சூப்பர் சிங்கர் போட்டியும் அப்பாவி வீவர்ஸும்!


சூப்பர் சிங்கர் போட்டியும் அப்பாவி வீவர்ஸும்!

விஜய் டிவி மக்களிடையே ரியாலிடி ஷோக்களை நடத்தியே பிரபலமானது என்றால் மிகையல்ல! முதன் முதலில் அது நடத்திய ரியாலிடி ஷோக்கள் பிரபலமடைந்து போகவே அதில் மேலும் பல புதுமைகளை செய்ய ஆரம்பித்தது.
   இந்த ரியாலிட்டி ஷோக்கள் மற்ற டிவிக்களிலும் வர ஆரம்பிக்கவே விஜய் டிவி இந்த ஷோக்களில் பரபரப்பை ஏற்படுத்த நாடகங்களை புகுத்த ஆரம்பித்தது. அதில் ஒன்றுதான் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிம்புவிற்கும் பிருத்திவிராஜுக்கும் நடந்த மோதல்.
   இந்த மோதலை காட்டியே டி ஆர்.பியில் ரேட்டை அதிகரித்து அந்த நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க செய்து விட்டது. மக்கள் தீர்ப்பு என்று திறமையானவர்களை விட்டுவிட்டு வசீகரம் செய்பவர்களை வெற்றியாளர்களாக அறிவிப்பது விஜய் டி.விக்கு ஒன்றும் புதிது அல்ல. ஆனால் பார்க்கும் அப்பாவி வீவர்ஸ்கள்தான் இதில் பலிகடா ஆகின்றனர்.
  அப்படி சமிபத்தில் வீவர்ஸ் எதிர்பார்க்காத முடிவு சொதப்பல் முடிவு சூப்பர் சிங்கர் சீசன் 3ல் ஏற்பட்டது. நல்ல வேளை நான் இறுதி போட்டியை காணவில்லை. கண்டிருந்தால் மட்டும் என்ன செய்ய முடியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு கண்ணீர் துளிகளைத்தான் விட்டிருக்க முடியும்.
   ஆம் சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் வென்றவர் சாய் சரண். நல்ல பாடகர்தான் இல்லையென்று சொல்ல வில்லை. ஆனால் முதல் பரிசு அன்று அவருக்கு கிடைத்திருக்க கூடாது என்று அங்கிருந்த நடுவர்களே கூறுமளவுக்கு யாரும் எதிர்பார்க்காத பரிசாக அவருக்குக் கிடைத்து விட்டது. இவர் சூப்பர் சிங்கர் ஜீனியரில் தோற்றவர்.அதற்காக திறமைசாலியான சத்ய மூர்த்தி , பூஜாவை பின்னுக்கு தள்ளி இவருக்கு ரசிகர்கள் ஓட்டெடுப்பு மூலம் முதல் பரிசு வழங்கி விட்டனர்.
   அப்புறம் எதற்கு நடுவர்கள்? எதற்கு மதிப்பெண்கள்? எல்லாவற்றையும் ரசிகர்களின் முடிவிற்கே விட்டுவிட வேண்டியது தானே! இதில் வேடிக்கை என்னவென்றால் நடுவர்களால் முதல் ஃபைனலிஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட்ட பூஜாவிற்கு 4வது இடம். வினோதமாக இல்லை? சாய் சரனும் சந்தோஷும் நடுவர்களால் நிராகரிக்கப்பட்டு வைல்ட் கார்டு மூலம் உள்ளே வந்தவர்கள். அவர்களை அப்பொழுது உள்ளே அனுப்பியவர்களும் ரசிகர்கள்தானாம். இந்த வைல்ட் கார்டில் இன்னும் எத்தனையோ திறமை சாலிகள் ஓரங்கட்டப்பட்டனர்.
