உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 12
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 12 அன்பான வாசக பெருமக்களே! ஏதோ விளையாட்டாக இந்த பகுதியை தொடங்கினேன். தமிழ் சொற்களையும் பொருட்களையும் இலக்கியங்களையும் படித்து அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது என்பது உண்மை! இன்றைய பகுதிக்கு எதை எழுதலாம் என்று யோசித்து தமிழ் நூல்களை புரட்டியதில் சுவாரஸ்யமான பகுதி ஒன்று கிடைத்தது. அதை கீழே தந்துள்ளேன். படித்து கருத்திடுங்கள்! திசைச்சொற்கள்: திசைச்சொற்கள் என்றால் என்ன என்று தெரியுமா? படிக்கிற காலத்தில் படித்து இருப்போம்! இப்போது மறந்து போயிருக்கும். சரி அதை அப்புறம் பார்ப்போம். இப்போது கீழே உள்ள பத்தியை படியுங்கள். நம்பி குல்லா வாங்க ரிக்சாவில் ஏறி பஜாருக்குச் சென்றான். கடைக்குள் நுழைந்தவுடன் அலமாரியில் எக்கச்சக்க குல்லா இருப்பதை பார்த்தான். விற்கும் நபரிடம் “குல்லா என்ன விலை?” என்று கேட்டான். விலை இருபத்தைந்து ரூபாய். ஒரு குல்லா வாங்கினால் ஒரு பேனா இனாம் என்றான் கடைக்காரன். விலை ஜாஸ்தியாக உள்ளது என்று கூறிக்கொண்டே துட்டை எண்ணிக் கொடுத்தான் நம்பி. பீரோவில் இர...