Posts

Showing posts from September, 2011

என்னால முடியாது! பாப்பா மலர்

Image
என்னால முடியாது! காலை வேளை! ஏய் சுதா! அங்க என்ன பண்றே? இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவி வை! வா இங்க வேலை நிறைய இருக்கு! சதா புத்தகம் படிச்சிகிட்டு இருந்தா எல்லா வேலையும் ஆகிடுமா? என்று குரல் கொடுத்தாள் சுதாவின் தாய் விஜயா.    “என்னால முடியாது! ரமா என்ன பண்றா? அவளை கூப்பிட்டு கழுவச் சொல்லு! இந்த வேலையெல்லாம் எனக்குத் தெரியாது! பிடிக்கவும் பிடிக்காது! என்று மறுத்தாள் சுதா.    ஆமா! வேலைன்னாலே உனக்கு கஷ்டமா இருக்கு! இந்த வயசுல கத்துகிட்டாத்தானே நாளைக்கு உதவும். எல்லா வேலையும் ரமாவே செஞ்சிகிட்டு இருந்தா நீ எப்ப கத்துக்கிறது? முதல்ல கஷ்டமாத்தான் இருக்கும் போகபோகப் பழகிடும். வாம்மா! சுதா கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா!       அதெல்லாம் முடியாது ரமாவை கூப்பிட்டுக்க நான் காமிக்ஸ் படிச்சிகிட்டு இருக்கேன் என்று கதை புத்தகத்தில் மூழ்கினாள் சுதா.    அவ தண்ணி கொண்டு வர போயிருக்கா! உன்னால முடியுமா முடியாதா? அம்மா கத்த என்னால் முடியாதுன்னு சொல்லிட்டேன் இல்லே ஏன் தொந்தரவு பண்றே? என்று மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள் சுதா.    பாவம் ரமா அவளையே எவ்...

ஹை! ஹைக்கூ! 2

Image
வானம் வரையும் வரைபடம் மின்னல்! அதிகாலையிலும் வியர்த்தன புற்கள் பனி பின்னிரவில் எங்கோஒலிக்கும் பாடல் தாலாட்டு! விரட்ட விரட்ட விடாமல்துரத்துகிறது காய்ச்சல்! கைகால்களை உடைத்தும் சிரித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார். மழை பூமிக்கு குடை காளான்கள்   பரபரப்பான உலகில் அமைதியாய் நின்றது சிலை தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

பல்லாவரத்தில் நள்ளிரவில் உலா வந்த "பேய்': அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்

Image
குறி சொல்பவரின் பேச்சை கேட்டு, பல்லாவரம் மார்க்கெட்டில் இளம்பெண் நிர்வாணமாக சென்றார். அவரை, "பேய்' என நினைத்து பலரும் அலறி அடித்து ஓடினர். துணிச்சல்கார இன்ஸ்பெக்டர் ஒருவர் பெண்ணுக்கு உடை அளித்து, அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றார். நேற்று முன்தினம் நிறைந்த அமாவாசை. இரவு 1 மணிக்கு சென்னை பல்லாவரம் பகுதியில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தன், ஜீப்பில் ரோந்துப்பணியில் இருந்தார். பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் சென்ற போது, அங்கிருந்து மிகுந்த பதட்டத்துடன் நால்வர் ஓடிவந்தனர்.ஜீப்பை பார்த்ததும் நின்ற அவர்கள் இன்ஸ்பெக்டரிடம்,"" சார் மார்க்கெட்டில் தலைவிரி கோலத்துடன் பேய் உலா வருகிறது,'' என்று கூறினர். அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர், அவர்களை போகச் சொல்லிவிட்டு, தொடர்ந்து பேய் வந்ததாக கூறிய மார்க்கெட் பகுதியில் தன் ஜீப்பை செலுத்தினார். தொடர்ந்து, சென்றபோது, தலைவிரிகோலத்துடன் முகத்தை மறைத்ததுடன், நிர்வாண நிலையில் ஒரு உருவம் எதிரே வந்துள்ளது. இதைக்கண்டு முதலில் பயந்தாலும், பின்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், தன்னிடம் இருந்த டார்ச்சை எட...

