Saturday, July 28, 2012

பூனையும் எலியும் ! பாப்பாமலர்!

பூனையும் எலியும்

அந்த வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் வீட்டின் எஜமானர் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தார்.
    பூனை வந்த்ததும் எலிகளால் முன்பு போல தானியங்களை திருட முடிய வில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி அதை நண்பனாக்கி கொல்வதோ நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கு சமம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாத காரியம் எனவே நாம் வேறு இடம் தேடிக்கொள்வதே உத்தமம் என்றது.
      கிழட்டு எலியின் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்த மற்ற எலிகள் வீட்டை காலி செய்துவெளியேற ஆரம்பித்தன. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் வெளியேற வில்லை.பூனைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறுவதாவது. எப்படியாவது அதை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கி விட்டது.

 தளிர்
   ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்துவிட்டது. பூனையிடம் பிடிபட்ட எலி,அண்ணா பூனையாரே என்னை விட்டுவிடும் நான் உன் நண்பனாக விரும்புகிறேன். என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன் நீ என்னை பிடிப்பதால் உனக்கு என்ன லாபம் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே எஜமானர் தருகிறார் என்று ஆசை வார்த்தைகள் பல கூறியது.
      பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும்போதுமானது. எப்பொழுதும் எஜமானருக்கு துரொகமிழைக்கமாட்டேன் நான். நீ நாளை தரும் தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது சுவையான கறியை இழக்க நான் முட்டாளுமில்லை மேலும் நீ தினமும் தின்பண்டம் தருவாய் என்பது என்ன நிச்சயம்? உன்னை நம்பி விடுவது தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகிவிடும் அதற்கு நான் விரும்பவில்லை என்று எலியைக் கொன்று ருசித்தது,
நீதி: எதிரிகளிடம் நியாயம் கேட்டு பலனில்லை. எங்கள் ஊர் நூலகம்

எங்கள் ஊர் நூலகம்
எளிமை அழகு நூலகம்
தினமும் சென்று படித்திடலாம்!

 தளிர்
தெளிவைப் பெற்று வந்திடலாம்!
பாட்டுக் கதைகள் படித்திடலாம்!
நாட்டு நடப்பினையே அறிந்திடலாம்!
நல்ல நல்ல நூல்களையே
நாடி தினுமும் படித்திடலாம்!
பெரியோர் சிறியோர் எல்லோருமே
பெரிய பயனை பெற்றிடலாம்!

 உனக்குத் தெரியுமா?

பிராணிகளில் முதலைக்கு எத்தனை முறை பல் விழுந்தாலும் முளைத்துவிடும்.

1639 ஆம் ஆண்டிலிருந்து சென்னையில் ஆங்கிலேயர் குடியேறத் தொடங்கினர்.

உலகில் உள்ள நாடுகளில் மிக அதிக அளவு வெளிநாட்டினரை கொண்டுள்ள நாடு அமெரிக்கா.

தென்மேற்கு ஆப்பிரிக்காவின் புதிய பெயர் தான் நமீபியா

ஒரு கடல் மைல்(நாட்டிகல் மைல்)என்பது 1825 மீட்டர்களை குறிக்கும்

முதன் முதலில் மருத்துவமனைகள் தோன்றிய நாடு இத்தாலி.

 டிஸ்கி} இது நான் முதல் முதலில் பதிவு செய்த பாப்பாமலர் பதிவு! இதை அப்போது நிறையபேர் படித்திருக்க வாய்ப்பில்லை! இன்று வேளைப்பளு காரணமாக இதை மீள்பதிவு இடுகின்றேன்! பொருத்தருள்க! நன்றி!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! 

16 comments:

 1. ஐயோ பூனை எலி கதை சூப்பர் அண்ணா.. எனக்கு இப்பவும் இப்படி குட்டி பிள்ளை கதைகள் ரொம்ப பிடிக்கும்.. ஹி ஹி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை மகிழ்ச்சி! தொடர்ந்து வாருங்கள் நண்பரே!

   Delete
 2. கதை நன்று அன்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே!

   Delete
 3. Replies
  1. நன்றி நண்பரே!

   Delete
 4. கருத்துள்ள கதை. நன்று. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே!

   Delete
 5. அருமையான கருத்துடன் கூடிய கவிதை
  தகவல் களஞ்சியமும் பயனுள்ளதாய் இருந்தது
  மனம் கவர்ந்த பதிவுகள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது! தொடர்ந்து வர பாலோயர் ஆனதிற்கு நன்றி ஐயா!

   Delete
 6. நீதி கதை...... ம்

  தெரிந்து கொண்டேன் - பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே!

   Delete
 7. படத்தில் இருக்கும் சிறுமி யார்?

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய மகள்! வருகைக்கு நன்றி நண்பரே!

   Delete
 8. நீதிக்கதை அருமை சகோ!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...