தெரியுமா?ஆச்சர்யமான உண்மைகள்!
தென்றலைத் தெரியுமா?ஆச்சர்யமான உண்மைகள்! பொது அறிவு
1. மனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக 50 கோடி தடவை சுவாசிக்கிறான்.
2. பூனைகளால் இனிப்பை உணர முடியாது. அதாவது ருசிக்க முடியாது.
3. லண்டன் கிராமபுறங்களில் மாடுகளுக்கு தீவணமாக பழைய பேப்பர் போடப்படுகிறது. வைக்கோலைவிட பேப்பரில் அதிக சத்து இருப்பதே காரணம்
4. உலகிலேயே மிக நீளமான கழுத்தை உடைய பெண்கள் மியான்மர் நாட்டில் உள்ளனர். கரேனி என்ற பழங்குடி மரபை சேர்ந்த இவர்கள் கழுத்தைச் சுற்றி தாமிர வளையங்கள் அடுக்கி கழுத்து நீளத்தை அதிகரிக்கின்றனர்.
5. சீன நாட்டைச் சேர்ந்த டி-சய்-லூன் என்பவரால் கி.மு200வது ஆண்டில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
6. தேனிக்களுக்கு மொத்தம் 5 கண்கள் உள்ளன. தலையின் உச்சியில் மூன்று கண்களும் முன் பக்கத்தில் இரண்டு கண்களும் அமைந்துள்ளன.
7. தங்கத்தின் மதிப்பு உலக மார்க்கெட்டில் லண்டனில் நிர்ணயிக்கப்படுவது போல வைரத்தின் மதிப்பு ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நிர்ணயிக்கப்படுகிறது
8. பசிபிக் சமுத்திரம் என்ற பெயரை அந்த கடலுக்குச் சூட்டியவர் மெகல்லன் என்ற போர்ச்சு கீசிய மாலுமி. பசிபிக் என்ற சொல்லுக்கு அமைதி என்று பெயர்.
9. நீலத்திமிங்கலம் ஒரு நாளைக்கு 3 டன் உணவை சாப்பிடும்.
10. மிகச்சிறிய பறவை தேன்சிட்டு. நெருப்புக் கோழி இதைவிட 97000 மடங்கு பெரியது.
11. கோல்ப் விளையாட்டின் மற்றொரு பெயர் லிங்க்ஸ்
12. அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் 560 கி.மீ நீளமுடைய மிகப்பெரிய மலைத்தொடர் உள்ளது.
13. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள தவளையினம் கோலியாத். இதன் நீளம் இரண்டரை அடி (75செமீ) இதுதான் தவளை இனங்களில் மிகப்பெரியது
14. ஒரு மின்னல் 250 கோடி வோல்ட்ஸ் மின் சக்தி கொண்டது.
15. மணிக்கு 15.கி.மீ முதல் 19 கி.மீ வரை வீசும் காற்றுக்கு தென்றல் காற்று என்று பெயர்.
பல்வேறு நூல்களில் இருந்து தொகுப்பு.
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலப் படுத்தலாமே!
Comments
Post a Comment