ருத்திராட்சம்! சில தகவல்கள்!
ருத்திராட்சம்! சில தகவல்கள்! சிவனடியார்களும் பிராமணர்களும் ருத்திராட்சம் அணிந்திருப்பர். அந்த ருத்திராட்சம் பற்றிய சில தகவல்களை எளிமையாக தந்துள்ளேன். பிழைகள் இருப்பின் பொறுத்து சுட்டிக்காட்டவும். ருத்திராட்சம் தோன்றிய கதை: முன்னொரு காலத்தில் திரிபுரர் என்ற அசுரர்கள் எவராலும் வெல்ல முடியாதவர்களாக இருந்தனர். பிரம்மா விஷ்ணு, இந்திரன் போன்றவர்களுக்கும் தேவர்களுக்கும் தொல்லை தந்த திரிபுரர்களை அழிக்க முயன்று முடியாது போனதால் சிவனிடம் வந்து முறையிட்டனர். அப்போது சிவன் ஆயிரம் வருடங்கள் நிஷ்டையிலிருந்து அகோர ரூபமாய் அக்கினி சுடராய் இருந்தார். அவர் நிஷ்டையிலிருந்து விழித்ததும் அவரது கண்களில் இருந்து நீர் துளிகள் விழுந்தன. அதில் இருந்து ருத்திராட்ச விருட்சங்கள் தோன்றின. அந்த விருட்சங்களில் இருந்து சிவபெருமான் திருவுளப்படி முப்பத்தெட்டு விதமான ருத்திராட்சங்கள் உண்டாகின. வலக்கண்ணாண சூரிய விழியில் இருந்து பன்னிரண்டு விதமான ருத்திராட்சங்களும் இடக்கண்ணான சந்திரவிழியிலிருந்து பதினாறு விதமான ருத்திராட்சங்களும் நெற்றிக்கண்ணான அக்னியிலிருந்து பத்துவிதமான ருத்திராட...