   இது ஏதோ பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றும் வேலையாகத்தான் தெரிகிறது. வெற்றியாளரை முன்கூட்டியே பிக்ஸ் செய்துவிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஏனேனில் முதல் ரியாலிட்டி ஷோவான ஜோடி நம்பர் 1ன் போதே திறமையாக ஆடிய ஒரு ஜோடியை ஒதுக்கி வேறொரு கவர்ச்சியான ஜோடிக்கு பரிசு வழங்கியது விஜய்டிவி.
   இனியாவது விஜய்டிவி இறுதிப் போட்டிகளின் முடிவை நடுவர் வசம் அறிவிக்க விடவேண்டும். ரசிகர்கள் தேர்ந்தெடுப்பார்கள் அவர்கள் எத்தனை வாக்கு வேண்டுமானாலும் போடலாம் என்று மொபைல் கம்பெனிகள் சம்பாதிக்க விடக் கூடாது.
 மொபைல் கம்பெனி சம்பாதிக்க இந்த மாதிரி போட்டிகள் நடத்துவதை விட திறமையான நெட்வொர்க்கை கொடுத்தால் போதுமே!  இந்த போட்டி முடிந்த வுடனேயே ஜுனியர் சிங்கர்ஸ் ஆரம்பித்து விட்டார்கள் இதிலாவது உண்மையான திறமை சாலிகளை கண்டெடுப்பார்களா? இல்லை வழக்கம் போல அப்பாவி வீவர்ஸை மண்டை காய விடுவார்களா? தெரியவில்லை!.
 இந்த டிவி மட்டுமல்ல எல்லா டிவிக்களிலும் இந்த ரியாலிட்டி ஷோக்கள் அதிகரித்துவிட்டன. இது மக்களுக்கு இந்த ஷோக்களின் மீது இருந்த ஆர்வதை குறைப்பதாகவே ஆகிவிட்டது. ஒரு டிவியில் குறைந்தது 3 அல்லது 4 ரியாலிட்டி ஷோக்கள் இருந்தால் என்ன செய்வது மக்கள் மண்டை காய்வதுதான் மிச்சமாகிறது.
   அதிலும் நடனப் போட்டி என்று அரைகுறை ஆடையுடன் அவர்கள் அடிக்கும் கூத்து வீட்டில் வளரும் சிறுகுழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆடுபவர்களுக்கு மேல் இதற்கு நடுவர்களாக வரும் முன்னாள் நடிகைகளின் ஆடையலங்காரம் அருவெறுக்கதக்கதாய் உள்ளது. இதை நாம் குடும்பத்தோடு உட்கார்ந்து வேறு பார்த்து தொலைக்கிறோம்.
   சின்ன குழந்தைகள் மிகவும் புத்திசாலிகளாக உள்ள இந்த கால கட்டத்தில் அவை இதை அப்படியே மனதில் பதித்து அர்த்தம் அறியாமல் பாடவும் ஆபாச அசைவுகளோடு ஆடவும் செய்கையில் தான் நாம் நம் தவறை உணர்கிறொம்.
  எனவே இந்த ஷோக்கள் ரியாலிட்டி அல்ல! என்பதை அப்பாவி வீவர்ஸ் புரிந்து கொண்டு அதற்கு கவலைப்படாது நம்முடைய பணிகளை மட்டும் கவனிப்பார்களே ஆனால் இவை வெகு சீக்கிரம் நம்மை தொல்லை படுத்துவதில் இருந்து தொலையும் .
  ஆனால் இதிலேயே மூழ்கி இதற்காக வாக்கு போட்டுக் கொண்டு இருக்கும் சிலர் இருக்கும் வரையில் இந்த டிவீக்களின் அக்கிரமம் அடங்காது!.

 தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. இக்காலத்திற்கு தேவையான சரியான பதிவு. ஒரு உண்மையான குடிமகனின் குமுறலாக இதை எடுத்து கொள்ளலாம். சில தொலை காட்சிகள் தங்கள் லாபத்திற்காக சில தவறுகளை செய்வதால் , உண்மை நிகழ்ச்சிகள் புறக்கணிக்கப்படுகிறது என்பது உண்மை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2