கேட்பவர் இதயத்தை நொறுங்க வைக்கும் கள்ளக்குறிச்சி ஆசிரியைகளின் பாலியல் அத்துமீறல்கள்!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்களை மேற்கொண்ட இரு ஆசிரியைகள் குறித்து அந்த சிறுமி கூறியதைக் கேட்கும் போது காது கூசிப் போய் விடும். அந்த அளவுக்கு அறுவறுக்கத்தக்க வகையில் இரு ஆசிரியைகளும் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கொதிப்படைய வைப்பதாக உள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள்தான் 4 வயது ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஷாலினி அப்பகுதியில்உள்ள புகழ் பெற்ற ஏகேடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாள். இந்த நிலையில்தான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஸ்கோ மற்றும் எல்கேஜி ஆசிரியை போர்ஷியா ஆகியோர் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்து கொண்டனர். இந்த அக்கிரமத்தைச் செய்த இருவரும், சிறுமியை மிரட்டியும் வைத்திருந்தனர். நடந்ததை யாரிடமாவது கூறினால் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறையில் வைத்து உன்னைப் பூட்டி விடுவோம் என இவர்கள் மிரட்டியுள்ளனராம். ஆனால் ஆசிரியைகளின் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் தனது மழலை மாறாத குரலில் பெற்றோரிடம் அதைக் கூறியபோது சுரேஷ் தம்பதிய...

தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம்

சென்னை :தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., தேர்வு முறை போன்று, மாநில பாடத்திட்டத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மனப்பாட முறை தேர்வுக்கு பதிலாக சிந்தித்து, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தேர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய தேர்வு மற்றும் மதிப்பீடு முறை (முழுமையான தொடர் மதிப்பீடு முறை) 1 முதல் 8ம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டில் (2012-13) அமல்படுத்தப்படும். 9, 10ம் வகுப்புகளுக்கு, 2013-14 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு:கல்வி கற்கும் முறை மாணவர்களுக்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆசிரியர்களை மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தும் வகையில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன.தற்போதுள்ள தேர்வு முறை, மானப்பாடம் செய்து எழுதும் வகையில் உள்ளது. வகுப்புகளில் படிப்பதை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து செயல்படும் வகையில் இல்லை. கேள்வித்தாள்களும், பாடங்...

மணக்கோலம் காணும் மணமேடையில் மறைந்துள்ள ரகசியங்கள் தெரியுமா?

Image
மணக்கோலம் காணும் மணமக்கள், மணமேடையில் தாலிகட்டிக் கொள்வர். அந்த மணமேடை தத்துவார்த்த ரீதியாக அமைக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரியாது. தாலி கட்டி முடிந்ததும் மணமேடையை மூன்று முறை வலம் வரச் சொல்வது வழக்கம். ஆலயத்தை வலம் வருவது போல மணப்பந்தலை வலம்வர காரணம் மணப்பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் யாவும் தெய்வ வடிவங்களாகும். பந்தலில் ஊன்றப் பட்டிருக்கும் நான்கு கால்களும், நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. திருமணம் விக்னேஷ்வரர் சாட்சியாகவும், அக்னிசாட்சியாகவும் நடைபெறுகிறது. அரசன் ஆணைக்கால் என்று அரசானிக்கால் வைக்கப்படுகிறது. குபேரனுக்குரிய நவதானியமும் வைக்கப்பட்டுள்ளது. மணப்பந்தலை வலம் வரும் பொழுது தெய்வத்தை, திருவிளக்கை, அக்னியை, மரத்தை வலம் வந்து, அவற்றின் அருளையும் பெறுகின்றோம்.  நன்றி தினமலர்                                                                            ...

மகாளய அமாவாசை

Image
    சூரியன் கன்னி ராசியில் புகும்போது (புரட்டாசி மாதம்) எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு செல்லும்படி உத்தரவிடுகிறார். அச்சமயம் நமது இறந்து போன பெற்றோர் அவர்களது பெற்றோர்களுடன் கூடி, நம்மைக் கண்டு ஆசிர்வாதம் செய்வதற்காக வருவார்கள். இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை ஆகும். இதற்கு முன்னதாக வரும் பவுர்ணமிக்கு அடுத்த நாள் (பிரதமை திதி) முதல், அமாவாசைக்கு அடுத்துள்ள பிரதமை வரை உள்ள நாட்கள் மகாளயபட்சம் எனப்படும். இந்த சமயத்தில் நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வரும் பானி, மஹாபானி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்ததாகும். மகிமை மிக்க மஹாளய புண்ணிய காலம்: பிதுர்களை வணங்கும் புண்ணிய காலம் மஹாளயபட்சம் ஆகும். இந்த நாட்கள் பொதுவாக புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக் கப்படும். மகாளய கா...

உலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா, ரத்தன் டாடா

Image
லண்டன்: உலகின் செல்வாக்குமிக்கவர் பட்டியலில் இந்தியாவின் சோனியா காந்தி, ரத்தன் டாடா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். லண்டனில் இருந்து வெளிவரும் நியூஸ்டேட்மேன் பத்திரிகை இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகின் சக்திமிக்க முதல்நிலை மனிதர்கள் 50 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தியை மிக்க திறமையான அரசியல்வாதி என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் 'மேடம் காந்தி' என்ற சிறப்புப் பெயரை அவருக்கு வழங்கியுள்ளது இந்தப் பத்திரிகை. இந்தப் பட்டியலில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ரத்தன் டாடாவும் இடம்பெற்றுள்ளார். உலோகத் தலைவர் என்ற சிறப்புப் பட்டமிட்டு அவரை அப்பட்டியலில் சேர்த்துள்ளது நியூஸ்டேட்மென். ஜெர்மனி அதிபர் ஏஞ்சல் மெர்கெல் உலகின் முதல் செல்வாக்கு மிக்கவராக பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட பாகிஸ்தான் ராணுவ தலைவர் அஷ்பாக் கியானிக்கும் இந்தப் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது. நன்றி தட்ஸ் தமிழ்

என் இனிய பொன் நிலாவே!பகுதி 5

Image
என் இனிய பொன் நிலாவே!                        பகுதி 5                                     “ப்ரியம்வதா” முன்கதை சுருக்கம்}   மதுமிதா இக்கால இளைஞி.   இண்டர்வியு அட்டெண்ட் பண்ண அவளுக்கு உடனே வேலை வழங்கி ஆச்சர்யம் கொடுத்த அபிஷேக் அவளை விரும்புவதாக கூறுகிறான். அதை மறுத்து பஸ் ஏறிய மதுமிதா பர்ஸை தொலைத்துவிட கண்டக்டர் கீழே இறக்கிவிட்டார். இனி}        கையில் பர்ஸுடன் புன் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த அபிஷேக்கை பார்த்ததும் ஆத்திரமாக வந்தது மதுவிற்கு இது இவன் வேலைதானோ? ஆளைப் பார்த்தால் டீசண்டாய் இருந்துகொண்டு இந்த வேலையா செய்கிறான்? என்று நினைத்தவள் மறுகணம் நாக்கை கடித்துக் கொண்டாள். ஒரு மல்டி லெவல் நிறுவனத்தை நடத்தும் அவன் இந்த கேவலமான் வேலை செய்ய மாட்டான் என்று நினைத்துக் ...

பெருமாளின் புண்ணிய மாதம்!

Image
மாதங்களைப் பற்றிய தகவல்கள் சுவையானவை. சமஸ்கிருதத்தில், "பாத்ரபதம்' எனப்படும் மாதம், தமிழில் புரட்டாசி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது. இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எம தர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர். புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, "மகாளய பட்சம்' என்பர்; "பட்சம்' என்றால், "15 நாட்கள்' எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, "மகாபரணி' என்றும், அஷ்டமியை, "மத்யாஷ்டமி' என்றும்,...

