மோசம் செய்வதேன்? கவிதை
மோசம் செய்வதேன்? என்னவளே! என் சுவாசம்கூட உன் வாசத்தை விரும்புகிறது. ஆனால் நீயோ உன் நேசத்தைக் காட்டாமல் மோசம் செய்கிறாயே? நீ சொன்னாய் என்பதாலே! நீசொன்னாய் என்பதாலே மரங்களை நேசித்தேன் மகிழ்ந்தாய்! நீ சொன்னாய் என்பதாலே புத்தகங்களை நேசித்தேன் புன்னகைத்தாய்! நீ சொன்னாய் என்பதாலே விலங்குகளை நேசித்தேன் வியந்தாய்! நீ சொன்னாய் என்பதாலே இசையை நேசித்தேன் இனித்தாய்! நீ சொல்லாமலேயே உன்னை நேசிக்க ஆரம்பித்தேன் விலகிப்போனாய்! தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!