படம்

Image
படம்   “அந்த படத்தை இன்று எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று தீர்மாணித்தேன்.ஆனால் மனசாட்சி பயமுறுத்தியது. வேண்டாம்டா யாராவது பார்த்துட்டா அசிங்கம். வெளியே நடமாட முடியாது” என்று பயமுறுத்தியது.     ஆனால் சபலம் தட்டியது. அந்த படத்தில் வரும் காட்சிகளை பார்த்துவிட்டு நண்பர்கள் சொன்னபோது நாமூம் பார்க்க வேண்டும் என்று ஆவலைத் தூண்டியது மனசு.     டேய் சூப்பர்டா மாமு! அருமையா இருக்கு படம் கொடுத்த காசுக்கு குறைவே இல்லாம காட்டியிருக்காங்க! விட்டுறாத இன்னிக்குத் தான் கடைசி நாளாம். கண்டிப்பா போய் பார்த்துடு இதான் சான்ஸ் இல்லேன்னா டவுனுக்குத்தான் போய் பார்க்கணும் என்று ஆவலை வேறு தூண்டி விட்டனர்.    சரி இன்று எப்படியாவது போய் பார்த்து விடுவது என்று தீர்மானித்து கிளம்பினேன்.     வீட்டை விட்டு கிளம்பும் போதே எங்கேடா போறே? என்று அப்பாவின் குரல் என்னைத் தடுக்க தடுமாறினேன். இ.. கோயிலுக்கு! என்று திக்கி திணறி சொல்ல அதுக்கு எதுக்குடா வியர்த்து வழியறே? சரி போய்வா! என்று அவர் பாட்டுக்கு ஈஸிச் சேரில் சாய அப்பாடா என்று பெருமூச்சுடன் கிளம்பினேன...

சச்சின் பயந்தாங்கொள்ளி சோயப் அக்தர் தாக்கு!

Image
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் சோயப் அக்தர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் இந்திய வீரர் சச்சின் மற்றும் திராவிட் பற்றி தெரிவித்துள்ள சில கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது பந்துவீச்சால் உலகின் பல முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு பீதியை அளித்தவர். ஆனால் பல சர்ச்சைகளில் சிக்கிய அக்தர் அணியில் இருந்தே வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை மையமாக கொண்ட தனது சுயசரிதை புத்தகத்தை எழுதிய அக்தர் வெளியிட்டார். 'தங்கள் சர்ச்சைக்குரிய' (கான்ட்ரோவஸ்லீ யுவர்ஸ்) என்ற பெயரில் எழுதியுள்ள அக்தர் அந்த புத்தகத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் மற்றும் திராவிட் ஆகியோரை ஆட்டத்தில் பெரிய திறமைசாலிகள் என்று கூற முடியாது. அந்த 2 பேருக்கும் ஆட்டத்தில் சரியான துவக்கத்தை அளிக்கவோ, ஆட்டத்தை முடிக்கவோ தெரியாது. சச்சின் எனது வேகபந்துகளை சந்திக்க பயந்தது உண்டு. இதை தெ...

பல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ் செயற்கைக்கோள்

Image
வாஷிங்டன்: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சூரியன் மற்றும் பூமியின் வளிமண்டலத்தை குறித்த தகவல்களை திரட்ட நாசா அனுப்பிய செயற்கைக்கோள் இன்று துண்டு, துண்டாக பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பஸ் அளவு பெரியதாகும். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1991-ம் ஆண்டு உயர் வளிமண்டல ஆராயச்சி செயற்கைக்கோளை (யு.ஏ.ஆர்.எஸ்.) விண்ணில் செலுத்தியது. அது பூமியின் வளி மண்டலம் குறித்த பல தகவல்களை அனுப்பி வந்தது. கடந்த 2005-ம் ஆண்டோடு அந்த செயற்கைக்கோள் செயலிழந்தது. அதன்பின் பூமியை வெறுமனே சுற்றி வரும் பல செயற்கைக்கோள்களை போல யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோளும் பூமியை சுற்றி வந்தது. இந்நிலையில் எதிர்பாராவிதமாக அது பூமியின் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது, யு.ஏ.ஆர்.எஸ். செயற்கைக்கோள் மொத்தம் 6.5 டன் எடை கொண்டது. இது நூற்றிற்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து வளிமண்டலத்தில் எரிந்து கொண்டே பூமியை அடையும். இதில் ஏறக்குறைய பல துண்டுகள் வளிமண்டலத்திலேயே எரிந...

எழிலி! பாப்பா மலர்!

Image
      எழிலி! பவளபுரி என்ற ஊரில் பொன்னன் என்ற ஏழை விவசாயி வசித்துவந்தான். அவனது ஒரேமகள் எழிலி. எழிலி பெயருக்கேற்றபடி அழகானபெண். அழகிருக்கும் இடத்தில் அறிவிருக்காது என்பர். ஆனால் அழகும் அறிவும் இணைந்த ஆரணங்கு எழிலி.    பொன்னனுக்கு தெரிந்த ஒரே தொழில் விவசாயம். அவனுக்கு சிறிதளவு நிலம் இருந்தது. அந்த நிலத்தில் பயிரிட்டு வாழ்க்கை நடத்திய அவனுக்கு கஷ்டகாலம் பிடித்துக் கொண்டது. அந்த வருடம் மழைப் பொய்த்தது. கதிரவன் காய்ந்தான். பயிர்களும் காய்ந்தன. ஏழை விவசாயி பொன்னனின் வயல்களும் காய்ந்து போயிற்று.    அவன் சாப்பாட்டிற்கு என்ன செய்வான் பாவம்!அந்த ஊரில் பெரிய மனிதரான மகேந்திரனிடம் சென்று கடனுதவி கேட்டான். பெரிய மனிதர் என்ற போர்வையில் வாழும் மிருகம் மகேந்திரன். அவனுக்கு எழிலியை மணக்க வேண்டும் என்ற விருப்பம் வெறியாக மாறிக்கொண்டு இருந்த நேரமது.    தூண்டிலில் விழுந்த மீனை விட்டுவிடுவானா மகேந்திரன். பொன்னா! நீ நேர்மையானவன் தான் எனக்குத் தெரியும் ஆனால் நான் அடமானம் இல்லாமல் கடன் தருவது இல்லையே?பாவம் உன்னை போன்ற நல்லவர்களுக்குத்தான் ...

கண்களைக் காக்கும் பொன்னான உணவுகள்

Image
கல்வி அறிவு இல்லாதவரை கண்ணிழந்தோர் என வள்ளுவர் குறிப்பிடுவதில் இருந்தே கண்களின் அருமையை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். உலகின் உள்ள அத்தனை அழகையும் நாம் பார்க்க உதவி புரிவது கண்களே. அந்த கண்களை காக்க நாம் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளை பின்பற்றினால் கண்களை பாதுகாக்கலாம். கண்களைக் காக்கும் வைட்டமின் ஏ கண்களுக்கு அத்தியாவசிய தேவை விட்டமின் ‘ஏ’. இதனால் கண்கள் பலத்தையும், நல்ல பார்வையையும் பெறும். விட்டமின் ‘ஏ’ எல்லாவித ஆரஞ்ச் / மஞ்சள் நிற காய்கறிகளிலும், பழங்களிலும் கிடைக்கிறது. முக்கியமாக கேரட், ஆரஞ்ச், பரங்கிக்காய், மாம்பழம், பப்பாளி இவற்றில் விட்டமின் ‘ஏ’ உள்ளது. பசலைக்கீரை, கொத்தமல்லி கீரைகளிலும் உள்ளது. மாமிச உணவில் மீன், லிவர், முட்டைகள் இவற்றில் விட்டமின் ‘ஏ’ கிடைக்கிறது. விட்டமின் ‘ஏ’ வுடன் கூடவே விட்டமின் ‘சி’ யையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விட்டமின் ‘சி’ கண்களில் கண்புரை வராமல் தடுக்கும். நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்ச், எலுமிச்சம்பழம், முட்டைக்கோஸ், குடமிளகாய் மற்றும் தக்கா...

'தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்

Image
மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு. ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத். ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம். 'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவ...

தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: இன்று துவங்குகிறது வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக நடக்கிறது. திருச்சி மாநகராட்சியை தவிர, ஒன்பது மாநகராட்சிகளுக்கு முதல் கட்டமாக அக்டோபர் 17ம் தேதியும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 19ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. இதுகுறித்து, தமிழக தேர்தல் கமிஷனர் அய்யர், நிருபர்களிடம் நேற்றிரவு கூறியதாவது: தமிழகத்தில், ஒன்பது மேயர், 755 மாநகராட்சி வார்டுகள், 125 நகராட்சி தலைவர்கள், 3,697 நகராட்சி வார்டுகள், 529 பேரூராட்சி தலைவர்கள், 8,303 பேரூராட்சி வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 6,470 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 99 ஆயிரத்து 333 கிராம ஊராட்சி வார்டுகள் என, ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 983பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. நகர் பகுதிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய, வாக்காளர்கள் இரண்டு ஓட்டளிக்க வேண்டும்...